தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
மீன்வள மசோதா -மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
மீன்வள மசோதா தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீன்வள மசோதா கடலோர மீனவ சமூகங்களின் நலன்களுக்கு எதிராகவும், மாநில உரிமைகளை மீறும் வகையிலும் உள்ளது. அனைத்து தரப்பு கருத்துக்கேட்புக்கு பிறகு புதிய மசோதாவை தாக்கல் செய்யலாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
35 திட்டங்களுக்கு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தமிழகத்தில் 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீட்டில் 49 தொழில் திட்டங்கள் மூலம் 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பெகாஸஸ் முறைகேடு குற்றச்சாட்டு -பிரான்ஸில் விசாரணைக்கு உத்தரவு
இஸ்ரேலின் பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி தங்களுக்கு எதிரானவர்களை பிரான்ஸ் அரசு வேவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை
கொரோனா 2வது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாட்டில் ஒருவர் கூட உயிரிழகவில்லை என நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
டிஜிபி அலுவலகத்தில் குஷ்பூ புகார்
தனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகாரளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,423 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னையில் மட்டும் இன்று 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு பின்பு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2010-2011 கல்வியாண்டில் 1,00,320 மாணவர்கள் சேர்ந்தனர்.
நடப்பு 2021-2022 கல்வியாண்டில் 1,02,214 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது உளவு பார்க்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு மத்திய அரசு உளவு பார்த்து வருகிறது என்றும், இது நாட்டை இருண்ட பாதைக்கு அழைத்து செல்வதாக அமையும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகறிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்து வெளியீட்டிங்கு தயாராக இருந்த நெற்றிக்கண் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுமுக நாயகனாக வந்த சூர்யாவின் மாக்கெட்டை நந்தா படத்தின் மூலம் தூக்கி நிறுத்தியவர் இயக்குநர் பாலா. தொடர்ந்து பாலா இயக்கிய பிதாமகன் என் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த சூர்யா அதன்பிறகு பாலா இயக்கத்தில் நடிக்கவில்லை. ஆனால் தற்போது நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு, சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார இலக்கு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்றும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம் என்றும் சுட்டிக்காட்டிள்ளார். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 21, 2021
திருவண்ணாமலையில் வரும் 23ஆம் தேதி ஆடி பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதிமுக நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு ஈரோடு புறநகர் மாவட்டம் ஈரோடு புறநகர் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். இதில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக கருப்பணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2032 ஆம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடக்கும் என ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மது கடத்தலை கண்டுகொள்ளாத ஆய்வாளர் உள்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது என்றும் திமுக அரசை தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல் என்றும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்
வெள்ளப் பெருக்கின் போது காவேரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து கடலில் கடக்கும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்கு திருப்பி விடும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதை எதிர்த்து அதிமுக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேரள சட்டசபை தேர்தலில் சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் திருநங்கை அனன்யா. பாலியல் சிறுபான்மையினருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அம்பாசமுத்திரம், பொட்டல் கிராமத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு சென்னை முதல் வரை காரைக்கால் வரை படகு போக்குவரத்து துவங்கப்பட உள்ளது என்று சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதிகளில் சிறு துறைமுகங்கள் அதிகம் இருப்பதால் மக்கள் இந்த வகை போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் இன்று கோவையில் துவங்கியுள்ளது. இன்று மாலை 5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு மேலும் 10 கோடி தடுப்பூசிகள் தேவை உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒ.டி.டி. தளத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான நெற்றிக் கண் படம் விரைவில் வெளியாக உள்ளது.
#netrikann on #disneyplushotstarmultiplex Coming soon 🎥 pic.twitter.com/kZmYyG27kZ— Nayanthara✨ (@NayantharaU) July 21, 2021தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியர் கைது செய்யப்பட்டார். அரியலூர் ஆண்டிமடத்தை சேர்ந்த டிரில்லிங் மெஷின் ஆபரேட்டர் ஆரோக்கியசாமி கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.36,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜூலை 1 முதல் மின்வாரிய ஊழியர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2025 ஜூன் 30 ஆம் தேதி வரை 4 ஆண்டு காலம் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,998 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை சேர்க்கப்பட்டுள்ளதால் இன்றைய உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 42,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,16,337 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 4,07,170 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் விதிகளை மீறி இரட்டை மடி வலை பயன்படுத்தி மீன்பிடித்ததாக 13 விசைப்படகுகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு (Unit Test) நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 10,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.