பெட்ரோல் டீசல் விலை நிவலரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 111 நாளாகா இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.75, டீசல் விலை ரூ92.34 மற்றும் இயற்கை எரிவாயு ரூ87.50 விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 07, 2024 07:04 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
Jul 06, 2024 22:27 ISTஜெய் பீம், வீரவணக்கம் என முழக்கம்; ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்கள் ஒப்படைப்பு!
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உடற்கூராய்வுக்கு பின்னர் எம்பார்மிங் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள், ஜெய் பீம், வீரவணக்கம் என முழக்கமிட்டனர்.
-
Jul 06, 2024 22:10 ISTஆம்ஸ்ட்ராங் வழக்கு- ஞாயிறு விசாரணை
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக்கோரும் மனு மீது ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. இந்த மனுவை ஆம்ஸ்ட்ராங் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
-
Jul 06, 2024 21:11 ISTஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கு: இன்று இரவே விசாரணை
பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். -
Jul 06, 2024 20:42 ISTஆம்ஸ்ட்ராங் படுகொலை - சாலை மறியல்
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனை நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
-
Jul 06, 2024 17:53 ISTஆம்ஸ்ட்ராங் படுகொலை; தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: எல். முருகன்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் எல். முருகன், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; சட்டம் ஒழுங்கை பேணுவதில் தி.மு.க அரசு அக்கறை காட்டவில்லை. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர கொலையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என்றார். -
Jul 06, 2024 16:56 ISTஆம்ஸ்ட்ராங் படுகொலை : உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை, எம்பார்மிங் முடிந்த நிலையில் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு.
-
Jul 06, 2024 16:55 ISTமருத்துவமனையில் திரண்டுள்ள பகுஜன் சமாஜ், புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டம்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் மருத்துவமனையில் திரண்டுள்ள பகுஜன் சமாஜ், புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டம்.
-
Jul 06, 2024 16:54 ISTஜூலை 22ம் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்
ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு; மக்களவையில் ஜூலை 23ம் தேதி 2024-25ம் நிதியண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
-
Jul 06, 2024 16:53 IST7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jul 06, 2024 15:59 ISTஆம்ஸ்ட்ராங்கை நேற்றிரவு கொலை செய்ததும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை வைத்த கும்பல்
ஆம்ஸ்ட்ராங்கை நேற்றிரவு கொலை செய்ததும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை வைத்த கும்பல் . நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் ஆம்ஸ்ட்ராங்கை கொன்று விட்டு கத்தியை வைத்ததாக தகவல் கத்தியை வைத்தபின் திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருடன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தனர் கொலை செய்தபின் பதற்றத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக்கத்திகளை சம்பவ இடத்திலேயே விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.
-
Jul 06, 2024 15:38 ISTகடந்த ஒரு மாத காலம் பணியாற்றியது போல அடுத்த 2 வருடங்களுக்கு பாஜகவினர் பணியாற்ற வேண்டும்: அண்ணாமலை
“பாஜகவினரிடம் சிந்தாந்தம், நேர்மை உள்ளது; பாஜகவில் தனிமனித துதி பாடலுக்கு இடம் கிடையாது; பாஜகவிற்கு உத்வேகம் தான் தேவை; கடந்த ஒரு மாத காலம் பணியாற்றியது போல அடுத்த 2 வருடங்களுக்கு பாஜகவினர் பணியாற்ற வேண்டும்” - சென்னையில் பாஜக செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேச்சு
-
Jul 06, 2024 15:06 ISTதற்போதைய தகவலின்படி ஆம்ஸ்ட்ராங் சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை - சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி
அரசியல் காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படவில்லை; முழுமையான விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும்; ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக தகவல் இல்லை; கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இல்லை; தற்போதைய தகவலின்படி ஆம்ஸ்ட்ராங் சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை” - சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி
-
Jul 06, 2024 14:55 ISTபகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்-ஐ அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கினர்
பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்-ஐ அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கினர்; இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது; இந்த கொலை வழக்கு தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது - சென்னை வேப்பேரி, காவல் ஆணையர் அலுவலத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி
-
Jul 06, 2024 14:35 ISTஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக போலீசாருக்கு எந்தத் தகவலும் வரவில்லை: காவல் ஆணையாளர்
ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக போலீசாருக்கு எந்தத் தகவலும் வரவில்லை" - சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
-
Jul 06, 2024 14:17 ISTஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் : உணவு டெலிவரி ஊழியர்களை விசாரிக்க போலீசார் திட்டம்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் - உணவு டெலிவரி ஊழியர்களை விசாரிக்க போலீசார் திட்டம் உணவு டெலிவரி செய்பவர்கள் போல ஸ்விக்கி உடையில் இருந்த 3 பேர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததால் போலீசார் முடிவு கொலை நடந்த இடத்தில் உள்ள உணவகத்திற்கு வந்த ஸ்விக்கி ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தவும் திட்டம்.
-
Jul 06, 2024 13:24 ISTஎம்பாமிங் செய்யப்படுகிறது ஆம்ஸ்ட்ராங் உடல்
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் எம்பாமிங் செய்யப்படுகிறது நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் எம்பாமிங் செய்யப்படும் ஆம்ஸ்ட்ராங் உடல் 12 மணிக்கு தொடங்கிய எம்பாமிங் அடுத்த 2 மணி நேரம் வரை நடைபெறும் என மருத்துவர்கள் தகவல்
-
Jul 06, 2024 13:23 ISTஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை: முக்கிய தகவல் வெளியானது
ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தில் வெட்டிய கொலையாளிகள் கணுக்காலில் வெட்டி நிலைகுலையச் செய்த பின் சரமாரியாக வெட்டிய கொலையாளிகள் கொலையாளிகள் வெட்டியதில் ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாக தகவல் ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அவரை எவ்வாறு கொலை செய்வது என திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய கொடூரம் வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் தயார் நிலையில் வந்தது அம்பலம்
-
Jul 06, 2024 12:55 ISTநீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு மறுஅறிவுப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவுப்பு.
நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை ஜூலை 8ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நீட் யு.ஜி கலந்தாய்வின் அட்டவணை வெளியாவதில் தாமதம்.
-
Jul 06, 2024 12:54 ISTஉண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: செல்வ பெருந்தகை
"ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்"
"விஜயகாந்திற்கு கொடுக்கப்பட்டது போலவே அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்"
"ஆம்ஸ்ட்ராங்கின் இணையரிடம் ராகுல்காந்தி பேச உள்ளார்"
"யாராக இருந்தாலும் உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்- தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை
-
Jul 06, 2024 12:24 ISTஅரசுக்கும், காவல்துறைக்கும் விடுக்கப்பட்ட சவால்: திருமா பேச்சு
பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும்,
கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க
மக்கள் பிரச்சினைகளில் தலையிட்டதால் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது"
ஆம்ஸ்ட்ராங்கிற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும்"
தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் விடுக்கப்பட்ட சவால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை-வி.சி.க. தலைவர் திருமாவளவன்
-
Jul 06, 2024 12:23 ISTஆம்ஸ்ட்ராங் கொலை: ராகுல் இரங்கல்
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு
-
Jul 06, 2024 11:49 ISTசென்னை வரும் மாயாவதி: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என மாயாவதி கோரிக்கை. மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நாளை சென்னை வருகிறார். நாளை காலை சென்னை வரும் அவர் அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் லக்னோ செல்கிறார்.
-
Jul 06, 2024 11:45 ISTசென்னையில் பாஜக கூட்டம்: சிவராஜ் சிங் பங்கேற்பு
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் பாஜக மாநில செயற்குழு கூட்டம்
செயற்குழு கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் பங்கேற்பு
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோரும் பங்கேற்பு
மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்
-
Jul 06, 2024 11:43 ISTபுதிய குற்றவியல் சட்டம்- திமுக உண்ணாவிரத போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல்
திமுக சட்டத்துறை சார்பில் உண்ணாவிரத போராட்டம்
அமைச்சர் துரைமுருகன், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்பு
-
Jul 06, 2024 11:41 ISTபழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயிற்சி பெற்ற பழங்குடியின இளைஞர்கள்,
146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார், முதலமைச்சர் ஸ்டாலின்
பன்னாட்டு, இந்திய நிறுவனங்களில் பணிக்கு தேர்வான பழங்குடியின இளைஞர்கள்
-
Jul 06, 2024 11:40 ISTபகுஜன் சமாஜ் தொண்டர்கள் கைது
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பகுஜன் சமாஜ் தொண்டர்கள் கைது
கலைந்து செல்ல மறுத்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போலீசார்
மருத்துவமனையில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பார்க்க வி.சி.க தலைவர் திருமாவளவன், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் வருகை
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடல் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பகுஜன் சமாஜ் தொண்டர்கள் கைது
-
Jul 06, 2024 11:23 ISTஆம்ஸ்ட்ராங் கொலை: ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்
பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை
ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை
ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்த திருமலை
-
Jul 06, 2024 10:53 ISTதங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.480 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.480 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 54,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து 6,820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 06, 2024 10:51 ISTஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியல்: சென்னையில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை முன் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருவதன் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சாலையின் இரு புறத்திலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காலையிலேயே ராஜீவ்காந்தி மருத்துவமனை வழியே செல்வதை தவிர்க்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டிருந்தனர். சாலை மறியல் போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை ஏற்க பகுஜன் சமாஜ் தொண்டர்கள் மறுத்துள்ளனர்.
-
Jul 06, 2024 10:10 ISTகுற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை கிடைக்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை கிடைக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
-
Jul 06, 2024 09:35 ISTதிமுக எம்.பி திருச்சி சிவா, மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து கடிதம்
இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றும் பாரதிய சாக் ஷியா ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற்று திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, திமுக எம்.பி திருச்சி சிவா, மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளார்
-
Jul 06, 2024 08:50 ISTராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jul 06, 2024 08:45 ISTசட்டம் - ஒழுங்கை விரைந்து சீர் செய்ய வேண்டும்: சீமான் கோரிக்கை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள், தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா?" என்கிற ஐயம் எழுவதாக கூறியுள்ளார் "சட்டம் - ஒழுங்கை விரைந்து சீர் செய்ய வேண்டும்" எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்
-
Jul 06, 2024 08:43 ISTதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Jul 06, 2024 08:42 ISTஆம்ஸ்ட்ராங் படுகொலை: தமிழக அரசுக்கு விஜய் கோரிக்கை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 06, 2024 08:09 ISTபொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்: அமைச்சர் ரகுபதி
மரண வீடுகளில் அரசியல் லாபம் தேடி அலையும் எதிர்க்கட்சித் தலைவர் பொய் மூட்டைகளை அவிழ்க்கிறார். கடந்த ஆட்சியில் சாத்தான்குளம் மரணங்களில் உண்மையை மறைத்ததுபோல் மறைத்தோமா? குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர்களைக் கொண்டிருந்தோமா? குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் சிக்கி ஆட்சியை நடத்திய இபிஎஸ்க்கு பேசுவதற்கு யோக்கியதை இல்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
Jul 06, 2024 07:31 ISTஇரவில் பரவலான மழை: சென்னையில் குளிர்ச்சியான சூழல்
சென்னையில், கிண்டி, சைதாப்போட்டை, நந்தனம், தியாகராய நகர் நுங்கம்பாக்கம்,தேனாம்பேட்டை, அண்ணாசாலை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஒரு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெற்றததால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
-
Jul 06, 2024 07:28 IST10 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கோவை, நீலகிரி, தேனி ஆகிய 10 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,
-
Jul 06, 2024 07:26 ISTடிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து
திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியவாறு தீ விபத்து நடந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.