தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை உருவாக்க திட்டம்
தமிழக முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் அடிப்படை வசதிகளையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை
கொரோனா 3வது அலை அச்சுறுத்தலால் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்திற்கு 11வது முறையாக மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:26 (IST) 24 Jul 2021தமிழகத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு இன்று 27 பேர் பலியாகியுள்ளனர்.
- 20:24 (IST) 24 Jul 2021பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மருத்துவமனையில் அனுமதி
இந்து மதக் கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- 19:32 (IST) 24 Jul 2021தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறப்பு
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ள நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை 5 மணிக்கு கருணாநிதி உருவப்படத்தை திறந்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 19:30 (IST) 24 Jul 2021ஒலிம்பிக் ஆக்கி : இந்திய மகளிர் அணி தோல்வி
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆக்கி அணிகளுக்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி நெதர்லாந் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 5-1 என்ற கணகக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
- 18:11 (IST) 24 Jul 2021ஜிகா வைரஸ் அச்சம் : தமிழக எல்லையில் கண்கானிப்பு தீவிரம்
கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அண்டை மாநிலங்கள் பெரும அச்சத்தில் உள்ளன. இதில் கேரளா எல்லையான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்காப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- 17:52 (IST) 24 Jul 2021யானைகள் வழித்தடம் குறித்து அறிய சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு!
யானைகள் வழித்தடம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
- 17:31 (IST) 24 Jul 2021ஆந்திராவில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
ஆந்திராவில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குணமடைந்து திரும்பியவர்கள் எண்ணிகை 2,737 ஆகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆகவும் உள்ளது.
- 17:16 (IST) 24 Jul 2021டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை சுதித்ரா முகர்ஜி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் ஸ்வீடன் வீராங்கனை லிண்டாவை 4-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார். டேபிள் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஏற்கனவே மனிகா பத்ரா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 17:01 (IST) 24 Jul 2021மீரா பாய் சானுவுக்கு மநீம தலைவர் வாழ்த்து!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- 16:35 (IST) 24 Jul 2021பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் - குழித்துறை குற்றவியல் நீதிபதி உத்தரவு
சமூக அமைதியை குலைக்கும் விதமாக பேசியதாக கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து குழித்துறை குற்றவியல் நீதிபதி உத்தரவு - பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
- 16:34 (IST) 24 Jul 2021"தி.மு.க. அரசு லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவந்து நாட்டை சுடுகாடாக்க முடிவுசெய்துள்ளது" - எடப்பாடி கே. பழனிச்சாமி அறிக்கை.
"தி.மு.க. அரசு லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவந்து நாட்டை சுடுகாடாக்க முடிவுசெய்துள்ளது கண்டிக்கத்தக்கது. லாட்டரிச் சீட்டு திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். வருவாயைப் பெருக்க வேறு வழிகளைத் தீட்ட வேண்டும்" - என அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
— AIADMK (@AIADMKOfficial) July 24, 2021
தமிழ் நாட்டில் மீண்டும் லாட்டரியா ? ஏழை, எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் ! pic.twitter.com/nLZrpD1uUe - 16:33 (IST) 24 Jul 2021டோக்கியோ ஒலிம்பிக்ஸ் - குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணன் விகாஸ் தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணன் விகாஸ் ஜப்பான் வீரர் ஒகசாவாவிடம் 5 - 0 புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.
- 16:16 (IST) 24 Jul 2021"சாமானியரை இழிவுபடுத்தாதீர்!"- நாடாளுமன்றத்தை அதிரவைத்த மனோஜ் ஜா!
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் "சாமானியரை இழிவுபடுத்தாதீர்!" என அரசுகளையும் அமைப்புகளையும் கடுமையாக சாடியுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள மாநிலங்களவை எம்.பி மனோஜ் ஜா பேசியது இப்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
- 15:52 (IST) 24 Jul 2021ஒலிம்பிக் : டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி
ஒலிம்பிக் தொடரின் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.
- 15:34 (IST) 24 Jul 2021சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு சுரங்க கொள்கையை உருவாக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டும் என புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
- 15:03 (IST) 24 Jul 2021ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி வெற்றி
ஒலிம்பிக் தொடரில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வீராங்கனை மணிகா பத்ராவும் வெற்றி பெற்றுள்ளார்.
- 14:52 (IST) 24 Jul 2021லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை - எம்.ஆர். விஜயபாஸ்கர்
எனக்கு சொந்த வீடு கிடையாது. பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை. எடுக்கப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது என அதிமுக முன்னாள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
- 14:36 (IST) 24 Jul 20215 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது- வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு
எனது 5 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது என்று ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும், தங்கப் பதக்கத்தை வெல்ல என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன் என்றும் மீராபாய் சானு கூறியுள்ளார்.
- 14:18 (IST) 24 Jul 2021நீர் வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் 30 ஆயிரம் கன அடியாக நீர் வர வாய்ப்புகள் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- 14:14 (IST) 24 Jul 2021தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 14:00 (IST) 24 Jul 2021மீராவின் வெற்றி, இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான தொடக்கம் - ஸ்டாலின் வாழ்த்துகள்
பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வர் முக ஸ்ஆலின் இந்தியாவுக்கு இது பிரகாசமான துவக்கம் என்று கூறியுள்ளார்.
- 13:38 (IST) 24 Jul 2021பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
'சார்பட்டா' படத்தில் எம்.ஜி.ஆர்-க்கும், விளையாட்டு துறைக்கும் தொடர்பில்லாதது போல் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- 13:03 (IST) 24 Jul 2021ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டி - இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறிய இந்தியா
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது. இந்திய வீரர் சவுரப் சவுதாரி, 137 புள்ளிகளுடன் பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளார். தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து முன்னேறிய சவுரப் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
- 12:12 (IST) 24 Jul 2021இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் மீராபாய்
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ பளு தூக்கும் பெண்கள் பிரிவில் இந்தியாவின் சானு சைக்கோம் மீராபாய் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.
- 11:55 (IST) 24 Jul 2021டென்னிஸில் இந்தியாவின் சுமித் நாகல் 2வது சுற்றுக்கு தகுதி
ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- 11:52 (IST) 24 Jul 2021தீபிகா - பிரவீன் ஜாதவ் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி-பிரவீன் ஜாதவ் இணை தோல்வி அடைந்தது. காலிறுதிப்போட்டியில் தென்கொரிய ஜோடியிடம் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்துள்ளார்.
- 11:47 (IST) 24 Jul 2021சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- 11:15 (IST) 24 Jul 2021மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
சென்னை பூவிருந்தவில்லி அருகே தனியார் கல்லூரி மாணவி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தேர்வு அறையில் மாணவி செல்போன் வைத்திருந்ததை தேர்வு கண்காணிப்பாளர் கண்காணித்து வெளியேற்றியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவி தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10:56 (IST) 24 Jul 2021நிமோனியாவுக்கு தடுப்பூசி -மா.சுப்பிரமணியன்
நிமோனியா, மூளைக் காய்ச்சல் நோய்களில் இருந்து குழந்தைகளை காக்க தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி போடப்படுகிறது.
- 10:51 (IST) 24 Jul 2021தமிழகம் முழுவதும் நூலகங்களை திறக்க உத்தரவு
கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நூலகங்களை தவிர்த்து பிற நூலகங்களை திறக்கலாம் என பொது நூலகத்துறை இயக்குனர் நாகராஜ முருகன் அறிவித்துள்ளார்.
- 09:55 (IST) 24 Jul 2021இந்தியாவில் ஒரே நாளில் 39,097 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 23 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 546 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 35,087பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
- 09:48 (IST) 24 Jul 2021சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பு
சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மதிப்பெண்கள் பிரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் www.cbseacademic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- 09:36 (IST) 24 Jul 2021டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றது சீனா
டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் சீனா வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் ரஷ்யா 2வது இடத்தையும், சுவிட்சர்லாந்து 3வது இடத்தையும் பிடித்தன.
- 09:34 (IST) 24 Jul 2021பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது
இந்துமத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார். இந்து கடவுள்களையும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 09:25 (IST) 24 Jul 2021ஒலிம்பிக் ஹாக்கி - இந்தியா வெற்றி
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணியின் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
- 09:25 (IST) 24 Jul 2021பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது
இந்துமத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார். இந்து கடவுள்களையும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.