35 நகரங்களில் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள்
சென்னை, கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் அரசு – தனியார் பங்களிப்புடன் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
+2 துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கு விருப்பத் தேர்வு ஆகஸ்ட் 6 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இன்று முதல் 27-ம் தேதி வரை விருப்ப தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 25 லட்சம் ரூபாய் ரொக்க பணம், முக்கிய சொத்து ஆவணங்கள் மற்றும் முதலீடுகள், பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு சீல்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் குட்கா, பான்பராக் விற்பனை இல்லாத நிலையை உருவாக்குவோம் எனவும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கொழும்புவில் நடைபெற்று வரும் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்செய்த இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகட்சமாக ப்ரித்விஷா 49 ரன்களும், சாம்சன் 46 ரன்களும், சூர்யகுமார் 40 ரனகளும் எடுத்தனர்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில் மேலும் 6 மாத காலம் அவகாசம் நீடிக்கப்பட்டு்ளளது குறிப்பிடத்தக்கது.
கோலாகலமாக தொடங்கிய 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில், இந்திய தரப்பில் சுமார் 30 பேர் கொண்ட குழு பங்கேற்ற நிலையில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஆக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்தினர்
இந்தியா இலங்கை அணிகளுககு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் 22 ரன்களுடனும், மனஷ் பாண்டே 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மத்திய அரசு அறிவித்த ஒளிப்பதிவு மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா மீது இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை ஆலோசனை கட்டத்தில் மட்டுமே உள்ளது என்றும் பதில் அளித்துள்ளார்.
கன்னியாகுமரியில் விவேகாந்தர் மணிமண்டபத்தில் இருந்து வள்ளுவர் சிலைவரை தொங்குபாலம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளாா.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வந்த நிலையில், கடந்த ஜூன் 2020 முதல் ஜூன் 2021 வரை நாட்டிலேயே 3-வது மாநிலமான தமிழகத்தில் அதிக கொரோனா மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த போட்டியின் துவக்கவிழா சற்றுமுன் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்தியா உட்பட 205- நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்
ஜெ. பல்கலைக்கழகத்தை முடக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து வரும் 26ம் தேதி விழுப்புரத்தில் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.
சென்னையில் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார் *பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் ஒரேநாளில் 35,342 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரேநாளில் 38,740 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,04,29,339 லிருந்து 3,04,68,079 ஆக அதிகரித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் சென்றடைந்து உள்ளார். இன்று மாலை நடைபெறும் தொடக்க விழாவில், ஜப்பான் அரசர் நருஹிட்டோ, அந்நாட்டு பிரதமர் சுகா, அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் ஆகியோருடன் இணைந்து மேக்ரானும் பங்கேற்க உள்ளார்.
கொரோனா 3-வது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதில் அளித்துள்ளார்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் இரண்டு நாளுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கவன ஈர்ப்பு போராட்டத்தில் நீட் உள்ளிட்ட விவகாரங்களில் மெத்தனமாக செயல்படும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்ப வேண்டும் என அதிமுக தெண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னிர்செல்வம் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள முத்துகலிங்கன் கிருஷ்ணன் திருவாரூர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4506-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.36048க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38960-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை 70 பைசா உயர்ந்து கிராமுக்கு ரூ.72.30-க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று
தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியினர் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து இதுவரை இல்லாத அளவில் பதக்கப்பட்டியலில் முன்னேற வேண்டுமென்று என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
“கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட திட்டம். தமிழ்நாடு திருக்கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க விரைவில் முதலமைச்சர் புதிய திட்டம் அறிவிப்பார்” என அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் வரை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., சாந்தனு சென் சஸ்பெண்ட். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த தாளை சந்தானு சென் நேற்று கிழித்தெரிந்த நிலையில் அவை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்யவும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி, நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார். மேலும் தனது சேல்போனையும் ஒட்டுக் கேட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 483 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 38,740 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும்? குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் கனச்சாக் அருகே வெடிபொருளுடன் சுற்றிய ட்ரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். அதிலிருந்த வெடிபொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.102.49-க்கும், டீசல் லிட்டர் ரூ.94.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.