scorecardresearch

திருச்சி மேம்பால பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் தற்போது அரிஸ்டோ மேம்பாலம் சென்னை அணுகு சாலை இணைப்புப் பணிகள், பஞ்சபூர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

திருச்சி மேம்பால பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

திருச்சியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் உதயசூரியன் தலைமையில் உறுப்பினர்கள் செல்வராஜ், அர்ஜுணன், சின்னப்பா, தேவராஜி மற்றும் சட்டப்பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் இன்று பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் தற்போது அரிஸ்டோ மேம்பாலம் சென்னை அணுகு சாலை இணைப்புப் பணிகள், பஞ்சபூர் பகுதியில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.  

அதேபோல் வரகனேரியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் 180 குடியிருப்புகள் கட்டும் பணி, கல்லணை, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் அடிப்படை வசதிகள், திருமண மண்டப வளாகத்தில் பூஜை சாமான்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிகளையும், யானை கொட்டகை, யானை பாகன் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை திருச்சியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் உதயசூரியன் தனது குழு உறுப்பினர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu legislative assemblies committee head inspection in trichy

Best of Express