சென்னை எம்எல்ஏ விடுதியில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை
தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
தமிழகத்தின் கடன்சுமை ரூ.5.70 லட்சம் கோடி
தமிழக அரசின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டதாக வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் வரி வருவாயில் மிகப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நீதிபதிகளை நியமனம் – உச்சநீதிமன்றம் கருத்து
உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான கொலீஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை டில்லி உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
பெகாஸஸ் – மத்திய அரசு விளக்கம்
பெகாஸஸ் உளவு மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேலின் என்எஸ்ஓ குழும நிறுவனத்துடன் இந்திய அரசு பணப் பரிவர்த்தனை மேற்கொண்டதில்லை என மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 385 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 1,893 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து 1,930 பேர் குணமடைந்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கட்டிட கழிவுகளைக் கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப்படுவதாக மக்களவையில் திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டி பேசியுள்ளார். மேலும், மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்.
மேலும், மோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்.
எஸ்.பி வேலுமணியின் நெருங்கிய நண்பர் பொறியாளர் சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் 12 மணி நேர சோதனை நிறைடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினுடன், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை டிஜிபி கந்தசாமி சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு சென்னை தலைமைச்செயலகத்தில் சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது.
கோவையில் சுகுணாபுரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 12 மணி நேரமாக நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட வேண்டும் என்ற உத்தரவை பீகார் தேர்தலில் பின்பற்றாததால் நீதிமன்ற அவமதிப்பாக கருதி உத்தரவு மீறிய 8 கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
இதில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளர்.
தமிழக அரசின் வெள்ளை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம் என கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் விடப்பட்ட மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.15 கோடி மணல் கொள்ளை என எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக மதுரை மாநகராட்சியின் முன்னாள் தலைமை பொறியாளர் அரசு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டு்ளளது.
தமிழக அரசின் நிதி நிலை குறித்து ஆளும் திமுக அரசின் சார்பாக நேற்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை குறித்து அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், “தமிழக அரசின் வெள்ளை அறிக்கை, மக்களை திசை திருப்பும் செயல்” என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
தீர்ப்பு சீர்திருத்தங்கள் (பகுத்தறிவு மற்றும் சேவை நிபந்தனைகள்) அரசாணை, 2021 -ன் போது திங்கள்கிழமை ராஜ்யசபாவில் சில பாஜக எம்.பி.க்கள் இல்லாததற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் இல்லாத எம்.பி.க்களின் பட்டியலை உருவாக்குமாறு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சரிடம், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இந்த மசோதா மீது அரசாணை பிறப்பிக்கப்படுவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சட்டரீதியான தீர்மானத்தை கொண்டு கொண்டு வந்த நிலையில், அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்புடன் மசோதா நிறைவேற்றப்பட்ட்டுள்ளது.
நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பெகாசஸ் விவகாரம் குறித்து கூறுகையில், “யாரும் வரம்பை மீறக்கூடாது, அனைவருக்கும் இந்த வழக்கில் வாய்ப்பு அளிக்கப்படும். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போது, இது பற்றி வெளியில் விவாதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.இது குறித்து கட்சியினரும் நீதிமன்றத்தில் விவாதங்களுக்கு பதில் அளிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசுக்கு ஒதுக்கிய பின் மாநில இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது மேலும், மருத்துவ இடங்கள் திரும்ப வழங்கப்பட்டால் மட்டுமே தமிழக அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்ற முடியும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதில், ஓபிசி பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு கோருவது ஏன்? என்று மத்திய அரசும் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்ராஜ் நியமிக்கப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்ராஜ், 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்
பாரத மாதா மற்றும் தலைவர்களை சர்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வயது முதிர்வு மற்றும் இதய நோய் காரணமாக அவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ரூ.10 வரியும், தெருவில் வீட்டு நாய் மற்றவர்களை அச்சுறுத்தினால் மற்றும் அசுத்தம் செய்தால் உரிமையாளருக்கு ரூ. 500 அபராதமும் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அரசியல் பழிவாங்கும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடக்கும் சோதனை அரசியல் பழிவாங்கும் நோக்கமாக தெரிகிறது என்றும் பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் கூறியுள்ளார்.
கழக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம், மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று அதிமுகவினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளனர்.
கழக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம், மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். pic.twitter.com/rAhnqO4lqU
— AIADMK (@AIADMKOfficial) August 10, 2021
டெண்டர் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.பி. வேலுமணிக்கு மிகவும் நெருக்கமான சந்திர பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் கடந்த 2019-20-ம் நிதியண்டில் 50 சதவிகிதம் அதிகரித்து 3,623 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உறுப்பினர்களுக்கு டேப் வழங்கப்பட்டு, புத்தக வடிவில் தகவல்கள் இடம்பெறும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும் வருகிற 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார்.
எஸ்.பி.வேலுமணி ஊழல் புகார் விவகாரத்தில் ஒரே கணினியிலிருந்து விண்ணப்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. 2014 முதல் 2017 வரை வேலுமணியின் சகோதரர் 47 டெண்டர்கள் விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடத்தப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வரும் சென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியின் முன்பு குவிந்த அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களையும் உள்ளே அனுமதிக்கக்கோரி கேட்டை உடைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனக்கு நெருக்கமானவர்களுக்கு ரூ.811 கோடிக்கு ஒப்பந்தங்களை ஒதுக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. 2014 -2018ல் கோவை மாநகராட்சியில் ரூ.346.81 கோடிக்கு ஒப்பந்தங்களும், சென்னை மாநகராட்சியில் ரூ.464.02 கோடிக்கு ஒப்பந்தகளும் ஒதுக்கப்பட்டதாக எஸ்.பி. வேலுமணி மீது புகார் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டுகள் தவறு என நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாகவும், காவல்துறையினரை ஏவி விட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி நடப்பதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.34,984க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 373 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 41,511 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் காலையில் இருந்து ரெய்டு நடைபெறும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.