தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
தமிழ்நாடு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை
தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட உள்ளார். காலை 11.30 மணிக்கு வெளியாகும் இந்த அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வரவு, செலவு, வருவாய் இழப்பு மற்றும் தமிழகத்தின் கடன் நிலை குறித்து விபரங்கள் வெளியிடப்படுகிறது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ102.49-க்கும், டீசல் விலை ரூ94.39 –க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல் டீசல் விலை கடந்த 22 நாளாக விலை மாற்றம் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது குறித்து திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிப்பு
மக்களின் போராட்டத்தினால் சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆக்சிஜன் உற்பத்திக்காக தினசரி 24 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பரிசு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா அரசு ரூ 6 கோடி பரிசு அறிவித்துள்ளது. மேலும் தற்போது ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ராவுக்கு பஞ்சாப் அரசு ரூ2 கோடியும், பிசிசிஐ ரூ1 கோடியும் பரிசு அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:21 (IST) 08 Aug 2021கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து போரூர் சந்திப்பு வரை பரிட்சார்த்த முறையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்ட பணி காரணத்தினால் 09.08.2021 அன்று காலை 08.00 மணிமுதல் 11.00 மணி வரையில் பரிச்சார்த்த முறையில் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியில் போக்குவரத்து மாற்றம்.
ஆற்காடு சாலையில் 80 அடி சாலை சந்திப்பிலிருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படவுள்ளது.
- 19:42 (IST) 08 Aug 2021தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா; 28 பேர் பலி
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,956 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20,407 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 25,75,308 பேர் மொத்த பாதிப்பு என பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 807 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 25,20,584 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 28 பேர் இன்று உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 34,317 பேர் என பதிவாகியுளது.
- 18:00 (IST) 08 Aug 2021அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்:, தமிழ்நாட்டில் உள்ள 58,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் என்றும் வரும் பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும்படி நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
- 16:25 (IST) 08 Aug 2021பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்சி விலகல்
பார்சிலோனா அணியில் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார் கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்சி
- 15:25 (IST) 08 Aug 2021டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் நிறைவு
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் நிறைவு பெற்றன. ஜப்பானில் ஜூலை 23-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம். 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம். 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் போட்டியை நடத்தும் ஜப்பான் 3வது இடம். ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடம் பிடித்துள்ளது.
- 14:22 (IST) 08 Aug 2021காலில் விழ வைத்ததாக புகார் - 4 பிரிவுகளில் வழக்கு
கோவை அருகே விஏஒ அலுவலக உதவியாளர் முத்துச்சாமியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தில் கோபால்சாமி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்தது உறுதியானதாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது.
- 14:18 (IST) 08 Aug 2021நடிகை மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
நடிகை மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் பட்டியல் பிரிவினர் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 13:27 (IST) 08 Aug 202113 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5 மணியளவில் கூட்டம் நடைபெறுகிறது
- 13:07 (IST) 08 Aug 2021நாளை காலை 11.30க்கு வெள்ளை அறிக்கை வெளியீடு
தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை காலை வெளியிடப்பட உள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
- 13:01 (IST) 08 Aug 2021டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 12:08 (IST) 08 Aug 2021ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாளை முதல் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- 11:50 (IST) 08 Aug 2021திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
- 11:49 (IST) 08 Aug 2021கொரோனா பரவல்: சேலத்தில் புதிய கட்டுப்பாடு!
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாளை முதல் வணிக வளாகங்கள், ஜவுளி நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், கொங்கணாபுரம் மற்றும் வீரகனூர் வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 11:14 (IST) 08 Aug 2021தங்கப்பதக்கம் வெல்லாதது வருத்தமளிக்கிறது - பஜ்ரங் புனியா
டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வெல்லாதது வருத்தமளிக்கிறது என்றும், அடுத்து 2024-ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்று கூறியுள்ளார்.
- 11:11 (IST) 08 Aug 2021டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் இந்தியாவிற்கு 47-வது இடம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்தியாவிற்கான போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 1 தங்கம் 2 வெள்ளி 4 வெண்கலப்பதக்கம் என 7 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் - 47ஆவது இடத்தில் உள்ளது.
- 10:31 (IST) 08 Aug 2021திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு முதல்வர் அஞ்சலி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்
- 09:30 (IST) 08 Aug 2021கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 09:25 (IST) 08 Aug 2021தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மரணம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி(84) உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.
- 08:01 (IST) 08 Aug 2021சென்னை, கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, கோடம்பாக்கத்தில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இன்று மற்றும் நாளை காலை 8 முதல் 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுளளது.
- 07:56 (IST) 08 Aug 2021ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நீக்கம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அதிகரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கணக்கை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Shri @RahulGandhi’s Twitter account has been temporarily suspended & due process is being followed for its restoration.
— Congress (@INCIndia) August 7, 2021
Until then, he will stay connected with you all through his other SM platforms & continue to raise his voice for our people & fight for their cause. Jai Hind!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.