New Year Wishes Update : தொற்று நோய் மற்றும் மழை வெள்ள பாதிப்புக்கு இடையே 2021-ம் ஆண்டு தனது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது இன்னும் சில மணி நேரங்களில் 2021-ம் ஆண்டை வீழ்த்தி 2022-ம் ஆண்டு பிறக்க உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக புததாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், புது வருடத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்பை மக்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்த நந்நாளில் அனைவரும் தங்களது நண்பர்களட, உறவினர்கள் என பலருக்கும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது வழக்கம். இதில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்க் பலரும் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை எழுத்து மூலமாகவும் தனது சமூகவலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகினறனர். அந்த வகையில் தற்போது அரசியல் தலைவர்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்க்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில்,
10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப்புத்தாண்டு இது என்றாலும் இனி வரும் காலங்களில் திமுகவின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் தொண்டர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
2022- புத்தாண்டு விடியலில், தமிழகத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் மாநிலமும் மக்களும், புதிய நம்பிக்கையுடன் உயர்ந்த மகிழ்ச்சி மற்றும் அதிக செழிப்புடன் வாழ்க்கை இனிதாக அமையட்டும். எல்லோரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஒருவருக்கு ஒருவர் இணக்கத்துடனும் இருக்க வேண்டும். நமது தாய்நாடான இந்தியாவை பெருமையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் நமது தனிப்பட்ட கூட்டு ஒருமைப்பாடு வலு பெறட்டும் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என்று கூறியுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம்
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச்செல்லும், என்ற நம்பிக்கையோடு வாழ்வை தொடருவோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
மனிதநேயம் தழைத்திட, எல்லாரும் எல்லாமும் பெற்றிட இல்லாமை இல்லாத நிலை உருவாகிட 2022 புத்தாண்டில் வழி பிறக்கட்டும். அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவின் புதுவடிவமான ஓமிக்ரான் பயம் நீங்கி, ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் ஒவ்வொருவரும் வாழ்ந்திட புத்தாண்டில் இறையருளை வேண்டுகிறேன்
இசையமைப்பாளர் இளையராஜா
Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021
தான் இசையமைத்த சகலகலா வல்லவன் படத்தின் இடம்பெற்ற இளமை இதே இதே என்ற பாடலை பாடியபடி இளையராஜா புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.