Advertisment

Tamil News Highlights: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Latest News 20 April 2022- தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக இன்றும் மாற்றமில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu news update: அதிகாரிகள் குழு பரிந்துரைப்படி, சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைகிறது. 4 இடங்களில் ஆய்வு செய்து சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indin News Update: உலகிலேயே அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

சோனியாவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து 3ஆவது நாளாக சந்தித்தார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

World News Update: கிழக்கு உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதலை தொடங்கி உள்ளன. இந்நிலையில், ரஷ்ய தாக்குதலை முறியடிப்பேன் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சூளுரைத்தார்.

IPL update: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


  • 22:15 (IST) 20 Apr 2022
    மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி – தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

    12524 மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க தயாராக இருப்பதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7500 ஊதியம் வழங்கும் வகையில் பணி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது


  • 22:12 (IST) 20 Apr 2022
    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்டு அறிவிப்பு

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கைரன் பொல்லார்டு அறிவித்துள்ளார்


  • 21:35 (IST) 20 Apr 2022
    விம்பிள்டன் தொடரில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு தடை

    நடப்பாண்டிற்கான விம்பிள்டன் தொடரில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சர்வதேச டென்னிஸ் சங்கம் இந்த தடையை விதித்துள்ளது


  • 19:33 (IST) 20 Apr 2022
    தமிழகத்தில் கே.ஜி.எஃப்-2 படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு

    தமிழகத்தில் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கு மேலும் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 410 திரையரங்குகளில் கே.ஜி.எஃப்-2 திரையிடப்பட்டு உள்ளது என திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்


  • 19:14 (IST) 20 Apr 2022
    ஆளுநர் வாகனம் தாக்கப்பட்ட விவகாரம்; பாஜக வதந்தி பரப்புகிறது - திருமாவளவன்

    ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஆளுநரின் வாகனம் மீது கற்கள் வீசி தாக்கியதாக பாஜகவினர் வதந்தி பரப்புகின்றனர். பிரதமர் மோடி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஏனெனில் அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்


  • 18:33 (IST) 20 Apr 2022
    குறை பிரசவம் குறித்த பேச்சு: மன்னிப்பு கோரிய பாக்யராஜ்; நான் பாஜக இல்லை, திராவிட கருத்து உள்ளவன் என விளக்கம்

    குறை பிரசவம் குறித்த பேச்சு குறித்து மன்னிப்பு கோரி இயக்குனர் பாக்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “நான் பாஜக இல்லை, திராவிட கருத்து உள்ளவன் என விளக்கம்இன்னைக்கு காலையில் ஒரு ஃபங்ஷனில் நான் பேசியதில், குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று சொன்ன வார்த்தை ரொம்ப தப்பான ஒரு அர்த்தத்தை உண்டுபண்ணிவிட்டது என்பதைக் கேள்விபட்டபோது எனக்கு ரொம்ப ஷாக்காக இருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கும் நான் குறைப்பிரசவத்துக்கும் சம்பந்தமில்லை. கிராமத்தில ஒரு மாசம் 2 மாசம் 3 மாசம் முன்னால பிறந்தவர்களை குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று சொல்வார்கள் இல்லையா. அவர்களிடம் எந்த குறையும் இருக்கிற மாதிரி சொல்ல மாட்டார்கள். மற்றபடி மாற்றுத் திறனாளிகளை நான் எப்பவுமே ஒரு அக்கறையுடன்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு அல்ல என்றைக்கும் நான் அப்படிதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதனால், நடந்ததில் நான் இப்படி சொல்லி இருக்க வேண்டும் என்று யார் தவறுதலாக நினைத்திருந்தாலும் அவர்கள் மனம் வலித்தாலும் நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான் பிஜேபி கிடையாது. நான் தமிழ்நாட்ல பிறந்து, தமிழ்ல படிச்சு, தமிழ் சினிமாவுக்கு வந்து தமிழ்தான் எனக்கு சோறுபோட்டுக்கொண்டிருக்கிறது இன்று வரைக்கும்... இதில் என்னை அறியாமல், தமிழ் தலைவர்கள், திராவிடத் தலைவர்கள், பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜீவா ஆகிய தலைவர்களின் கருத்துகள்தான் என் மனதுக்குள் ஊறிப்போயிருக்கிறது. நான் எடுத்த என்னுடைய சினிமாக்களில் அந்த கருத்துகள்தான் இருக்கும். 40 வருஷத்துக்கு முன்னால, திராவிட கருத்துகள்தான் வந்திருக்குமே ஒழிய, வேற மாதிரி எம்மனசுல எதுவுமே கிடையாது. தமிழ்நாட்டு தலைவர்கள் என இந்த மனசோடுதான் இருந்துகொண்டிருக்கிறேன். நான் எடுத்த படங்களில் அதுதான் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. இனிமேலும், அதுதான் எதிரொலிக்கும். இதுதான் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.” என்று கூறினார்.


  • 18:14 (IST) 20 Apr 2022
    சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த்(32) என்பவரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இந்த வெடிவிபத்தில் அரவிந்த் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு வேதனை அடைந்தேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.


  • 17:53 (IST) 20 Apr 2022
    அதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு; தங்க தமிழ்ச்செல்வன் ஐகோர்ட்டில் சாட்சியம்

    அதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் நிலானி தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், அந்த தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட, தற்போது திமுக மாவட்ட செயலாளராக உள்ள தங்க தமிழ்ச்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். சொத்து கடன் விவரங்களை மறைத்ததாக சாட்சியத்தில் தகவல் தெரீவித்தார். விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


  • 16:42 (IST) 20 Apr 2022
    தயாரிப்பாளர் மோசடி புகார் : நடிகர் விமல் விளக்கம்

    மன்னர் வகையறா' பட தயாரிப்பாளர் அளித்த புகாருக்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார். இதில் போலி ஆவணங்கள் மூலம் தன் மீது பொய்யான புகார்கள் அளிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


  • 16:41 (IST) 20 Apr 2022
    பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு தனி வீடு அறிவிப்பு

    நில உரிமை உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என்றும், சேதமடைந்த 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் ₨1200 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யப்படும் என்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 40,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ₨100 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.


  • 16:41 (IST) 20 Apr 2022
    பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு தனி வீடு அறிவிப்பு

    நில உரிமை உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என்றும், சேதமடைந்த 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் ₨1200 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யப்படும் என்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 40,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ₨100 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.


  • 16:39 (IST) 20 Apr 2022
    சிறையில் கைதி இறந்த விவகாரம் : உள்துறை கூடுதல் செயலர் பதிலளிக்க உத்தரவு

    சிவகங்கை திறந்தவெளி சிறையில் இறந்த கருப்பசாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி தொடர்ந்த வழக்கில், உள்துறை கூடுதல் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கருப்பசாமி தற்கொலை செய்து கொண்டதாக சிறைக்காவலர்களால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


  • 16:00 (IST) 20 Apr 2022
    ஐஐடி மாணவி பாலியல் வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

    சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஐஐடி பேராசிரியர்கள் எடமன பிரசாத், ரமேஷ் கர்தாஸ் ஆகியோருக்கு இருவருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறையிடம் அனுமதி பெறாமல் மாநிலத்தை விட்டு செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.


  • 15:58 (IST) 20 Apr 2022
    குடும்ப தலைவிகள் பெயரில் வீடு வழங்க முதல்வர் உத்தரவு

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை குடும்ப தலைவிகள் பெயரில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் வாழ தகுதி இல்லாத வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 30,392 குடியிருப்புகள் வாழ தகுதியில்லாத குடியிருப்புகளாக கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.


  • 15:58 (IST) 20 Apr 2022
    குடும்ப தலைவிகள் பெயரில் வீடு வழங்க முதல்வர் உத்தரவு

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை குடும்ப தலைவிகள் பெயரில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் வாழ தகுதி இல்லாத வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.


  • 15:58 (IST) 20 Apr 2022
    குடும்ப தலைவிகள் பெயரில் வீடு வழங்க முதல்வர் உத்தரவு

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை குடும்ப தலைவிகள் பெயரில் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் வாழ தகுதி இல்லாத வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 30,392 குடியிருப்புகள் வாழ தகுதியில்லாத குடியிருப்புகளாக கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.


  • 15:57 (IST) 20 Apr 2022
    இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி

    இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


  • 15:30 (IST) 20 Apr 2022
    பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு முகக்கவசம் கட்டாயம் - சுகாதாத்துறை

    பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சைதாப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர் ஓய்வு அறையை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    அப்போது பேசிய மா.சுப்பிரமணியன், நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், தமிழகத்தில் முக‌க் கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற முறையே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முக‌க்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


  • 15:25 (IST) 20 Apr 2022
    மெரினா முதல் கோவளம் இடையிலான சாலை சீரமைக்கப்படும் - வீட்டு வசதித்துறை அமைச்சர்

    தமிழகத்தில் 60 இடங்களில் 10 ஆயிரம் அரசு வாடகை குடியிருப்புகள் உடனடியாக மாற்றி அமைக்கப்படும். மெரினா முதல் கோவளம் இடையிலான சுமார் 30 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை ₨100 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

    செங்கல்பட்டு, திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் அமைக்கப்படும் பன்னடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.


  • 15:21 (IST) 20 Apr 2022
    மெரினா முதல் கோவளம் இடையிலான சாலை சீரமைக்கப்படும் - வீட்டு வசதித்துறை அமைச்சர்

    தமிழகத்தில் 60 இடங்களில் 10 ஆயிரம் அரசு வாடகை குடியிருப்புகள் உடனடியாக மாற்றி அமைக்கப்படும். மெரினா முதல் கோவளம் இடையிலான சுமார் 30 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை ₨100 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

    செங்கல்பட்டு, திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் அமைக்கப்படும் பன்னடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.


  • 15:00 (IST) 20 Apr 2022
    சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின்!

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், சிவசங்கர் பாபாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.


  • 14:49 (IST) 20 Apr 2022
    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் வரும் 24ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 14:37 (IST) 20 Apr 2022
    கோத்தபய ராஜபக்ஸே பதவி விலக முடிவு!

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்களின் தீவிர போராட்டத்துக்கு பணிந்து கோத்தபய ராஜபக்ஸே பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 13:58 (IST) 20 Apr 2022
    மாஸ்க் அணியாவிட்டால், ரூ. 500 அபராதம்!

    டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாஸ்க் அணியாவிட்டால், ரூ. 500 அபராதம் விதிக்க டெல்லி துணை நிலை ஆளுநர் தலைமையில் நடந்த பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


  • 13:38 (IST) 20 Apr 2022
    கூடுதல் உறுப்பினர் நியமனம்!

    முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்பார்வை குழுவில் ஏற்கெனவே 3 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 3 பேரை சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


  • 13:36 (IST) 20 Apr 2022
    கூடுதல் உறுப்பினர் நியமனம்!

    முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்பார்வை குழுவில் ஏற்கெனவே 3 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 3 பேரை சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


  • 13:16 (IST) 20 Apr 2022
    தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம்!

    காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. உயிரை பணயம் வைத்து பணியாற்றும் காவலர்கள் மத்தியில் இக்கருத்து மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்க கோரி டிஜிபி தரப்பில் மேல்முறையீடு செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  • 13:08 (IST) 20 Apr 2022
    ஆளுநரை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை..

    ஆளுநரை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. ஆளுநரின் கார் மீது கொடி கம்பம் விழுந்த வீடியோவை பார்த்து விட்டு முதல்வர் பேச வேண்டும். ஆளுநர் கான்வாய் மோசமான நிலையில் கூட்டத்தை கடந்து சென்றுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.


  • 12:49 (IST) 20 Apr 2022
    பாஜகவின் அனைத்து திட்டங்களுக்கும் தமிழில் பெயர் வைக்கப்படும் - அண்ணாமலை

    பாஜகவின் அனைத்து திட்டங்களுக்கும் இனி தமிழில் பெயர் வைத்து அழைக்கப்படும். இந்தி பெயர் கொண்ட திட்டமாக இருந்தாலும் தமிழக பாஜக சார்பில் அந்த திட்டத்திற்கு தமிழில் பெயர் வைக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


  • 12:37 (IST) 20 Apr 2022
    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் நாளை விசாரணை

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் நாளை விசாரணை. தனிப்படை போலீசார் சென்னை வந்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல். 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது


  • 12:27 (IST) 20 Apr 2022
    பிரதமரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் - இயக்குநர் பாக்யராஜ்

    பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ளலாம். தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார் என இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.


  • 12:14 (IST) 20 Apr 2022
    'கற்கள், கொடிகள் வீசப்பட்டது என்பது அபாண்டமான பொய்' - ஸ்டாலின்

    மயிலாடுதுறையில் ஆளுநருக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் மீது தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து போலீசார் கட்டுப்படுத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது


  • 11:46 (IST) 20 Apr 2022
    சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

    மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.


  • 11:30 (IST) 20 Apr 2022
    "தமிழ்நாட்டில் பாஜக திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது" - திருமாவளவன்

    தமிழ்நாட்டில் பாஜக திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது, திசை திருப்பும் முயற்சி என சீர்காழியில் திருமாவளவன் பேட்டியளித்தார்.


  • 11:28 (IST) 20 Apr 2022
    இந்திக்கு பட்டுக்கம்பளம் விரித்ததை மறைக்க ஓபிஎஸ் முயற்சி - அமைச்சர் தங்கம் தென்னரசு

    கோயில்களை திமுக இடிக்கின்றது என்ற ஓபிஎஸ் இன் விமர்சனம் விரக்தியின் வெளிப்பாடு. இந்தி மொழிக்கு அதிமுக பட்டுக் கம்பளம் விரித்த வரலாற்றை மூடி மறைக்க ஓபிஎஸ் முயற்சிக்கிறார். மொழிப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


  • 11:22 (IST) 20 Apr 2022
    டெல்லி ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க தடை

    டெல்லியில் வன்முறை வெடித்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்க தற்காலிக தடை. தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவ. போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கிய நிலையில் தடை


  • 11:06 (IST) 20 Apr 2022
    500 நியாயவிலைக்கடைகளுக்கு நிரந்தர கட்டடம்-அமைச்சர்

    நடப்பாண்டு முதல் ஆண்டுதோறும் 500 நியாயவிலைக்கடைகளுக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.


  • 10:49 (IST) 20 Apr 2022
    தமிழ்நாட்டில் 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் -வேளாண் அமைச்சர்

    நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.36 கோடி செலவில் தமிழ்நாட்டில் 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


  • 10:49 (IST) 20 Apr 2022
    தமிழகத்தில் 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்-வேளாண் அமைச்சர்

    நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.36 கோடி செலவில் தமிழ்நாட்டில் 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


  • 10:42 (IST) 20 Apr 2022
    மதுரையில் கோளரங்கம் அமைக்கப்படுமா?

    தமிழ்நாட்டில் 4 கோளரங்கம் இருந்தாலும், தென்மாவட்டங்களில் ஏதும் இல்லை; மதுரையில் உடனடியாக கோளரங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? ராஜன் செல்லப்பா எம்எல்ஏ என கேள்வி எழுப்பியுள்ளார்.


  • 10:31 (IST) 20 Apr 2022
    ஆற்காடு தொகுதியில் நியாயவிலைக்கடை-அமைச்சர் உறுதி

    ஆற்காடு தொகுதி புங்கனூர் ஊராட்சி எல்லாசிகுடிசை, வரதேசி நகர், விளாப்பாக்கம் பேரூராட்சி, சின்னதக்கை பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.


  • 10:29 (IST) 20 Apr 2022
    சேலத்தில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக்-மாநகராட்சி எச்சரிக்கை

    சேலத்தில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சிசிடிவி மூலம் கண்காணித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 10:22 (IST) 20 Apr 2022
    சென்னையில் மழை நீர் வடிகால் கட்டும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர்

    சென்னை, கொருக்குப்பேட்டையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், கால்வாய் கட்டும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.


  • 09:59 (IST) 20 Apr 2022
    "கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்"

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்டங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


  • 09:56 (IST) 20 Apr 2022
    மாஸ்க் அணிவது அவசியம்-சுகாதார அமைச்சர்

    மாஸ்க் அணிவது அவசியம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.


  • 09:27 (IST) 20 Apr 2022
    3 நாடுகளுக்கு பயணம் செய்ய பிரதமர் திட்டம்

    ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.


  • 09:18 (IST) 20 Apr 2022
    கூத்தாண்டவர் கோயில் திருவிழா தொடங்கியது

    கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது.


  • 08:55 (IST) 20 Apr 2022
    "தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்"

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


  • 08:38 (IST) 20 Apr 2022
    அதிமுக செய்யாத சாதனையை திமுக செய்துள்ளது-முதல்வர்

    10 ஆண்டுகளில் அதிமுக செய்யாததை 10 மாதங்களில் செய்த திமுக என்று முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.


  • 08:33 (IST) 20 Apr 2022
    இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு

    இலங்கையில் பெட்ரோல் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர்.


  • 08:26 (IST) 20 Apr 2022
    தமிழக ஆளுனர் இன்று டெல்லி பயணம்

    ஆளுனர் ரவி இன்று டெல்லி செல்கிறார். மயிலாடுதுறையில் ஆளுனர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், இவரது டெல்லி பயணம் அமைந்துள்ளது.


Tamil Nadu Live Updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment