scorecardresearch

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை; வனத்துறை அமைச்சர் கே.ராமசந்திரன்

முகாமில் 54 யானை பாகன்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 12 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாகன்கள் அனைவரும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெரும்பாலானோர் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை; வனத்துறை அமைச்சர் கே.ராமசந்திரன்

Forestry Minister K.Ramachandran Directs Forest Department to Take Covid Test in Elephants : சென்னையை அடுத்த வண்டலூர் விலங்கியல் பூங்காவில், 11 சிங்கங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், தொற்றுக்கு உள்ளான 9 வயதான நீலா எனும் பெண் சிங்கம் கடந்த வியாழன் அன்று உயிரிழந்தது.

வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருகும் நிலையில், வனத்துறை அமைச்சர் கே.ராமசந்திரன் முதுமலை புலிகள் சரணாலயம் மற்றும் டாப் சிலிப்பில் உள்ள கோழிக்கமுதி ஆணைமலை சரணாலயங்களில் உள்ள யானைகள் மற்றும் புலிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு முகாமில் 27 கும்கி யானைகளும், கோழிகமுதி யானைகள் முகாமில் 28 யானைகளும் பராமரிக்கப்பட்டு வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில், இந்த முகாம்களில் கொரோனா தடுப்பு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஒவ்வொரு யானைக்கும் தனித்தனியாக உணவளிக்கப்படுகிறது. இதனால், யானைகளுக்கு உணவு வழங்கும் நேரம் ஒரு மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதுமலலி சரணாலயத்தின் கள இயக்குநர் கே.கே கவுசல் தெரிவித்துள்ளார்.

முகாமில் 54 யானை பாகன்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 12 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாகன்கள் அனைவரும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெரும்பாலானோர் தயக்கம் காட்டி வருகிறார்கள். நாங்கள் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலையில், அவர்கள் முகாமுக்குள் நுழைவதற்கு முன்பு, உடல் வெப்பநிலை பரிசோதனையை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதல் கோழிகமுதி யானை முகாமில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைமலை புலிகள் சரணாலயத்தின் இயக்குநர் எஸ்.அரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில், முகாமில் உள்ள பாகன்கள், அவர்களின் உறவினர்கள் என 196 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களுக்கு மருந்துகளும் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்காக 52 பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu lions vandaloor covid death forestry minister k ramachandran directs elepants covid test