தூத்துக்குடி மாவட்டத்தில் மினி டைடல் பார்க்கை இன்று திறந்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் விரிவாக்கத்தையும் தொடங்கி வைக்கிறார். 4.16 ஏக்கர் பரப்பில் ₹30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது
-
Dec 30, 2024 04:59 IST
திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 7 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி-யாகவும், ஏ.டி.ஜி.பி வெங்கட்ராமனுக்கு நிர்வாகப் பிரிவு சிறப்பு டி.ஜி.பி-யாகவும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Dec 29, 2024 20:21 IST
கன்னியாகுமரி ருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஜனவரி 1-ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31-ம் தேதி நடைபெறும். டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
Dec 29, 2024 19:54 IST
தூத்துக்குடிக்கு அடுத்தகட்ட வளர்ச்சியைத் தரும் அறிவிப்புகள் இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாகும் - டி.ஆர்.பி. ராஜா
தென் தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தபின் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேட்டி: “தூத்துக்குடிக்கு அடுத்தகட்ட வளர்ச்சியைத் தரும் அறிவிப்புகள் இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாகும். பிரகாசமான வளர்ச்சி இருக்கிறது” என்று கூறினார்.
-
Dec 29, 2024 18:29 IST
தூத்துக்குடியில் தி.மு.க நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
தூத்துக்குடி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தென் மாவட்ட தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
-
Dec 29, 2024 17:38 IST
மினி டைடல் பூங்காவை திறந்து வைத்த ஸ்டாலின்
தூத்துக்குடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
Dec 29, 2024 17:10 IST
கார் விபத்தில் 2 பேர் படுகாயம்
ஊட்டி அடுத்த மஞ்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.
-
Dec 29, 2024 16:05 IST
மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு
சிதம்பரம் அருகே இளநீர் பறிக்க மரத்தில் ஏறிய நபர், மின் கம்பியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
Dec 29, 2024 15:38 IST
கண்ணாடி பாலம் பணிகள் நிறைவு
கன்னியாகுமரியில், கண்ணாடி பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
-
Dec 29, 2024 15:17 IST
தூத்துக்குடி வந்த ஸ்டாலின் - எம்.பி. கனிமொழி வரவேற்பு
தூத்துக்குடி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எம்.பி. கனிமொழி வரவேற்றார்
-
Dec 29, 2024 13:15 IST
சிதம்பரம் கோவிலில் சைவ - வைணவ ஒற்றுமைக்கு சிறப்பு வழிபாடு நடத்த தீட்சிதர்கள் எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சைவ - வைணவ ஒற்றுமை வலுப்பெற வேண்டி 108 விளக்கேற்றி வழிபாடு செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே, அங்குள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும், புதிய கொடிமரம் மாற்ற தீட்சிதர்கள் தடை கோரிய வழக்கு சிதம்பரம் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
-
Dec 29, 2024 13:13 IST
தைலாபுரத்தில் குவிந்த பா.ம.க முக்கிய நிர்வாகிகள்!
விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு கட்சியின் கெளரவ தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பசுமைத் தாயகம் அருள் ஆகியோர் வந்துள்ள நிலையில், பனையூரில் இருந்து அன்புமணி ராமதாஸ் புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார்இ
-
Dec 29, 2024 13:12 IST
தாய் யானை மரணம்: குட்டி யானையை வேறு கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை போராட்டம்!
கோவை பன்னிமடை வனப்பகுதியில் தாய் யானை உயிரிழந்ததால், ஒரு மாத குட்டிய யானை தவித்து வரும் நிலையில், அதனை வேறு கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையைினர் ஒருவாரமாக போராடி வருகின்றனர். இநத முயற்சி தோல்வியடைந்ததால், குட்டி யானையை முதுமலை அல்லது டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை.
-
Dec 29, 2024 12:45 IST
பா.ம.க.வில், நேற்றைய பிரச்சினை சரியாகிவிடும்: சீமான் கருத்து
திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுகளுக்கு அளித்த பேட்டியில், 35 வருட கட்சியான பா.ம.க.வில், நேற்றைய பிரச்சினை சரியாகிவிடும், வார்த்தை மோதல் குறித்து நான் கருத்து கூற முடியாது. அன்புமணிக்கு கூட தலைவர் பதவியை நம்பிக்கையின் அடிப்படையில் தான் ராமதாஸ் வழங்கி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
-
Dec 29, 2024 11:52 IST
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!
விடுமுறை தினத்தை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே அதிகளவிலான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
-
Dec 29, 2024 11:17 IST
ஆஞ்சநேயர் ஜெயந்தி: நாமக்கல் விஷ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்!
நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி, நாமக்கல் நகரில் உள்ள 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில், நெரிசலின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலையும் மூலவர் சிலைக்கு சாற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது
-
Dec 29, 2024 10:33 IST
கோவையில் 5-வது வாரமாக களைக்கட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடர்ந்து 5வது வாரமாக களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில், இடம்பெற்ற டி.ஜே இசைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடனமாடி மகிழ்ந்தனர்.
-
Dec 29, 2024 10:15 IST
விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்
சபரிமலை சீசன் மற்றும் அரையாண்டு விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். அம்மன் கோயில் கிழக்கு வாசல், சன்ரைஸ் பாயின்ட், முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நேரம் காத்திருந்து சூரிய உதயத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
-
Dec 29, 2024 10:14 IST
மோதலுக்கு பின் ராமதாஸை சந்திக்கும் அன்புமணி
பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில், அன்புமணி டாக்டர் ராமதாஸை காலை 11 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Dec 29, 2024 10:13 IST
சேலத்தில் சுங்கச்சாவடியில் பேருந்து பயணிகளுடன் மோதல்: 3 போலீசார் சஸ்பெண்ட்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காரைக்காடு சுங்கச்சாவடியில் உத்தரப்பிரதேச பேருந்தை சோதனையிடும் போது போலீசாருக்கும் பேருந்தில் இருந்தவர்களுக்கும் நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக சோதனைச் சாவடியில் பணியில் இருந்த 3 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.