இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த 193 நாளாக எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இன்று 194-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.75-க்கும், டீசல் விலை ரூ92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,194 மில்லியன் கனஅடியாக உள்ளது . 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 62 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 300 மில்லியன் கனஅடியாக உள்ளது
இந்தியா – வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி
இந்தியாவல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போடடிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதிலவ் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையல், 2-வது போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது.
-
Sep 28, 2024 05:14 ISTமக்களின் ஆதரவை பெற்றால் தான் ஆட்சிக்கு வர முடியும் - திருமாவளவன்
.சி.க தலைவர் திருமாவளவன்: “ஆட்சி அதிகாரத்தை புரிந்துகொள்ள ஒரு அரசியல் புரிதல் வேண்டும், மக்களாட்சி பற்றிய புரிதல் நமக்கு தேவை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் என இலகுவாக நினைக்கிறார்கள். கட்சிக்காரர்கள் கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வார்கள், ஆனால், கட்சி ஒரு வரம்புக்கு உட்பட்டது. ஒட்டுமொத்த வாக்காளர்களும் ஒரு வரம்புக்குள் இருப்பதில்லை; மக்களின் நல் ஆதரவைப் பெற்றால்தான் ஆட்சிக்கு வர முடியும்; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் என்பதால் யாரும் அவரை ஆட்சியில் அமர வைக்கவில்லை. பெரியாரின் கொள்கைகளை பிடிப்பது ஒரு போராட்டம், அதனி கடைபிடிப்பது ஒரு யுத்தம், மக்களிடையே அதனை கொண்டு செல்வது பெரிய விஷயம், இது ஒரு கொள்கை போராட்டத்தின் விளைச்சல், வெறும் சூதாட்டம் அல்ல” என்று பேசியுள்ளார்.
-
Sep 27, 2024 23:16 ISTபாப்பம்மாள் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்
பத்மஸ்ரீ விருதுபெற்ற பாப்பம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “தனது இறுதிமூச்சு வரை வயலில் இறங்கி வேளாண் பணிகளை செய்து வந்தவர் பாப்பம்மாள். பாப்பம்மாளுடன் உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் இருக்கும். என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். பாப்பம்மாளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இரங்கல்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Sep 27, 2024 21:32 ISTபத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் மரணம்
பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 108. வயது முதிவு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாப்பம்மாள் காலமானார். 2021-ம் அண்டு, பாப்பம்மாள் இயற்கை விவசாய பணிக்காக மத்திய அரசின் மத்மஸ்ரீ விருது பெற்றார்.
-
Sep 27, 2024 20:23 ISTசென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் செந்தில் பாலாஜி
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்துப் பெற்றார். 471 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, செந்தில் பாலாஜி வியாழக்கிழமை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
-
Sep 27, 2024 20:03 ISTடெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் ஸ்டாலின்
டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பினார். அவரை அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். நேற்று சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றனர்.
-
Sep 27, 2024 19:03 ISTதிருப்பதி வருகையை ரத்து செய்த ஜெகன்; 'மக்களுக்கு என் மதம் தெரியாதா? இப்போது ஏன் கேட்கப்படுகிறது?
முதல்வர் நாயுடுவையும், தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் மதத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்குவதாக அவர் சாடினார்.
“நான் என் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பைபிளைப் படிக்கலாம், ஆனால், வெளியே நான் இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்களை மதிக்கிறேன். மக்களுக்கு என் மதம் தெரியாதா? முதல்வராக இருந்த நான், வெங்கடேசப் பெருமாலுக்கு புனித வஸ்திரங்களை சமர்ப்பித்துள்ளேன். என் மதம் மற்றும் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கவில்லை. என்னை கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று தெலுங்கு தேசம் கட்சி மற்றும் கூட்டணி தலைவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது?” என்று ஜெகன் மோகன் கூறினார்.
-
Sep 27, 2024 18:38 ISTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, நேற்று (செப்டம்பர் 26) ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
-
Sep 27, 2024 18:26 ISTமனைவிக்கு வீட்டுமனை ஒதுக்கியதாக சித்தராமையா மீது புகார்; எஃப்.ஐ.ஆர் பதிவு
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு முறைகேடாக வீட்டுமனைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் எப்.ஐ.ஆர். பதிந்துள்ளனர்
-
Sep 27, 2024 18:07 ISTடான் பிராட்மேன் சாதனையை சமன் செய்த இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ்
அதிரடியான பேட்டிங்கால் உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய லெஜண்ட் வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.
-
Sep 27, 2024 17:46 ISTசொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்வு. மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது. சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
-
Sep 27, 2024 17:27 ISTநாமக்கல் கண்டெய்னர் விவகாரம்; காயமடைந்த கொள்ளையர் கோவை மருத்துவமனைக்கு மாற்றம்
கேரள மாநிலம் திருச்சூர் ஏ.டி.எம் கொள்ளை மற்றும் நாமக்கல் கண்டெய்னர் விவகாரத்தில் காயமடைந்த அஸ்ரலியை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்
-
Sep 27, 2024 17:21 ISTசென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் படிப்பிற்கு அரியர் தேர்வெழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அக்டோபர் 15ம் தேதிக்கு முன்பாக கூடுதல் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம். தவறுபவர்கள் அக்டோபர் 25ம் தேதி வரை அபராதத்துடன் விண்ணப்பிக்க நேரிடும்.
-
Sep 27, 2024 16:57 ISTதிருப்பதி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு - ஜெகன் மோகன்
திருப்பதி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் பரபரப்பு தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகள் முதலமைச்சராக ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாத்திய நான், எதற்காக கையெழுத்திட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டும். என்னை கோயிலுக்கு செல்ல விடாமல் தடுக்கும் சதி இது. பட்டியலினத்தவர் கூட கோயிலுக்கு செல்லக் கூடாது என நாளை தீண்டாமையை மீண்டும் கொண்டு வருவார்கள் சந்திரபாபு நாயுடு ஆட்சியில்14 முறையும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 முறை நெய் தரம் இல்லை என டேங்கர்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இது வழக்கமாக தேவஸ்தானத்தில் உள்ள நடைமுறைதான். தற்பொழுது இதற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள் என ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்
-
Sep 27, 2024 16:21 ISTகொள்ளையர்கள் பிடிப்பட்டது எப்படி? சேலம் சரக டி.ஐ.ஜி உமா விளக்கம்
பிடிபட்ட அனைவரும் ஹரியானைவை சேர்ந்தவர்கள் கேரளாவின் திருச்சூரில் கூகுள் மேப் உதவியோடு காரில் சென்று கொள்ளையடித்துவிட்டு, கன்டெய்னர் மூலம் தப்பிக்க முயன்றபோது பிடிபட்டுள்ளனர். கண்டெய்னர் பல வாகனங்களை இடித்துவிட்டு வேகமாக சென்றது. சன்னியாசிப்பட்டி அருகே போலீசார் கண்டெய்னரை மடக்கி பிடித்தனர்.
கண்டெய்னருக்குள் சத்தம் கேட்டு திறந்தப்போது, அதற்குள் இருந்த இரண்டு பேர் தப்பி ஓடினார். இருவரையும் துரத்திச் சென்றபோது, ஜுமான் என்பவர் போலீசாரை தாக்க முயன்ற நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தப்பிச்சென்ற அசார் அலியை காலில் சுட்டுப் பிடித்தோம். என சேலம் சரக டி.ஐ.ஜி உமா தெரிவித்துள்ளார்.
-
Sep 27, 2024 15:47 ISTகொள்ளையர்களிடம் கிருஷ்ணகிரி எஸ்.பி. விசாரணை
நாமக்கல்லில் போலீசாரிடம் பிடிபட்ட வடமாநில கொள்ளையர்களிடம் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை விசாரணை நடத்தினார். தமிழகத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் தொடர்பாகவும் கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-
Sep 27, 2024 15:39 ISTஏ.டி.எம். கொள்ளையர் மீது என்கவுன்ட்டர் - ஒருவர் மரணம்
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி மடக்கிப் பிடித்த போலீசார் மீது பயங்கர தாக்குதல், தற்காப்புக்காக நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் வடமாநில கொள்ளையர் உயிரிழந்தார்.
-
Sep 27, 2024 15:27 IST2வது டெஸ்ட் போட்டி; முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து
இந்தியா, வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது
-
Sep 27, 2024 14:51 ISTநிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் - மகாவிஷ்ணு
தனது பேச்சு மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைதான மகாவிஷ்ணு ஜாமீன் கோரிய மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Sep 27, 2024 14:46 IST21 ஆண்டுகள் நிறைவடைந்த 'வின்னர்'
சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலு, கிரண், ரியாஸ் கான் உள்ளிட்டோர் நடித்த 'வின்னர்' திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்தது.
-
Sep 27, 2024 14:01 ISTசோனியாவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மக்களவை தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்
-
Sep 27, 2024 13:48 ISTபிரதமருடன் சந்திப்பு - ஸ்டாலின் விளக்கம்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "பிரதமர் மோடியிடம் முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு நிதி வழங்காததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல். நிதி வழங்கப்படாததால் மெட்ரோ திட்டம் தொய்வடைந்துள்ளது. மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். மீனவர்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது." என்று கூறியுள்ளார்.
-
Sep 27, 2024 13:13 IST'மத்திய அரசு நிதியை விடுவிக்க கோரிக்கை' - மோடியை சந்தித்த ஸ்டாலின் பேட்டி
"பிரதமர் உடனான சந்திப்பு இனிமையாக இருந்தது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கான மத்திய அரசு நிதியை விடுவிக்க கோரிக்கை” என்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Sep 27, 2024 12:33 ISTகேரளாவை உலுக்கிய கொள்ளை சம்பவம்: தமிழ்நாடு போலீசார் அதிரடி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ராஜஸ்தான் கொள்ளைக்கும்பலை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பிடித்துள்ளனர். கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே இருந்த கொள்ளையர்கள், போலீசாரை நோக்கி ஆயுதங்களால் தாக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட, ஒருவர் காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி எனவும், மேலும் சிலர் பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை. கண்டெய்னர் உள்ள பணம், கார், ஏடிஎம் இயந்திரம் இருந்துள்ளன
கொள்ளையர்கள் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல். தகவல் அறிந்து கேரள தனிப்படை போலீசார் நாமக்கல் விரைந்துள்ளனர். துப்பாக்கிசூடு நடந்த இடத்தில் சேலம் டி.ஐ.ஜி., நாமக்கல் எஸ்.பி. ஆய்வு செய்து வருகிறார்.
-
Sep 27, 2024 12:28 ISTநாமக்கல் - கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்து தப்பிய கும்பல், நாமக்கல் அருகே பிடிபட்டது. கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளைக்கும்பல் காவல் ஆய்வாளரை தாக்கியதால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் கொள்ளைக் கும்பலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் பிடிபட்டுள்ளனர்.
-
Sep 27, 2024 12:14 ISTஜெகன்மோகனை குறைகூறாத பவன் கல்யாண்
"திருப்பதி லட்டு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை பொறுப்பாக்க விரும்பவில்லை. திருப்பதி தேவஸ்தானமே இதற்கு பொறுப்பு" என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
-
Sep 27, 2024 11:28 ISTசென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவி ஏற்பு
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவி ஏற்றார். அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
-
Sep 27, 2024 11:09 ISTடெல்லியில் பிரதமர் மோடி உடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கும்படி வலியுறுத்தல்
-
Sep 27, 2024 11:08 ISTவிபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி: துரத்தி பிடித்த போலீஸ்
ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் அருகே பரபரப்புகேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரிவரும் வழியெல்லாம் விபத்தை ஏற்பத்திக்கொண்டு நிற்காமல் செல்ல போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டி நிறுத்தினர். லாரியின் உள்ளே ஆயுதங்களுடன் சிலர் இருப்பதாக தகவல் வெளியான நிலையில்போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Sep 27, 2024 10:28 ISTகோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம்: முதற்கட்ட பணிகள் தொடக்கம்
கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
-
Sep 27, 2024 10:26 ISTடெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்
-
Sep 27, 2024 10:14 ISTமினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணியாகி 4 ஆக உயர்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஸ்ரீதர், நிதிஷ்குமார், வாசு மற்றும் சதீஸ் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக போலீசார் முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளது.
-
Sep 27, 2024 10:07 ISTபுதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 40 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
Sep 27, 2024 09:38 ISTஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மினிபஸ் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் மரணம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மினிபஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில், 2 பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் மரணமடைந்தனர். 10-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Sep 27, 2024 09:35 ISTஅடுத்தடுத்து 3 ஏடிஎம்களில் கொள்ளை: கேரளாவில் பதற்றம்
கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து களில் ரூலட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காரில் வந்த கொள்ளையர்கள் எந்திரங்களையும் கேஸ் கட்டிங் மூலம் வெட்டி எடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதிகாலை மணி இடைவெளியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
-
Sep 27, 2024 09:33 ISTஉயிர் தப்பியது அதிசயம்தான்: ட்ரம்ப் மனைவி
தமது கணவர் மீது இரண்டு முறை நடத்தப்பட்ட தாக்குதல்களில் அவர் உயிர் தப்பியது அதிசயம்தான் என ட்ரம்ப் மனைவி மெலனியா ட்ரம்ப் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
-
Sep 27, 2024 09:32 ISTஇத்தாலி வீரர் சின்னர் வெற்றி
பெய்ஜிங் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இத்தாலி வீரர் சின்னர் சிலி வீரர் நிக்கோலஸ் ஜாரியை நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
-
Sep 27, 2024 08:30 ISTசென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,போதைப்பொருள் கடத்திய இருவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Sep 27, 2024 08:28 ISTகான்பூரில் கனமழை பெய்ய 93% வாய்ப்பு: டெஸ்ட் போட்டிக்கு சிக்கல்
இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் கான்பூரில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முதல் நாளான இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய 93% வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Sep 27, 2024 08:26 ISTதமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Sep 27, 2024 07:51 ISTயாத்திரை செல்லும் அரசியல் தலைவர்கள்: திருப்பதியில் 30வது பிரிவு அமல்
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தற்போதைய துணை முதல்வர் பவன்கல்யாண் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் யாத்திரை செல்ல உள்ளதால், பாதுகாப்பு கருதி திருப்பதி மாவட்டம் முழுவதும், 30-வது பிரிவு அமல்படுத்தப்பட்டுள்ளது, அக்டோபர் 24வரை இந்த சட்டம் அமலில் இருக்கும். இந்த நாட்களில், கூட்டம் மற்றும் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Sep 27, 2024 07:48 ISTதமிழ்நாடு முழுவதும் பழுதடைந்துள்ள மின் மீட்டர்களை மாற்றியமைக்கும் பணி தீவிரம்
தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்துள்ள 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றியமைக்கும் பணியில், மின்வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 29,217 மீட்டர்களும், கோவையில், 6,606 மீட்டர்களும் பழுதாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
Sep 27, 2024 07:46 ISTடிசம்பரில் குருப்2 மற்றும் குருப்2ஏ முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
குருப் 2 மற்றும் குருப்2ஏ முடிவுகள், வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Sep 27, 2024 07:43 ISTடெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.