Advertisment

Tamil news Highlights: காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர்?

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Latest News 21 April 2022- தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil news Highlights: காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர்?

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 15வது நாளாக இன்றும் மாற்றமில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu news update: ஆளுனரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

"அரசியல் செய்யவில்லை"
ஆளுனரின் பாதுகாப்பு வாகனங்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.

India News Update: பாரம்பரிய மருந்துகளுக்கு விரைவில் ஆயுஷ் முத்திரை அறிமுகம் செய்யப்படும். பாரம்பரிய சிகிச்சை பெற வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசாவும் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

World news update: தொடர்ந்து போராட்டம் நடந்துவரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

IPL Update: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியை டெல்லி கேபிட்டல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 6 ஆட்ங்களில் டெல்லி அணி 3ஆவது வெற்றி கண்டது. 7 ஆட்டங்கள் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் 3 வெற்றி 4 தோல்விகளை கண்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


  • 20:36 (IST) 21 Apr 2022
    ஜஹாங்கீர்புரி பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்

    டெல்லியில் வன்முறை சம்பவம் நடந்த ஜஹாங்கீர்புரி பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்காலிக கண்காணிப்பு நிலையங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


  • 20:16 (IST) 21 Apr 2022
    தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா; சென்னையில் மேலும் 10 பேர் பாதிப்பு

    தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  • 20:11 (IST) 21 Apr 2022
    சிறுவர் பூங்கா நாளை முதல் திறப்பு – வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம்

    அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 7 பார்வையாளர்கள் காணும் இருப்பிடங்கள் படிப்படியாக திறக்கப்படும். ஊர்வன இல்லம், இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவர் பூங்கா நாளை முதல் திறக்கப்படும். இதில் சிறுவர் பூங்காவில் வார நாட்களில் மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது


  • 19:53 (IST) 21 Apr 2022
    விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன்; இப்போது விரிவாக கூற இயலாது - சசிகலா

    விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். இப்போது விரிவாக கூற இயலாது. நாளை விசாரணை நிறைவடைந்த பின் விரிவாக பேசுகிறேன் என கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு பின் வி.கே.சசிகலா கூறியுள்ளார்.


  • 19:38 (IST) 21 Apr 2022
    அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயணத்திற்கு இந்தியா கண்டனம்

    அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரின் இல்ஹான் ஓமர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பயணம் செய்தநிலையில், ​​இந்தியா அவரது இந்த பயணத்தை கண்டித்தது மற்றும் இது அவரது "குறுகிய எண்ணம் கொண்ட அரசியல்" என்று கூறியதோடு, "பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை" மீறுவதாக உள்ளதாகவும் கூறியது.


  • 19:30 (IST) 21 Apr 2022
    திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

    ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி கோவில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய மே 7ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


  • 18:38 (IST) 21 Apr 2022
    பிளாஸ்டிக் தடை; சென்னை ஐகோர்ட் முக்கிய அறிவுறுத்தல்

    பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடுக்காத வரையில் பெரிய அளவில் பலன் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை உறுதி செய்ததை எதிர்த்த மறு ஆய்வு வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

    மேலும், பாலை ஏன் முன்பு போல பாட்டிலில் விற்கக்கூடாது? அரசு நடத்தும் கடைகளிலேயே பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால், எப்படி தடையை அமல்படுத்த முடியும்? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கி, வழக்கு விசாரணையை ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


  • 18:15 (IST) 21 Apr 2022
    பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தல் – சுகாதாரத்துறை செயலாளர்

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தினசரி பரிசோதனைகளை 25 ஆயிரம் அளவுக்கு அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சென்னை ஐ.ஐ.டி.யில் ஆய்வுக்குப்பின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்


  • 17:39 (IST) 21 Apr 2022
    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து சசிகலாவிடம் கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. போலீசார் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.


  • 16:59 (IST) 21 Apr 2022
    தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து முதல்வர் கருத்து

    தாலிக்கு தங்கம் திட்டத்தை குறைப்பாடுகளை கலைந்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். திட்டம் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததால்தான் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்


  • 16:57 (IST) 21 Apr 2022
    கர்நாடகாவிலும் ஆட்சி அமைப்போம் - அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஆட்சி அமைப்போம் சிபிஐ என் வீட்டில் சோதனை செய்தனர்; முடிவில் 'நேர்மையான முதல்வர்' என்ற சான்றிதழ் கிடைத்தது என கர்நாடகாவில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றியுள்ளார்.


  • 16:55 (IST) 21 Apr 2022
    நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தகவல்

    நளினி உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தையும், ஆளுநர் கடந்த ஜனவரி 27ஆம் தேதியே குடியரசு தலைவருக்கு அனுப்பி விட்டார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்யக் கோரிய நளினியின் வழக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தடா சட்டப்பிரிவுகளின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளாரா? என்பது குறித்து நளினி தரப்பு விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது


  • 16:53 (IST) 21 Apr 2022
    நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தகவல்

    நளினி உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தையும், ஆளுநர் கடந்த ஜனவரி 27ஆம் தேதியே குடியரசு தலைவருக்கு அனுப்பி விட்டார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்யக் கோரிய நளினியின் வழக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தடா சட்டப்பிரிவுகளின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளாரா? என்பது குறித்து நளினி தரப்பு விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது


  • 16:15 (IST) 21 Apr 2022
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய ஆடம் மிலனே

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆடம் மில்னே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது மில்னேவுக்கு பதிலாக இலங்கை வீரர் மதீஷ பதிரண அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 16:12 (IST) 21 Apr 2022
    10, 11, 12 வகுப்பு ஹால்டிக்கெட்டுகள் நாளை முதல் பதிவிறக்கம்

    10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


  • 15:51 (IST) 21 Apr 2022
    விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் – அக்ஷைகுமார் உறுதி

    உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வரும் பாலிவுட் நட்சத்திரம் அக்‌ஷய் குமார், விமல் என்ற குட்கா நிறுவனத்தின் 'பான் மசாலா' விளம்பரத்தில் நடித்திருந்தார். அவருடன் சேர்ந்து ஷாருக் கானும், அஜய் தேவ்கானும் நடித்திருந்தனர். புகையிலை விளம்பரத்தில் நடித்ததற்காக அக்‌ஷய் குமார் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால், பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை கைவிடும் முடிவை அக்‌ஷய் குமார் எடுத்துள்ளார்.


  • 15:35 (IST) 21 Apr 2022
    கேஜிஎஃப் பட நிறுவத்தில் இணைந்த இயக்குநர் சுதா கொங்காரா

    இறுதிச்சுற்று, சுரரைப்போற்று படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் சுதா கொங்காரா அடுத்து கேஜிஎஃப் டத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் இயக்க உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


  • 14:44 (IST) 21 Apr 2022
    திண்டுக்கல், தேனியில் ஏப்.30ல் முதல்வர் சுற்றுப்பயணம்

    வரும் ஏப்ரல் 30ம் தேதி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கவுள்ளார்.


  • 14:21 (IST) 21 Apr 2022
    சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று

    சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேருக்கு நடத்திய பரிசோதனையில், 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஐஐடி வளாகத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு


  • 14:20 (IST) 21 Apr 2022
    டெல்லி ஆக்கிரமிப்பு பணி இடிப்பு விவகாரம் - உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேயருக்குத் தெரிவித்த பிறகு இடிப்பு பணி தொடர்ந்தால் தீவிரமாக பார்ப்போம். மேஜை, நாற்காலிகளை அகற்ற உங்களுக்கு புல்டோசர்கள் தேவையா ? இவ்விவகாரம் குறித்து இரண்டு வாரங்கள் கழித்து விசாரிக்கப்படும். அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர்.


  • 13:57 (IST) 21 Apr 2022
    பெண்கள் விடுதியில் பெண் உடையுடன் சுற்றியவர் கைது

    கோவை பாரதியார் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் பெண் உடையுடன் சுற்றித்திரிநந்த சுரேந்தர் கைது. விடுதியில் மர்ம நபர் உலாவி வருவதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஒருவர் கைது


  • 13:46 (IST) 21 Apr 2022
    மு.க. ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

    இந்தியாவில் நம்பர் ஒன் முதலமைச்சர் என்ற பெயருடன் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் புகழாரம்


  • 13:44 (IST) 21 Apr 2022
    மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா!

    உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு. ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு புதிய சுதந்திரம் கிடைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு


  • 13:25 (IST) 21 Apr 2022
    ஆசிரியரை மிரட்டிய மேலும் 2 மாணவர்கள் சஸ்பெண்ட்

    திருப்பத்தூர் ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய விவகாரத்தில் மேலும் 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியரை மிரட்டிய மாணவருடன் உடனிருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


  • 13:15 (IST) 21 Apr 2022
    சசிகலாவிடம் துருவி துருவி விசாரணை

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை. கோடநாடு பங்களாவில் என்னென்ன ஆவணங்கள், பணம், நகைகள் இருந்தன என்பது பற்றி மேற்கு மண்டல் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை


  • 13:11 (IST) 21 Apr 2022
    இந்தியாவில் 1,500 சட்டங்களை அகற்றியுள்ளேன் - பிரதமர் மோடி

    இந்தியாவில் பல நூறு சட்டங்கள் மக்களுக்கு சுமையாக இருந்தது. நான் பிரதமரான பின் முதல் 5 வருடங்களில் 1,500 சட்டங்களை அகற்றியுள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


  • 13:10 (IST) 21 Apr 2022
    மகளிருக்கான இலவச பேருந்து - 91.85 கோடி பயணங்கள்

    அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டத்தின் மூலம் இதுவரை 91.85 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்


  • 12:49 (IST) 21 Apr 2022
    பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 12:38 (IST) 21 Apr 2022
    மிதமான மழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 12:24 (IST) 21 Apr 2022
    தமிழகத்தில் மின்வெட்டு.. டி.டி.வி. கண்டனம்!

    தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை' என சட்டப்பேரவையில் அமைச்சர் கூறிய நேரத்தில் நேற்று பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. மத்திய அரசு மீது பழிபோடாமல் மின்வெட்டு தொடராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.


  • 12:01 (IST) 21 Apr 2022
    ஜஹாங்கீர் புரி ஆக்கிரமிப்பு.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    டெல்லி, ஜஹாங்கீர் புரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் விவகாரத்தில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தற்போது உள்ள நிலையே தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 11:53 (IST) 21 Apr 2022
    ஓபிஎஸ் வலியுறுத்தல்!

    பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தீ விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஒபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.


  • 11:52 (IST) 21 Apr 2022
    தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி..

    தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகே மெகா விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒலிம்பிக் தங்கம் தேடுதல் என்ற திட்டம் ரூ. 25 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென பிராமாண்ட மைதானம் அமைக்கப்படும். வட சென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் குத்துச் சண்டை மைதானம் அமைக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்


  • 11:21 (IST) 21 Apr 2022
    விளையாட்டு உடலை துடிப்புடன் வைத்துள்ளது.. ஸ்டாலின்!

    அறிவு சொத்து போல் உடல் வலிமையும் ஒரு சொத்து; விளையாட்டு உடலை துடிப்புடன் வைத்துள்ளது. தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவர். சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..


  • 11:17 (IST) 21 Apr 2022
    செல்ஃபி எடுத்தால் ரூ. 2000 அபராதம்!

    ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுப்போருக்கு ரூ. 2000 அபராதம், ரயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வோருக்கு ரூ. 500 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தென்னக ரயில்வே எச்சரித்துள்ளது.


  • 11:17 (IST) 21 Apr 2022
    சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது!

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. சென்னை, தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • 10:55 (IST) 21 Apr 2022
    அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்திப்பு

    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்திக்கவுள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா மீது கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


  • 10:42 (IST) 21 Apr 2022
    ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால், ₹2000 அபராதம்!

    ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால், ₹2000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.


  • 10:31 (IST) 21 Apr 2022
    கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    நேற்றைய பாதிப்பு 2,067 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 2,380 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 13,433 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.


  • 10:13 (IST) 21 Apr 2022
    நீர்வளத் துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள்-முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைப்பு

    சென்னை, தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.6.82 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


  • 09:52 (IST) 21 Apr 2022
    இந்தியாவில் இங்கிலாந்து பிரதமர்

    இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். குஜராத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போரிஸ், நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்.


  • 09:40 (IST) 21 Apr 2022
    சென்னையில் வாடகைக் கார் கட்டணம் உயர்வு

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் மும்பை, டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் கி.மீ.-க்கு ரூ.2-ரூ.10 வரை வாடகைக் கார் கட்டணம் உயர்ந்துள்ளது.


  • 09:28 (IST) 21 Apr 2022
    பிரதமருக்கு அதிமுக நிர்வாகி புகார் மனு

    ஆளுநரின் சுற்றுப் பயணத்தின்போது பாதுகாப்பு குறைபாடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என திறம்பட செயலாற்றாத திமுக அரசின் மீது அரசியல் சாசனத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமருக்கு அதிமுக நிர்வாகி ஆர்.எம்.பாபு முருகவேல் மனு அனுப்பியுள்ளார்.


  • 09:08 (IST) 21 Apr 2022
    கேரளாவில் மே 1 முதல் பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்கிறது!

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக கேரளாவில் மே 1 முதல் பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.


  • 09:02 (IST) 21 Apr 2022
    ஆளுனர் பாதுகாப்பு- அதிமுக புகார்

    தமிழக ஆளுனர் உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு அளித்துள்ளது.


  • 08:38 (IST) 21 Apr 2022
    குடிமைப்பணி அலுவர்களிடையே பிரதமர் உரை

    டெல்லி, விஞ்ஞான் பவனில் குடிமைப்பணி அலுவலர்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

    முன்னோடி திட்டங்களில் சிறந்து விளங்கிய 16 பேருக்கு விருதுகளை வழங்குகிறார் பிரதமர்.


Tamil Nadu Live Updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment