தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்
ஆன்லைன் வகுப்புகளை விரைவில் துவக்க உத்தரவு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், புதிய கல்வி ஆண்டுக்கான புத்தகங்களை வழங்கி, வகுப்புகளை ஆன்லைன் வழியில், விரைவில் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேகதாது திட்டத்தை கைவிட ஸ்டாலின் வலியுறுத்தல்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
போலீசாருக்கு ஊக்கத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு
கொரோனா காலகட்டத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க சுமார் 59 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு தலா ரூ.5000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
புதிய வகை கொரோனா 29 நாடுகளுக்கு பரவியுள்ளது
புதிய வகை உருமாற்றம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் லத்தீன், அமெரிக்கா, அர்ஜண்டினா, சிலி உள்ளிட்ட 29 நாடுகளுக்கு பரவியுள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டிவிட்டருக்கு நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரிக்கை
டிவிட்டர் நிறுவனம் இந்தியாவின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,183 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்று பாதிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் 180 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் திருவனந்தபுரம் அரசு மாடல் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கி உள்ள புத்தக வாசிப்பு திருவிழா, ஜூலை 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு, புத்தக வாசிப்புத் திருவிழாவை ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார்.
பின்னர், இதுகுறித்து பேசிய முதலமைச்சர், கொரோனா காலத்தில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்க, இது உதவும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில், மாடல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் போன் விநியோகத்தை அமைச்சர் பிந்து தொடங்கி வைத்தார்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி செல்லும் வழியில், வேர்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரால் பங்கில், ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் ஒரு பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன பெரும் சிறமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வால் ஆட்ரோ வாடகை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டம் குடியேத்தம் மோர்தானா அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் 19 ஏரிக்கள் நிரம்பி 8367 ஏக்கர் நிலஙகளும், 49 கிராமங்களும் பயன்பெறும்.
எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றது போல தற்போது அதிமுகவில் இரட்டை தலைமையில் வெற்றிநடை போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது திமுக நீட் தேர்வை தடுக்க தவறி விட்டது என்று அதிமக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்லம் குற்றம் சாட்டியுள்ளார். நீட்தேர்வை தடுக்காத திமுக தற்போது இது குறித்து பேசி வருவது தும்பை விட்டு வலை பிடிப்பதற்கு சமம் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களின் பாசத்திற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், “கல்லணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்” என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ் வந்த பிறகு தமிழகத்தில மினி கிளினிக் செயல்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியின் கூறியுள்ளார். சென்னை சைததாப்பட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில இதுவரை 2382 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யுடியூபர் மதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், பூந்தமல்லி தனி சிறையில் அடைக்கப்பட்டார்.
கொரோனா ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொள்ள தெலுங்கானா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நாளை காலை 6 மணி முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட உள்ளன.
“கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள அதிமுகவை குறுக்கு வழியில் கைப்பற்றிட சசிகலா நாடகமாடி வருகிறார்; அதிமுகவில் 1% பாதிப்பைக்கூட சசிகலாவால் ஏற்படுத்த முடியாது” என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா 3-வது அலை தவிர்க்க இயலாதது எனவும், 6 முதல் 8 வாரங்களில் அது பரவக்கூடும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஒரு டோஸ் தடுப்பூசி கொள்கை குறித்து அரசு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும், 3வது அலையில் மஹாராஷ்ராவில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தருமபுரியில் நேற்று கைதான பப்ஜி மதன், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 700 வீடியோக்களிலும் ஆபாசமாக பேசியுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் பப்ஜி மதனை 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும் பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்க புதிய மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது
“மில்கா சிங்கிற்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும்; விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அவர் பெயரில் இருக்கை அமைக்கப்படும்” என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் 'நீட்' தேர்வு என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், ” மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை. கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நமது கல்வி உரிமை காப்போம்!!ு_கல்வி_உரிமை pic.twitter.com/kdfWEpF0rX
— Suriya Sivakumar (@Suriya_offl) June 19, 2021
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
மழை காரணமாக நேற்று முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது
இந்தியாவிலேயே அதிக தடுப்பூசி போடப்பட்டுள்ள மாநகரம் சென்னை தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், தற்போது, 5.56 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் இன்று மாலை வர உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தொற்று அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என்று முதலமைச்சர் உடனான ஆலோசனையில் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவையை அனுமதிக்க பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் 'பப்ஜி' மதன்.
சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியை தீபா முன் ஜாமின் கோரி மனு அளித்துள்ளார்
எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், சமத்துவ இந்தியாவை உருவாக்குவதற்கான அவரது தன்னலமற்ற அயராத உழைப்பை பாராட்டுகிறேன்; காங்கிரஸ் கட்சியின் நெறிமுறைகள் குறித்த அவரது அர்ப்பணிப்பு முன் மாதிரியாக உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில், இளங்கலை மாணவர்களுக்கு ‘தொழில் தர்மத்துக்கான திருக்குறள்’ என்ற பெயரில் நடப்பு கல்வியாண்டு முதல் பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.
பப்ஜி மதனிடம் கைப்பற்றப்பட்ட 3 டேப்லட்களில் இருந்த 700 வீடியோக்கள் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதனின் யூடியூபில் உள்ள 700 வீடியோக்களையும் முடக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
யூ டியூப் மூலம் சம்பாதித்த பணத்திற்கு பப்ஜி மதன் வருமான வரி செலுத்தவில்லை என சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தீபா, பாரதி ஆகிய 2 ஆசிரியைகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பாரதி என்ற ஆசிரியை வெளிநாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைமறைவாக உள்ள தீபாவை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கியிருந்து தனது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்கிறார்.