தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இறைச்சி, மீன் கடைகளை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ய அறிவுத்தப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
செப்.1 முதல் பள்ளிகளை திறக்க திட்டம் -தமிழக அரசு
தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிகப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 50 சதவீத மாணவர்களுடன் மேற்கண்ட பள்ளி மாணவர்களுக்கான வகுப்பை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவ கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வரி விதிப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்
நிறுவனங்களிடமிருந்து முன்தேதியிட்டு வரி வசூல் செய்வதை ரத்து செய்வதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட வரிவிதிப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனவும் திருப்பூர், தென்காசி மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தரப்பில் ரூட் சதம் அடித்துள்ளார். இங்கிலாந்து 2ஆவது இன்னிங்கிஸ்ல் 303 ரன்கள் சேர்த்துள்ளது.
ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 1 கோடி
வெள்ளி வென்ற மீரா பாய் சானுவுக்கு ரூ. 50 லட்சம்,
வெண்கலம் வென்ற பிவி.சிந்து, லவ்லினா, பஜ்ரங் புனியாவுக்கு ரூ. 25 லட்சம்,
இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ரூ.1.25 கோடி
இவ்வாறு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ பரிசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக தினசரி 24 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பணியாற்றும் நீரஜ் சோப்ராவுக்கு பஞ்சாப் அரசு ரூ. 2 கோடியும், பிசிசிஐ ரூ.1 கோடியும் பரிசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 29 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
“இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா. இந்தியாவின் 120 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் ஒரு பில்லியன் இதயங்களில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் உண்மையிலேயே ஒரு நேஷனல் ஹீரோ” என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளார்.
“ தடைகளை தகர்த்து நீரஜ் சோப்ரா வரலாறு படைத்துள்ளதாக” குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
டோக்யோவில் புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது, இன்றைய சாதனை என்றும் நினைவில் இருக்கும் என ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அரசுப் பணி வழங்கப்படும் என்றும் ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் ஜோப்ரா, வரலாற்று சாதனை புரிந்துள்ளதாகவும், மில்கா சிங் கனவு நிறைவேறியதாகவும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்ச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டீயுள்ளார். ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு இது முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் ஜோப்ரா, பதக்க மேடையில் நிற்கும் காட்சி
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா. ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை. ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் இதுவாகும்.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுவில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்காக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு 6-வது பதக்கம் கிடைத்துள்ளது.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் பப்ஜி மதன், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதனின் ஆட்கொணர்வு மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெற உள்ளது.
கமலின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்த ஆர்.மகேந்திரன் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரை முருகன் வெளியிட்டுள்ளார்.
#expressnews || திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்!#dmk | #mkstalin | @arivalayam | @drmahendran_r pic.twitter.com/JdTdKElhPZ
— IE Tamil (@IeTamil) August 7, 2021
”திமுக தேர்தல் அறிக்கையில் மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என கூறியதை முதல்வர் உடனடியாக அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள இயக்குநர் தங்கர் பச்சான், ”அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப் பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள் கூட தாமதமாகாமல்! ஆனால் மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் 16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், கடந்த மாதத்தில் 36 ஆயிரம் ரூபாய் மின்சாரக் கட்டணமாக செலுத்தியுள்ளேன்.” என்று இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தானின் மாங்கிஸ்ட்டாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நீர், உணவின்றி விலங்கினங்கள் அதிகளவில் செத்து மடியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எலும்பும் தோலுமாய் தென்படும் குதிரைகளும், மடிந்த அவற்றின் எலும்புக் கூடுகளும் கஜகஸ்தானில் நிலவும் வறட்சியின் கோர முகத்தை உணர்த்துகின்றன.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் தம்பதியின் குழந்தைக்கு தாயின் முதல் பெயரை பயன்படுத்துவதை மாற்றக்கோரி தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம்,'தாயின் குடிப்பெயர் அல்லது முதல் பெயரை குழந்தைக்கு பயன்படுத்த உரிமை உண்டு' என உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகை மீரா மிதுனை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி மதுரை மாநகர காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அவசர கால பயன்பாட்டிற்காக மட்டுமே அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கைத்தறி தொழிலாளர்களை ஊக்குவிக்க, பண்டிகை காலங்களில் நாம் கைத்தறி ஆடைகளை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது என்று தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், “மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கோவை மாவட்டம் ஒற்றர்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளது.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நம் நாட்டின் தட்பவெப்பத்திற்கு உகந்தவை கைத்தறி ஆடைகள்தான். தேசத்தின் பொருளாதாரத்திலும் விவசாயத்திற்குப் பிறகு நெசவுக்கே பெரும்பங்கு இருக்கிறது. அணியும்தோறும் நாம் சுதந்திரமானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம். சுதேசிகளை நினைவுகூர்வோம்.
நம் நாட்டின் தட்பவெப்பத்திற்கு உகந்தவை கைத்தறி ஆடைகள்தான். தேசத்தின் பொருளாதாரத்திலும் விவசாயத்திற்குப் பிறகு நெசவுக்கே பெரும்பங்கு இருக்கிறது. அணியும்தோறும் நாம் சுதந்திரமானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம். சுதேசிகளை நினைவுகூர்வோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 7, 2021
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்கிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் தோல்வி அடைந்தார். 60 வீராங்கனைகள் பங்கேற்ற தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவு போட்டியில் அதிதி 4வது இடம் பிடித்தார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்து ரூ.35,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.61 குறைந்து ரூ.4,440க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.70.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒலிம்பிக் ஹாக்கி மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த உத்தரகாண்ட் வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்குவதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பெயரில் மொழியியல் பல்கலைக்கழகத்தை தொடங்க வேண்டும் என திருமாவளவன் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார். ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல்கலைக்கழகத்தை உருவாக்கலாம் என கூறியுள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.