Advertisment

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க 2 காரணங்கள்: வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ பேட்டி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதற்கான காரணங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Senthil Balaji appeared in Chennai court PMLA case  Tamil News

சட்டவிரோத பணப்பிரிமாற்றம் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணமோசடி செய்தது தொடர்பான வழக்கில், கடந்த 15 மாதங்களாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கியதற்கான காரணம் குறித்து வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை  தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.

இதன் காரணமாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் பலமுறை நீடிக்கப்பட்ட நிலையில், அவர் 15 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இடையில் உடல்நல பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி, பலமுறை காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இதனிடையே இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

25 லட்சம் ரூபாய்க்கு இருவர் உத்திரவாதம் வழங்க வேண்டும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்திற்கு 2 நாட்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தின் அனைத்து விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைப்பு தர வேண்டும். சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது  உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியாவார் என்று கூறப்படுகிறது

இதனிடையே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியதற்கான காரணங்கள் குறித்து பேசிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறுகையில், இந்த வழக்கு முடிய நீண்ட காலம் ஆகும். அதே சமயம், செந்தில் பாலாஜி நீண்ட நாட்களாக சிறையில் இருக்கிறார் என்ற இந்த இரு காரணங்களால் அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமினில் வெளியே வர உள்ள அவர், சட்டத்தின்படி அமைச்சராவதில் எந்த சிக்கலும் இல்லை. மத்திய அரசு தன்னுடைய செயல்பாடு தான் எல்லாற்றிற்கும் மேலானது என்று நினைக்கிறது. ஆனால் அரசியலமைப்பு சட்டம் தான் எல்லாற்றிற்கும் மேலானது என்று உச்சநீதிமன்றம், மீண்டும் மீண்டும் உறுதப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

senthil balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment