/indian-express-tamil/media/media_files/ddh0V8uvRplA2s5Q3khL.jpg)
கோவையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த மூத்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான ஞானபாரதியின் உடல் மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காகவும் ஆராய்சசிக்காகவும் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இ.எஸ்.ஐ மருத்துவர்கள் ஞானபாரதியின் உடலுக்கு மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தி பெற்றுக்கொண்டனர்.
கோவை வடவள்ளி நவாவூர் பகுதியை சேர்ந்தவர் ஞானசம்பந்தன் என்கிற ஞானபாரதி(76). கோவை நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான இவர், உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் இன்று கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
ஞானபாரதி தான் இறந்து விட்டால் உடலை மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக வழங்கிட வேண்டும் என தெரிவித்து இருந்த நிலையில் அவரது விருப்பபடி உடல் தானமாக வழங்கபட்டது. பத்திரிகையாளராக இருந்த ஞானபாரதி சட்டம் படித்து வழகறிஞரானார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவிகள் சிலர் கைது செய்யபட்டபோது அவர்களுக்காக ஆஜராகி வாதாடியவர்.
அடிதட்டு ஏழை மக்கள், தொழிலாளர்களுக்காக வழக்குகளில் ஆஜராகி அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்தவர் ஞானபாரதி. ஞானபாரதியின் உடலை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பெற்றுக்கொண்டனர். அப்போது வழகறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முழுக்கம் எழுப்பினா்.
ஞானபாரதி சிறந்த எழுத்தாளர், இடதுசாரி சிந்தனை கொண்டவர் எனவும் ஏழை எளியவர்களுக்காக கட்டணம் இன்றி வாதாடியவர் எனவும், வாழ்நாள் முழுவதும் சமூகத்திற்காக வாழ்ந்த அவர் இறந்த பின்னரும் தனது உடல் இந்த சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என நினைத்து அதையும் செயல்படுத்தி சென்று இருக்கின்றார் என மூத்த வழகறிஞர்கள் தகவல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.