தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு :
கரிசலைத் தன் எழுத்தின் வழியே ஆவணப்படுத்திய உன்னதக் கதை சொல்லி கி. ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக, உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 99. கி.ரா. கரிசல் எழுத்தின் தந்தை என போற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இ - பதிவு முறை அமல்
தமிழகத்தில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் செய்ய, 'இ - பதிவு' பெறுவது நடைமுறைக்கு வந்தது. இதற்கு, https://eregister.tnega.org என்ற, இணையதளத்தில் இ- பதிவு செய்து கொள்ள வேண்டும்.
எம்எல்ஏக்கள் குழு அமைப்பு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 13 கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் இடம்பெற்றுள்ளனர். அதிமுகவை சேர்ந்த சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் இடம் பெற்றுள்ளார்.
செய்தி, ஊடகப்பிரிவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
கொரோனா தொற்று பரவல் குறித்து, மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை ஒளிபரப்பும்படி, செய்தி, ஊடகப் பிரிவினருக்கு, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவிஷீல்டு 2-வது டோஸ்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
கோவிஷீல்டு 2-வது டோசுக்கான கால இடைவெளியை மாற்றுவதற்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்தது செல்லும். அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.
மின்சார ரயில் சேவை குறைப்பு
மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 85 மின்சார ரெயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 30 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 24 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 66 ரெயில் சேவையும் என 205 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
- 22:17 (IST) 17 May 2021பினராயி விஜயன் மே 20ம் தேதி கேரளா முதல்வராக பதவியேற்கிறார்
கேரளாவின் முதல்வராக வரும் 20ம் தேதி பினராயி விஜயன் பதவியேற்க உள்ளார். சமீபத்திய தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- 19:40 (IST) 17 May 2021கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆச்சி மசாலா நிர்வாகம் ரூ.1 கோடி நிதி
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
- 19:37 (IST) 17 May 2021தமிழகத்தில் இன்று கோரோனா பாதிப்பு 33,000ஐ தாண்டியது; 335 பேர் பலி
தமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 335 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 20,486 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 19:05 (IST) 17 May 2021அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம்
அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. செயிண்ட் கோபெய்ன், ஹூண்டாய், டிவிஎஸ்,எல்&டி உள்ளிட்ட 8 நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
- 17:50 (IST) 17 May 2021திருமணத்திற்காக இ-பாஸ் விண்ணப்பிக்க தற்காலிக தடை
தமிழகத்தில் திருமணத்திற்காக அதிகம் பேர் இ-பதிவு விண்ணப்பித்து பயணிக்கின்றனர்; இதனால், தற்காலிகமாக இ-பதிவு இணையதளத்தில் இருந்து திருமணத்துக்கு செல்வதற்கான பிரிவு நீக்கபப்ட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
- 17:18 (IST) 17 May 2021திமுக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தங்கர் பச்சான் கருத்து
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், புதிதாக தலைமை ஏற்றுள்ள திமுக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், "திமுக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தெம்பை அளித்திருக்கின்றன" என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
- 17:11 (IST) 17 May 2021ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார் - கே.என்.நேரு
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் மே 24 ந் தேதி முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பது குறித்து பெரும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துளள அமைச்சர் கே.என்.நேரு "ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார்"என்று கூறியுள்ளார்.
- 16:59 (IST) 17 May 2021கொரோனா நிதி வழங்கிய சென்னை திருநங்கைகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து பலரும் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள் ரூ.50,000 வழங்கியுள்ளனர்.
- 16:48 (IST) 17 May 2021கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை வெளியிட உத்தரவு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- 16:28 (IST) 17 May 2021காணாமல்போன மீனவர்களை மீட்க சீமான் வலியுறுத்தல்
மாயமான நாகை மீனவர்களை மீட்க மத்திய அரசிடம் பேசி விமானப்படை மற்றும் கடற்படை உதவியின் மூலம் மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
- 15:53 (IST) 17 May 2021பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - விஜயபாஸ்கர்
கொரோனா தொற்று பாதிப்பு குறித்து ஆலோசனை வழங்கும் எம்எல்ஏக்கள் குழுவில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவோம் என்றும், "பொதுமக்கள் தாமாக முன்வந்து சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், "தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் நுரையீரல் பாதிப்பை தடுக்க ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- 15:52 (IST) 17 May 2021பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - விஜயபாஸ்கர்
கொரோனா தொற்று பாதிப்பு குறித்து ஆலோசனை வழங்கும் எம்எல்ஏக்கள் குழுவில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவோம் என்றும், "பொதுமக்கள் தாமாக முன்வந்து சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், "தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் நுரையீரல் பாதிப்பை தடுக்க ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- 15:34 (IST) 17 May 2021அருண்ராஜா காமராஜ் மனைவி மரணத்திற்கு உதயநிதி இரங்கல்
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவி மரணத்திற்கு உதயநிதி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்
நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் @Arunrajakamaraj அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/YUvMpwQCSb
— Udhay (@Udhaystalin) May 17, 2021 - 15:31 (IST) 17 May 2021அருண்ராஜா காமராஜ் மனைவி மரணத்திற்கு உதயநிதி இரங்கல்
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவி மரணத்திற்கு உதயநிதி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்
நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் @Arunrajakamaraj அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/YUvMpwQCSb
— Udhay (@Udhaystalin) May 17, 2021 - 14:32 (IST) 17 May 2021ஆந்திராவில் மே 31ஆம் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு
ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 31ஆம் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.
- 14:31 (IST) 17 May 2021முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி
கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி
- 14:21 (IST) 17 May 2021கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.
- 14:19 (IST) 17 May 2021மும்மொழி கொள்கையை திணிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை" - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
மும்மொழி கொள்கையை திணிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை" உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
- 14:01 (IST) 17 May 2021இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
- 13:42 (IST) 17 May 2021கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி
கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியமும் நிவாரண நிதிக்கு வழப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமியும் அறிவிப்பு
- 13:36 (IST) 17 May 2021கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி
கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியமும் நிவாரண நிதிக்கு வழப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமியும் அறிவிப்பு
- 13:32 (IST) 17 May 20218 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 8 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
- 13:13 (IST) 17 May 2021ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் திட்டம்
ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 80 டன் ஆக்ஸிஜன் ஒடிசாவின் கலிங்கா நகரில் இருந்து சென்னை வந்தடைந்தது. அதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்தும் 40 டன் ஆக்ஸிஜன் சென்னை வந்ததடைந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் மேற்கு வங்கத்தில் இருந்து 80 டன் ஆக்ஸிஜன் சென்னை வந்தடைந்தது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம் மற்றும் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு தேவையான இடங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பி வைத்தனர்.
- 13:01 (IST) 17 May 2021மத்திய அரசின் செயலை கண்டிக்கவே ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வி அமைச்சரை அழைக்காமல் துறை அதிகாரியை மத்திய அரசு அழைத்துள்ளது. அதனை கண்டிக்கும் பொருட்டே தமிழக அரசு ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
- 12:45 (IST) 17 May 2021காங்கிரஸ் உறுப்பினர்கள் கொரோனா நிதி
தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
- 12:38 (IST) 17 May 2021ரூ. 50 லட்சம் நிதி வழங்கினார் ரஜினி
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினி காந்த், கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50 லட்சம் வழங்கினார்.
- 12:26 (IST) 17 May 2021பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதிகம் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள மாவட்டங்கள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
- 12:06 (IST) 17 May 2021Cyclone Tauktae latest updates
டவ்-தே புயல் காரணமாக இந்தியாவின் மேற்கு கடற்கரை ஒட்டிய மாநிலங்கள்/மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பைக்கு 160 கி.மீ தொலைவிலும், குஜராத்தின் வேறவலுக்கு 290 கி.மீ தொலைவிலும் டவ் தே புயல் நிலை கொண்டுள்ளது.
- 12:00 (IST) 17 May 2021தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து
கொரோனா சிகிச்சைக்கு தண்ணீரில் கலந்து குடிக்கும் 2டிஜி (2DG) மருந்தை அறிமுகம் செய்தது மத்திய அரசு.
- 11:58 (IST) 17 May 2021புதிய கல்விக்கொள்கை - ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த இந்தியா
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. கல்வி அமைச்சர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
- 11:43 (IST) 17 May 2021பொது இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்படையும்
பொது இடங்களில் ஆவி பிடித்தல் போன்ற நிகழ்வுகளால் நுரையீரல் பாதிப்படையும் எனவும் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளனது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
- 11:15 (IST) 17 May 2021பல்கலை. துணைவேந்தர்களுடன் மத்திய அமைச்சர் நாளை ஆலோசனை
பல்கலை. துணைவேந்தர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது மற்றும் ஆன்லைன் கல்வி முறை தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
- 11:11 (IST) 17 May 2021தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உயிரிழப்பு
நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் கொரோனாவால் உயிரிழந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- 10:43 (IST) 17 May 2021மும்பைக்கு 160 கி.மீ தொலைவில் டவ் தே புயல்
டவ்-தே புயல், தற்போது மும்பைக்கு 160 கி.மீ தொலைவிலும், குஜராத்தின் வேறவலுக்கு 290 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை குஜராத்தின் போர்பந்தர் மாவுவா இடையே இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 10:34 (IST) 17 May 2021தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,552க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு 60 காசு உயர்ந்து ரூ.76.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 10:29 (IST) 17 May 2021தடுப்பூசி முகாம்- சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் 30க்கும் அதிகமானோர் இருக்கும் குடியிருப்புகள், நிறுவனங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
- 09:46 (IST) 17 May 2021தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
சென்னை ஓட்டேரியில் கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்,
- 09:35 (IST) 17 May 2021இந்தியாவில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 4,106 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 08:55 (IST) 17 May 2021கொரோனா - திரைப்பட துணை நடிகர் உயிரிழப்பு
திரைப்பட துணை நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
- 08:46 (IST) 17 May 2021கொரோனா - திரைப்பட துணை நடிகர் உயிரிழப்பு
திரைப்பட துணை நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
- 08:35 (IST) 17 May 2021இ-பதிவு முறை அமலானது
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- 08:28 (IST) 17 May 2021அருண்ராஜா காமராஜின் மனைவி உயிரிழப்பு
இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.