Advertisment

போலி சாதி சான்றிதழ் சமர்பித்து சட்டம் படித்த வழக்கறிர் கைது : சென்னையில் பரபரப்பு

போலி ஜாதிச்சன்றிதழ் சமர்பித்து சட்டம் படித்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Ramesh Manikandan

வழக்கறிஞர் ரமேஷ் மணிகண்டன்

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ரியாஸ் ரஜினி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

Advertisment

இந்த புகாரில், பெருங்குடி கல்லுக்குடை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மணிகண்டன் என்பவர் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர், வழக்கறிஞர் படிப்பிற்காக ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது போன்று போலியானச் சான்றிதழைச் சமர்ப்பித்து வழக்கறிஞர் படிப்பை முடித்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். எனவே போலிச் சாதிச்சான்றிதழ் சமர்ப்பித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற ரமேஷ் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம், விசாரணை நடத்துமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதன் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வழக்கறிஞர் ரமேஷ் மணிகண்டன் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என சான்றிதழ் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அவரது சாதிச்சான்றிதழை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் வருவாய்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையின் பேரில், போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ் பெற்று அரசை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வழக்கறிஞர் தொழில் செய்து வந்த ரமேஷ் மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீஸார், வழக்கறிஞர் ரமேஷ் மணிகண்டன் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். வழக்கறிஞர் ஒருவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து சாதிச்சான்றிதழ் பெற்று வழக்கறிஞர் பட்டம் பெற்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment