Advertisment

Tamil Breaking News Highlights: ஹரியானா தேர்தல்: வாக்குப் பதிவு தொடக்கம்; மொத்தம் 1031 வேட்பாளர்கள் போட்டி

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
election evm preparation

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Advertisment

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 200 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. தொடர்ந்து 201-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல்’ ரூ100.75 –க்கும், டீசல், ரூ92.34-க்கும், கேஸ் ரூ88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீரிருப்பு நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2129 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 62 மில்லியன் கன அடியாக உள்ளத. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 295 மில்லியன் கன அடியாக உள்ளது.

  • Oct 04, 2024 21:35 IST
    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் தட்டுப்பாடு - இ.பி.எஸ் கண்டனம்

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கான DPT (Diphtheria Pertusis Tetanus) தடுப்பூசி கடந்த 2 மாதமாக தட்டுப்பாடு என செய்திகள் வருகின்றன. பிஞ்சுக் குழந்தைகளின் நலத்தோடு விளையாடுவதைக் கண்டிக்கிறேன். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை தேவை” என்று வலியுறுத்தியுள்ளார்.



  • Oct 04, 2024 20:35 IST
    வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறை; த.வெ.க மாநாட்டிற்கு புதிய சிக்கல்?

    வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறையால், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 3 லட்சம் பேர் வருவார்கள் என காவல்துறை கணிப்பு, வாகன நிறுத்தத்திற்கு சுமார் 150 ஏக்கர் நிலம் தேவை எனவும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. பார்க்கிங்-க்கு 45 ஏக்கர் மட்டுமே தேர்வு செய்துள்ள நிலையில், கூடுதல் இடங்களை பெற த.வெ.க-வுக்கு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Oct 04, 2024 20:32 IST
    அக்டோபர் 15 முதல் ரஜினிகாந்த் சார் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் -  லோகேஷ் கனகராஜ் பேட்டி

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி: “மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை பண்ண வேண்டியது இருக்குனு 40 நாட்கள் முன்னாடியே ரஜினி சார் எங்க கிட்ட சொல்லிட்டாரு. அக்டோபர் 15 முதல் ரஜினிகாந்த் சார் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்” என்று கூறினார்.



  • Oct 04, 2024 19:54 IST
    சத்தீஸ்கர் வரலாற்றிலேயே மிகப்பெரிய என்கவுண்டர்; 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

    சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்கவுன்டரில் 30-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.



  • Oct 04, 2024 19:18 IST
    இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக உட்ன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

    அரசுமுறை பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக-வை சந்தித்தார்.



  • Oct 04, 2024 18:32 IST
    அ.தி.மு.க-வின் 53-வது ஆண்டு தொடக்க விழா: அக்.17 முதல் பொதுக்கூட்டம் - இ.பி.எஸ் அறிவிப்பு

    அ.தி.மு.க-வின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



  • Oct 04, 2024 18:16 IST
    தமிழகத்தில் கனமழை

    தமிழகத்தில் மதுரை,நாகை,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 



  • Oct 04, 2024 17:56 IST
    முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - பிரமாண்ட தொடக்க விழா

    சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இன்று முதல் வரும் 24ம் தேதி வரை, பல்வேறு மாவட்டங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர் பாபு, ரகுபதி, சி.வி. கணேசன், மூர்த்தி, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



  • Oct 04, 2024 17:56 IST
    மதுரையில் பலத்த காற்றுடன் கனமழை 

    மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கோரிப்பாளையம், தெப்பக்குளம், திருமங்கலம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது



  • Oct 04, 2024 17:46 IST
    கல்லூரி மாணவர்களிடையே கடும் மோதல்

    மதுரவாயில் அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவரை பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து கொலைவெறியுடன் தாக்கும் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



  • Oct 04, 2024 17:42 IST
     எஸ்.சி.ஓ மாநாடு - அக்.15, 16-ல் பாகிஸ்தான் செல்லும் ஜெய்சங்கர் 

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அக்டோபர் 15-16 தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்கிறார்.



  • Oct 04, 2024 17:10 IST
    மதுரையில் கனமழை

    மதுரை அண்ணா நகர், கோரிப்பாளையம், கோ.புதூர், கரும்பாலை, தெப்பக்குளம், ஆத்திகுளம், மாட்டுத்தாவணி உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 



  • Oct 04, 2024 17:06 IST
    அ.தி.மு.க ஆட்சியில்தான் அதிக டெங்கு மரணம்': அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் 

    "கடந்த அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத அளவுக்கான டெங்கு மரணங்கள் ஏற்பட்டன" என்று  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். 



  • Oct 04, 2024 16:39 IST
    'நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி': அறிக்கை வெளியிட்ட ரஜினி 

    'தன் உடல் நலம் குறித்து தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். 



  • Oct 04, 2024 16:32 IST
    ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ரஜினி 

    ரஜினிகாந்த் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் 



  • Oct 04, 2024 16:19 IST
    திருமாவளவன் மனு தள்ளுபடி

    அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 'பட்டியலின, பழங்குடியினருக்கு மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு அளிக்க முடியும் என்ற தீர்ப்பில் எவ்வித தவறும் இல்லை. தீர்ப்பை  மறுஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை' என்று கூறி வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்



  • Oct 04, 2024 16:05 IST
    23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மாலை 5.30 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

    அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, ஈரோடு, கோவை, தேனி,திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது. 



  • Oct 04, 2024 15:53 IST
    'இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல் நியாயமானது' -ஈரானின் உச்ச தலைவர் கமேனி பேச்சு 

    மேற்கு ஆசியாவில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை  மத்திய தெஹ்ரானில் தொழுகைக்கு தலைமை தாங்கிய ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஐந்து ஆண்டுகளில் தனது முதல் வெள்ளிக்கிழமை பிரசங்கத்தில் ஹெஸ்புல்லா மற்றும் ஹமாத் மீது இஸ்ரேல் "வெற்றி பெறாது" என்றும், "ஒவ்வொரு நாட்டிற்கும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு" என்றும் கூறியுள்ளார். மேலும், இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல் நியாயமானது என்றும் அவர் கூறியுள்ளார். 

     



  • Oct 04, 2024 14:57 IST
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Oct 04, 2024 14:49 IST
    மின்கட்டணம் செலுத்தும் முறை; தமிழக மின் வாரியம் புதிய நிபந்தனை

    இந்த மாதம் முதல் 4000 ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை நேரடி பணமாக செலுத்த முடியாது ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வரும் மாதங்களில் நேரடியாக செலுத்தும் தொகை படிப்படியாக குறைக்கப்படும். ரூ.1000 அல்லது அதற்கு மேலான மின் கட்டணங்களை ஆன்லைனில் மூலமே செலுத்த வேண்டும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது



  • Oct 04, 2024 14:22 IST
    திருப்பதி கோயில் தங்கக்கொடி மரம் சேதம்; தேவஸ்தான நிர்வாகம் அதிர்ச்சி

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மாலை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க இருந்த நிலையில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்துள்ளது. தங்கக்கொடி மரம் சேதம் அடைந்ததை பார்த்து தேவஸ்தான நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது



  • Oct 04, 2024 13:49 IST
    இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை

    இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை ஒட்டி சென்னை மெரினாவில் வான் சாகசம் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை தற்போது நடைபெற்று வருகிறது. இதனை திரளானோர் கண்டுகளித்து வருகின்றனர்



  • Oct 04, 2024 13:44 IST
    மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

    மத்திய பிரதேசம் மாநிலம் ரத்லம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலில் இருந்த டேங்கரில் இருந்து கொட்டிய டீசலை மக்கள் அள்ளிச்சென்றனர். டீசல் கொட்டிய இடத்தில் சிகரெட், நெருப்பு பற்ற வைப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரயில்வே சார்பில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 



  • Oct 04, 2024 13:16 IST
    பவன் கல்யாண் பேச்சு; 'வெயிட் அன்ட் சி' - உதயநிதி ஸ்டாலின் பதில்

    சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். சனாதனத்தை வைரஸ் என்று தமிழகத்தைச் சேர்ந்தவர் பேசுகிறார் என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறி இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட போது 'வெயிட் அன்ட் சி' என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்



  • Oct 04, 2024 13:13 IST
    மற்ற கட்சிகளையும், தொண்டர்களையும் விஜய் மதிக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

    மற்ற கட்சிகளையும், தொண்டர்களையும் விஜய் மதிக்க வேண்டும். தி.மு.க.வை பின்பற்றியே விஜய் கட்சியின் செயல்பாடுகள் உள்ளன. நேரம் காலம் பார்த்தே அனைத்து பணிகளையும் த.வெ.க.வினர் செய்கிறார்கள். திராவிட மாடல் போல குட்டி திராவிட மாடல் உருவாகிறதா? என்று தெரியவில்லை. மாநாடை சிறப்பாக நடத்துவார்கள். கட்சி நடத்துவதை தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்



  • Oct 04, 2024 12:39 IST
    கூல் லிப், குட்கா, புகையிலை பயன்பாடுகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் - ஐகோர்ட்

    கூல் லிப், குட்கா, புகையிலை பயன்பாடுகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும். கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக்கூடாது? இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய வகையில் கூல் லிப், குட்கா பொருட்கள் உள்ளன. கூல் லிப், குட்கா பொருட்களுக்கு நிரந்தர தடை விதிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு, வழிகாட்டுதல்களை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது



  • Oct 04, 2024 12:34 IST
    திருப்பதி லட்டில் கலப்பட நெய் விவகாரம்: புதிய விசாரணை குழு நியமனம்

    திருப்பதி லட்டில் கலப்பட நெய் தொடர்பான விவாகரத்தில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம், புதிய சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளது, இந்த குழுவில் 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திரபிரதேச காவல்துறை அதிகாரிகள், ஆகியோருடன் ஃபாஸி குழுவின் மூத்த அதிகாரி ஆகியோர் இணைந்துள்ளனர். சிபிஐ இயக்குனரின் மேற்பார்வையில் இந்த குழு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 04, 2024 11:45 IST
    எதோ பெயருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நிரூபிப்போம்: விஜய்

    எதோ பெயருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நிரூபிப்போம். இவர்களுக்கு அரசியல் என்றால், மாநாடு என்றால் என்ன என்று தெரியுமா என்று கேள்வி கேட்கிறார்கள். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டும்போது அவர்களுக்கு புரியும். என்று த.வெ.க தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.



  • Oct 04, 2024 11:37 IST
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பாடகி பி.சுசீலா சந்திப்பு

    தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையை பாராட்டி, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு தமிழ்நாடு அரசின் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



  • Oct 04, 2024 10:38 IST
    உச்சம் தொட்ட தங்கம் விலை

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ80 உயர்ந்து உரு சவரன், ரூ56,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ7120-ஆகவும், வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ2 உயர்ந்து ரூ103-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



  • Oct 04, 2024 10:34 IST
    மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ண தொடங்கிவிட்டது: த.வெ.க தலைவர் விஜய்

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு வருமாறு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ள கட்சியின் தலைவர் விஜய்,  மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ண தொடங்கிவிட்டதாக கடித்தில் குறிப்பிட்டுள்ளார். 



  • Oct 04, 2024 10:02 IST
    இரு மடங்காக உயர்ந்த தக்காளி விலை

    சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில், தக்காளி விலை இரு மடங்காக உயர்ந்துள்ள நிலையில், கடந்த வாரம் ரூ35-க்கு விற்பனை செய்யப்பட்ட தககாளி இன்று ரூ70-ஆக உயர்ந்துள்ளது,.



  • Oct 04, 2024 09:59 IST
    திருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக தொடங்கிய நவராத்திரி விழா

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய நவராத்திரி விழா. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர்களின் கச்சேரியை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் ரசித்தனர்.



  • Oct 04, 2024 09:59 IST
    மகனை கொலை செய்து கைதான முன்னாள் வேளான் அலுவலர் மரணம்

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் அலுவலரான ராமசாமி (74), மதுபோதையில் தொடர்ந்து தொல்லை செய்து வந்த தனது மகனை கடந்த 1ம் தேதி கொலை செய்தார். இந்த வழக்கில் கைதான ராமசாமி உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்



  • Oct 04, 2024 09:03 IST
    போதிய பயணிகள் இல்லை: சென்னையில் 10 விமான சேவைகள் இன்று ரத்து

    போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் 10 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இலங்கை, பெங்களூர், மும்பை. அந்தமான், ஆகிய இடங்களில் இருந்து விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து இந்த இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துள்ள பயணிகளின் டிக்கெட்டுகள் வேறு விமான நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்.



  • Oct 04, 2024 09:01 IST
    கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் கோளாறு சரி செய்யப்பட்டதாக தகவல்

    நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில்கடந்த ம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.தற்போது மெகாவாட் மின் உற்பத்தி நடக்கும் நிலையில்ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான மெகாவாட் மின் உற்பத்தி எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது உலையில் மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது



  • Oct 04, 2024 08:59 IST
    கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில் பிரமோற்சவ கொடியேற்றம்

    தமிழ்நாட்டின் திருப்பதி என அழைக்கப்படும் கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில் வெங்கடாஜலபதி ஆலயத்தில் பிரமோற்சவ கொடியேற்றம் விழாவில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நாட்கள் நடக்கும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக வது நாளில் கோ ரதத்தில் சாமி புறப்பாடு நடைபெறும்



  • Oct 04, 2024 08:58 IST
    மகளிர் டிஉலககோப்பை: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்

    மகளிர் டிஉலககோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெற்றியுடன் தொடங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



  • Oct 04, 2024 07:55 IST
    மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மேலும் 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, அசாமி, பாலி மற்றும் பிரக்ரித் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஒடியா உள்ளிட்ட மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியது குறிப்பிடத்தக்கது



  • Oct 04, 2024 07:53 IST
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பரில் சிறப்பு முகாம்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவ.09, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம்அனுப்பியுள்ளார்.ஜனவரி அன்று வயதைப் பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்தேவையான படிவங்களைத் தயாராக வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Oct 04, 2024 07:49 IST
    பருவமழையை எதிர்கொள்ள தயாரான சென்னை

    சென்னையில் 25 இடங்களில் மெட்ரோ பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை கொடுத்துள்ளது. பருவமழை தொடங்க உள்ளதால் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.



  • Oct 04, 2024 07:46 IST
    கொலை வழக்கில் தொடர்புடைய நபர் மீது காவலதுறை துப்பாக்கிச்சூடு

    திண்டுக்கல் பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்ட் சச்சின் என்பவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை காட்டுவதற்காக அழைத்து சென்றபோது, காவலர் அருணை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். காவலர் அருண் மற்றும் ரிச்சர்ட் இருவருமே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • Oct 04, 2024 07:44 IST
    பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். கொள்கை: சி.பி.எம். கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

    பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் வரும் 7 - 11ம் தேதி வரை 'ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத்' போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிஞ்சு உள்ளத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரவலாக்க, முன்னெடுக்கும் முயற்சிகளை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பா.ஜக. அரசு தன்னுடைய ஆபத்தான கொள்கை திட்டங்களை கொண்டு செல்ல, பள்ளிகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான மாணவர் விரோதபோக்கு என்று கூறியுள்ளார்.



  • Oct 04, 2024 07:39 IST
    முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்

    முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. துணை முதல்வரும் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். 



Tamilnadu Live News Udpate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment