மகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர் மரியாதை

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை : மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் எனும் மோகன்தாசு கரம்சந்த் காந்தி, 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி படத்திற்கு தலைவர்கள் மரியாதை

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தி படத்திற்கு மரியாதை செலுத்தும் ஆளுநர் பன்வாரிலால்

மகாத்மா காந்தி படத்திற்கு மரியாதை செலுத்தும் ஆளுநர் பன்வாரிலால்

முன்னதாக அங்கு காந்தி சர்வோதயா சங்கத்தைச் சேர்ந்தோர் ராட்டை நூற்களை நூற்றும், பஜனைப் பாடல்கள் பாடியும் காந்தியின் புகழ் போற்றினர்.

மேலும் பார்க்க: மகாத்மா காந்தியின் அரிய வீடியோ தொகுப்பு

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close