Advertisment

Tamil News Today : மீன்வள மசோதா தாக்கல் செய்ய வேண்டாம்; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : மீன்வள மசோதா தாக்கல் செய்ய வேண்டாம்; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

ஆல்பா வகையை விட டெல்டா வகை அதிகம் பரவும்

ஆல்பா வகையைவிட டெல்டா வகை கொரோனா தொற்று 40 முதல் 60 சதவீதம் வரை அதிகமாகப் பரவக் கூடியது என கொரோனா தடுப்பு நிபுணர்கள் குழு தலைவரும், மருத்துவருமான என்.கே.அரோரா கூறியுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை என கூறினார்.

கல்லூரிகளில் சேர 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கலை, அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 26ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கொரோனா 3வது அலை - ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

கொரோனா 3வது அலை குறித்த அச்சம் நீடிக்கும் நிலையில், 30 நாட்களுக்குள் 75 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டால் இறப்பு எண்ணிக்கையை 37 சதவிகிதம் வரை குறைக்கலாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 23:33 (IST) 20 Jul 2021
    இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா போராடி வெற்றி

    இலங்கை - இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று கொழும்பு பிரேமதாசா விளையாட்டரங்கத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 50 ரன்ககளும் சரித் அசலங்கா 65 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் யுஸ்வேந்திர சாஹல் தலா 3 விக்கெட்டுளை வீழ்த்தினார்கள்.

    276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 116 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். க்ருனால் பாண்ட்யா ஓரளவு நிலைத்து விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த தீபக் சாஹர் நிலைத்து நின்று விளையாடி வெற்றிக்கு இட்டுச் சென்றார். இந்திய அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. தீபக் சாஹர் நிலைத்து நின்று விளையாடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 69 ரன்கள் எடுத்தார். அவருடன் புவனேஷ் குமார் 19 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். இலங்கை அணி தரப்பில், வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


  • 21:55 (IST) 20 Jul 2021
    மீன்வள மசோதா தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    மீன்வள மசோதா தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,

    மீன்வள மசோதா கடலோர மீனவ சமூகங்களின் நலன்களுக்கு எதிராகவும் மாநில உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் வலியுறுத்தியுள்ளார்.


  • 20:38 (IST) 20 Jul 2021
    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,904 பேருக்கு கொரோனா; 30 பேர் பலி

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,904 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மாநிலத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 2,439 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


  • 20:07 (IST) 20 Jul 2021
    சென்னையில் நாளை 45 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிப்பு

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 45 தடுப்பூசி மையங்களிலும் நாளை தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மாநகராட்சி அறிவிப்பு; சென்னையில் நாளை கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 19:33 (IST) 20 Jul 2021
    இலங்கை கிரிக்கெட்; இந்திய அணிக்கு 276 ரன்கள் இலக்கு

    இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 50 ரன்களும், சரித் அஸ்லங்கா 65 ரன்களும் எடுத்தனர். 276 ரன்கள் என்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.


  • 18:27 (IST) 20 Jul 2021
    ஜெ.ஜெயலலிதா பல்கலை. அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் - அமைச்சர் பொன்முடி

    உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: “விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் உட்பட 4 மாவட்ட கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


  • 17:22 (IST) 20 Jul 2021
    நான் முதல்வராக அடித்தளமிட்டது இளைஞரணிதான் - ஸ்டாலின்

    திமுக இளைஞரணி தொடக்க நாளையொட்டி வாழ்த்து தெரிவித்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து நான் முதல்வராக அடித்தளமிட்டது இளைஞரணிதான் - என் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


  • 17:21 (IST) 20 Jul 2021
    அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை - ஜெயக்குமார்

    உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவை த்தலைவர் மதுசூதனனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் சசிகலா அதிமுக கொடி அமைந்த காரில் வந்து மதுசூதனனிடம் நலம் விசாரித்துளளார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார்.


  • 16:42 (IST) 20 Jul 2021
    குழந்தைகளை தாக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தினசரி 100க்கு மேற்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகள் மொத்த பாதிப்பு 5.5 சதவீதமான உயர்ந்துள்ளது.


  • 16:37 (IST) 20 Jul 2021
    பக்ரீத் பண்டிகை : திருபுவனத்தில் ஒரு கோடி வரை ஆடு விற்பனை

    நானை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில், காலை 5 மணி முதல் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ கோடிவரை ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 16:33 (IST) 20 Jul 2021
    அம்பேத்கரின் கனவை பிரதமர் மோடி நனவாக்குகிறார் - லால் சிங் ஆர்யா,

    சென்னையில் நடைபெற்ற பாஜக தமிழ்நாடு பட்டியல் இன அணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய பாஜக தேசிய பட்டியல் இன தலைவர் லால் சிங் ஆர்யா அம்பேத்கரின் கனவை பிரதமர் மோடி நனவாக்குகிறார் என்று கூறியுள்ளார்.


  • 16:29 (IST) 20 Jul 2021
    பிரதமர் மோடியின் முயற்சிக்கு முழு ஆதரவு : தம்பிதுரை

    நாடாளுமன்ற மக்களைவையில் இன்று உரையாற்றிய அதிமுக எம்பி தம்பிதுரை கொரோனா தொற்று பரவலை சிறப்பாக கையாண்ட அரசுக்கு நன்றி தெரிவித்ததை தொடர்ந்து பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு எங்களது முழு ஆதரவையும் கொடுப்போம்கொடுகப்போம் என்று கூறியுள்ளார்.


  • 15:55 (IST) 20 Jul 2021
    தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீடு

    தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் வழியில் படித்த மாணவர்களுக்காக 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து டின்பிஎஸ்சி குருப் 1 தேர்வு நடைபெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


  • 15:54 (IST) 20 Jul 2021
    தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீடு

    தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் வழியில் படித்த மாணவர்களுக்காக 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து டின்பிஎஸ்சி குருப் 1 தேர்வு நடைபெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


  • 15:30 (IST) 20 Jul 2021
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து

    இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தியாக பெருநாளான பக்ரீத் நல்வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.


  • 15:24 (IST) 20 Jul 2021
    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், மக்களவை ஜூலை 22 ஆம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

    மக்களவையில் 2வது நாளாக வேளாண் சட்டம், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளி ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், மக்களவை நாளை மறுநாள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 15:21 (IST) 20 Jul 2021
    குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீடு

    குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 15:11 (IST) 20 Jul 2021
    இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு

    கொழும்புவில் நடைபெறும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது


  • 15:09 (IST) 20 Jul 2021
    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், மக்களவை ஜூலை 22 ஆம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

    மக்களவையில் 2வது நாளாக வேளாண் சட்டம், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளி ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், மக்களவை நாளை மறுநாள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 14:59 (IST) 20 Jul 2021
    தடையின்றி ஓபிசி சாதிச்சான்றிதழ் வழங்குக - தமிழ்நாடு அரசு

    ஒபிசி பிரிவினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும்போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும் தடையின்றி ஓபிசி சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


  • 14:46 (IST) 20 Jul 2021
    தடுப்பூசி வந்தவுடன் தான் மக்களிடம் நம்பிக்கை பிறந்தது - திருச்சி சிவா

    கொரோனா 2வது அலையில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தடுப்பூசி வந்தவுடன் தான் மக்களிடம் நம்பிக்கை பிறந்தது எனவும் செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்படாமல் உள்ளது என்றும் திறக்குறளை மேற்கோள் காட்டி திருச்சி சிவா திமுக எம்.பி. திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.


  • 14:32 (IST) 20 Jul 2021
    அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

    அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, கோவை மாவட்டம் உடையம்பாளையத்தை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்பட்டுள்ளது.


  • 14:09 (IST) 20 Jul 2021
    தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதத்தை 100 சதவிகிதமாக்க நடவடிக்கை

    தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதத்தை 3 ஆண்டுகளில் 100 சதவிகிதமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


  • 13:56 (IST) 20 Jul 2021
    ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடி ஒதுக்கீடு

    ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் தமிழகத்துக்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,993.80 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது எனவும், நடப்பு நிதியாண்டில் ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.1,276.03 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.


  • 13:55 (IST) 20 Jul 2021
    ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம்

    ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியுள்ளார்.


  • 13:42 (IST) 20 Jul 2021
    தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    கிராமப்புற விளையாட்டு வீரர்கள், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சி அளிக்க, தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட உள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.


  • 13:33 (IST) 20 Jul 2021
    தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை - மா. சுப்பிரமணியன்

    தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தனியாருக்கு வழங்கப்படும் 25 % தடுப்பூசிகளை அரசுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.


  • 13:28 (IST) 20 Jul 2021
    லேசான மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 13:15 (IST) 20 Jul 2021
    மதுசூதனனை நலம் விசாரிக்க இபிஎஸ், சசிகலா வருகை

    அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக அவைத்தலைவர் மதுசூதனை நலம் விசாரிக்க இபிஎஸ், சசிகலா ஒரே நேரத்தில் வருகை தந்துள்ளார்.


  • 13:12 (IST) 20 Jul 2021
    7.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி

    மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.


  • 12:55 (IST) 20 Jul 2021
    புதுக்கோட்டை: விவசாயிகள் போராட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக நெல் கொள்முதல் செய்யாததால், 25 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் தேங்கி நிற்பதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


  • 12:53 (IST) 20 Jul 2021
    மீனவர்களை அழைத்துப் பேசவேண்டும்: தினகரன்

    சுருக்குமடி வலை விவகாரத்தில் போராடும் மீனவர்களை தமிழக அரசு அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


  • 12:52 (IST) 20 Jul 2021
    தங்கம் விலை உயர்வு

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 32 ரூபாய் விலை உயர்ந்து 4,566 ரூபாய்க்கும், ஒரு சவரன் 256 ரூபாய் விலை அதிகரித்து 36,528 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 40 காசு விலை குறைந்து 72 ரூபாய் 30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 12:43 (IST) 20 Jul 2021
    முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு விழா

    சென்னை, கிண்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' விழா நடைபெற்று வருகிறது. ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.7,117 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகளும் தொடக்கம். அதுமட்டுமின்றி, ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் முதலமைச்சர். இதன்மூலம், 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  • 12:36 (IST) 20 Jul 2021
    உரிய நிதி ஒதுக்கக்கோரி வழக்குப்பதிவு

    விழுப்புரத்தில் அமையவுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கக்கோரி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். மேலும், பல்கலைக்கழகத்துக்கு பதிவாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுவதாக குற்றச்சாட்டும் விடுத்துள்ளார்.


  • 11:27 (IST) 20 Jul 2021
    நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற இரு அவைகளிலும் 2ஆவது நாளாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. மக்களவை பிற்பகல் 2 மணி வரையும், மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 11:25 (IST) 20 Jul 2021
    7.5% உள்ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி

    மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு உச்சநீதிமன்றத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  • 11:23 (IST) 20 Jul 2021
    பெகாசஸ் விவகாரம் -மத்திய அரசு விளக்கம்

    பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.


  • 11:22 (IST) 20 Jul 2021
    நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற இரு அவைகளிலும் 2ஆவது நாளாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. மக்களவை பிற்பகல் 2 மணி வரையும், மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 11:16 (IST) 20 Jul 2021
    நடிகை குஷ்புவின் டிவிட்டர் கணக்கு முடக்கம்

    நடிகை குஷ்புவின் டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி அனைத்து பதிவுகளையும் அழித்துள்ளனர்.


  • 10:52 (IST) 20 Jul 2021
    தமிழ் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் - கமல்

    தமிழ் மொழிக்கென தனி அமைச்சகமும், தமிழ் வளர்ச்சிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


  • 10:50 (IST) 20 Jul 2021
    இலங்கை அகதிகள் குடியுரிமை விவகாரம்- கனிமொழி நோட்டீஸ்

    இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக மக்களவை துணை தலைவர் கனிமொழி நோட்டீஸ்


  • 10:39 (IST) 20 Jul 2021
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.36,528க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 10:27 (IST) 20 Jul 2021
    பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் தொடங்கியது

    பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜி.எம்.சி.பாலயோகி அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்றுள்ளார்.


  • 10:25 (IST) 20 Jul 2021
    வேவு பார்ப்பு சர்ச்சை - காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

    செல்போன்கள் வேவு பார்ப்பு சர்ச்சையை கண்டித்து நாடு முழுவதும் நாளை மறுநாள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது.


  • 10:21 (IST) 20 Jul 2021
    மதுசூதனன் உடல்நிலை - வதந்திகளை நம்ப வேண்டாம்

    அதிமுக கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம். தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளதாக அதிமுக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


  • 09:36 (IST) 20 Jul 2021
    இந்தியாவில் மேலும் 30,093 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் மேலும் 30,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,11,74,322 ஆக அதிகரித்துள்ளது. 125 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 374 பேர் உயிரிழந்துள்ளனர்.


  • 08:46 (IST) 20 Jul 2021
    பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.49

    சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ₨102.49-க்கும், டீசல் லிட்டர் ₨94.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tamilnadu Live News Udpate Tamil News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment