/indian-express-tamil/media/media_files/t3pp2n4DYNlvGQf9p1Jr.jpg)
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் தினசரி பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 221 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 222-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ரூ100.75-க்கும், டீசல் ரூ92.34-க்கும், கேஸ் ரூ88.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு விபரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 41.51% நீர் இருப்பு செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 4.880 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 39.53 சதவீதமும்,புழல் - 76.09 சதவீதமும், பூண்டி - 14.61 சதவீதமும், சோழவரம் - 12.86 சதவீதமும், கண்ணன் கோட்டை - 63.4 சதவீதமும், நீர் இருப்பு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 25, 2024 22:16 IST
மதுரையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக மழை பொழிவு
70 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டொபர் மாதத்தில் மதுரை மாநகரம் அதிக மழை பொழிவை சந்தித்துள்ளது. 1955-ம் ஆண்டில் அக்டோபர் 17-ல் மதுரை நகரில் 115 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. தற்போது 70 ஆண்டுகளுக்கு பிறகு, 2024 அக்டோபரில் 100 மி.மீ-க்கு மேல் மழை பதிவாகி உள்ளது.
-
Oct 25, 2024 21:40 IST
மதுரையில் கனமழை: மேக வெடிப்பு போல 15 நிமிடத்தில் 4.5 செ.மீ மழை கொட்டியது - சு. வெங்கடேசன் எம்.பி
மதுரையில் கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்தபின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேட்டி, “மேக வெடிப்பைப் போல 15 நிமிடத்தில் 4.5 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
-
Oct 25, 2024 21:35 IST
மதுரையில் கனமழை: சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு
மதுரையில் தொடர் மழை பெய்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Oct 25, 2024 21:31 IST
மீண்டும் மீண்டும் இந்தியில் கடிதம் அனுப்புகிறார்கள் - தி.மு.க எம்.பி அப்துல்லா
“ரயில்வே இணை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து எப்போதும் இந்தியில்தான் கடிதம் வருகிறது; அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து, “எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே கடிதம் வருகிறது. தற்போது அவருக்கு “புரியும்படி” பதில் அனுப்பி உள்ளேன். இனி புரிந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று தி.மு.க ராஜ்ய சபா எம்.பி. அப்துல்லா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Oct 25, 2024 20:52 IST
திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை - மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆரியம் அஞ்சி நடுங்குகிறது; திராவிட மாடல் ஆட்சி என்பது சமூக நீதி, சமத்துவ ஆட்சி; மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னோக்கி செல்ல திராவிட இயக்கம்தான் காரணம்” என்று கூறியுள்ளார்.
-
Oct 25, 2024 19:50 IST
‘திராவிட நல் திருநாடு-ன்னு சொன்னா உங்க நாக்கு தீட்டாகிடுமா?’ - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திராவிட நல் திருநாடு-ன்னு சொன்னா உங்க நாக்கு தீட்டாகிடுமா? இப்படி பாடினா சிலருக்கு வாயும், வயிறும் எரியும்னா திரும்பத் திரும்ப பாடுவோம்” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.
-
Oct 25, 2024 19:35 IST
ஒசூர் அருகே கோழிப்பண்ணையில் தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு
கோழிப்பண்ணையில் விளையாடி கொண்டிருந்த போது, தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து, பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது ஜகாவத் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Oct 25, 2024 18:57 IST
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
-
Oct 25, 2024 18:54 IST
த.வெ.க மாநாட்டில் 17 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு
த.வெ.க மாநாட்டில் முன்னெச்சரிக்கைக்காக 17 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150 மருத்துவர்கள், 150 செவிலியர்கள், 100 சுகாதார பணியாளர்கள், 22 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
-
Oct 25, 2024 18:31 IST
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரம்; தாசில்தார் விசாரணை
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், தனியார் பள்ளி தலைமை ஆசிரியரிடம் திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி விசாரணை நடத்தினார். வாயு கசிவால் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 10.30 மணியில் இருந்தே வாயு நெடி வெளியேறி வந்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்ததாகவும், 2 மணிக்கு பிறகே பள்ளி தரப்பில் இருந்து தெரிவித்ததாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்
-
Oct 25, 2024 18:20 IST
மதுரையில் கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
மதுரையில் பெய்து வரும் கனமழையால், மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையில், வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
-
Oct 25, 2024 18:18 IST
தீபாவளியையொட்டி பேக்கரிகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் - உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
தீபாவளி பண்டிகையையொட்டி பேக்கரிகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் காலாவதி தேதி, தயாரிப்பு இடம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க வேண்டும். வெளிப்புறங்களில் வைத்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் உணவு பாதுகாப்புத் துறையில் முறையாக லைசன்ஸ் பெற்று தயாரிக்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை வழங்கியுள்ள அறிவுறுத்தல்படி உணவுப் பொருட்களை தயாரிக்க வேண்டும். மீறினால் உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Oct 25, 2024 17:47 IST
நடத்துநர் ஜெகன் குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த நடத்துநர் ஜெகன் குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெகன் குமாரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய அவரது சகோதரர் ஜெயக்குமார் கையெழுத்திட்டார்
-
Oct 25, 2024 17:33 IST
தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் நிகழ்ந்த பிழை வேதனையளிக்கிறது - அன்புமணி
தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் நிகழ்ந்த பிழை வேதனையளிக்கிறது; அரசியலாக்குவதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
-
Oct 25, 2024 17:14 IST
தேர்தல் ஆணையம் வெளியிட்ட கட்சிகளின் பட்டியலில் த.வெ.க
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்றுள்ளது
-
Oct 25, 2024 16:57 IST
பட்டாசு கடைகள் அமைக்க மறு ஏலம்
சென்னை, தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான மறு ஏலம் நாளை நடைபெறுமென திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் சென்னை தீவுத்திடலில் 50 பட்டாசு கடைகள் அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. இதில், நேற்று 30 கடைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள கடைகளுக்கான ஏலம் நாளை தேனாம்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
-
Oct 25, 2024 16:31 IST
35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு இதுவரை 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாணவ, மாணவிகள் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.காலை 10.30 மணி முதலே இரசாயனம் வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் வாக்குவாதம்.
-
Oct 25, 2024 16:14 IST
லாரி மோதி விபத்து - ஓட்டுநர் மீட்பு
தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு சமையல் எண்ணெய் ஏற்றிகொண்டு சென்ற லாரி விபத்துக்குள்ளானது. திண்டுக்கல் மாவட்டம், செட்டியப்பட்டி அருகே மற்றொரு லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் ஜேசிபி உதவியுடன் லாரி ஓட்டுநர் மீட்கப்பட்டார்.
-
Oct 25, 2024 15:41 IST
முதல்வர் தலைமையில் கூட்டம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 28-ஆம் தேதி திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுமென திமுக தலைமை அறிவித்துள்ளது.
-
Oct 25, 2024 15:22 IST
“நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை“
முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க உத்தரவிட கோரிய வழக்கில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பசும்பொன் செல்வதற்கு எந்த வாகனம் அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தான் தெரியும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
Oct 25, 2024 15:09 IST
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து 28ஆம் தேதி முடிவு எடுக்கப்படுமென தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் அளித்துள்ளது. அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு, ஓரிரு நாள்களில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Oct 25, 2024 15:04 IST
மதுரை: 38 கிலோ ஸ்வீட் பறிமுதல்
மதுரை மாவட்டத்தில் உள்ள ஸ்வீட் மற்றும் கார வகை பலகாரங்கள் விற்பனை செய்யும் கடைகளில், கடந்த ஒரு வாரமாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இதுவரை 782 கடைகளில் ஆய்வு செய்ததில், அதிகமாக கலர் சேர்க்கப்பட்ட சுமார் 38 கிலோ ஸ்வீட்டை பறிமுதல் செய்துள்ளனர்.
-
Oct 25, 2024 15:03 IST
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து
சென்னையில் கடந்தாண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு ஒன்றில் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
பேரவைத் தலைவரின் இந்த பேச்சு அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி பேரவைத் தலைவர் மு.அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரான ஆர்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற ரத்து செய்துள்ளது.
-
Oct 25, 2024 14:40 IST
கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா - சி.வி.சண்முகம் கைது
விசிக நடத்திய மதுஒழிப்பு மாநாட்டில் தான் பங்கேற்க இருப்பது உள்பட சமூக வலைதளங்களில் தன் மீது தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது சமூக வலைதளத்தில் தகவல் பரப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 21 புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அ.தி.மு.க எம்.பி. சி.வி.சண்முகம் தர்ணா போராட்டம் நடத்தினார்.
போராட்டத்தை கைவிட மறுத்ததால் சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்
-
Oct 25, 2024 14:38 IST
கர்நாடகா: 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு, கர்நாடகா மாநிலம் மரகும்பி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு அக்டோபர் 21ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 25, 2024 14:07 IST
'அ.தி.மு.க-வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது' - எடப்பாடி பழனிசாமி பேச்சு
"2024 மக்களவை தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தமிழக முதல்வருக்கு கணக்கு தெரியுமோ தெரியாதா என்று தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வாக்கு சதவீதம் குறைந்ததாக முதல்வர் பேசியுள்ளார். எந்த கணக்கின் அடிப்படையில் முதல்வர் பேசி உள்ளார் என்று தெரியவில்லை" என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
Oct 25, 2024 14:03 IST
த.வெ.க மாநாடு - வேலுநாச்சியாருக்கு கட்அவுட்
த.வெ.க மாநாடு தொடர்பான கட்அவுட்டில் காமராஜர் அருகே வீரமங்கை வேலுநாச்சியாரின் கட்அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் அருகே சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலை அம்மாளின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.
-
Oct 25, 2024 13:21 IST
சுட்டு பிடிக்கப்பட்ட கடத்தல்காரர்கள்
கர்நாடகாவில் வீடு புகுந்து குழந்தைகளை கடத்திச்சென்றவர்களை காவல்துறை சுட்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை குழந்தைகள் கடத்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து மர்ம கும்பலை பிடித்தது. காரை மடக்கி பிடித்த போது, போலீசார் மீது அந்தக் கும்பல் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலை தடுத்து நிறுத்த கடத்தல்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் 2 போலீசார் காயம் அடைந்த நிலையில், கடத்தல்காரர்களிடம் இருந்து 2 குழந்தைகள் மீட்க்கப்பட்டுள்ளனர்.
-
Oct 25, 2024 13:17 IST
நடத்துநர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி - ஸ்டாலின் அறிவிப்பு
பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த ஜெ.ஜெகன் குமார் (பணி எண்.C52200) பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று இரவு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெ.ஜெகன் குமார் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமாரின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று கூறியுள்ளார்.
-
Oct 25, 2024 12:56 IST
ரூ.4 கோடி வழக்கு - செல்வகணபதி கடிதம்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சிபிசிஐடிக்கு பா.ஜ.க எம்.பி செல்வகணபதி கடிதம் எழுதியுள்ளார்.
"முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது, விசாரணைக்கு ஆஜராக மூன்று மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில், சிபிசிஐடிக்கு எம்.பி செல்வகணபதி கடிதம் எழுதியுள்ளார்.
-
Oct 25, 2024 12:26 IST
ஆர்.எஸ்.பாரதி வழக்கு - ஈபிஎஸ்க்கு நோட்டீஸ்
போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் திமுகவை இணைத்து எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவு . ஜாபர் சாதிக் உடன் திமுகவை தொடர்பு படுத்தி பதிவிட இ.பி.எஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ்க்கு நோட்டீஸ். ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Oct 25, 2024 12:10 IST
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்- உதயநிதி விளக்கம்
“தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்படவில்லை; தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 'மைக்' சரியாக வேலை செய்யாததால் அந்த வரிகள் கேட்கவில்லை; அதனால் அதை சரி செய்து மீண்டும் பாடப்பட்டது, பிறகு தேசிய கீதமும் பாடப்பட்டது” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
-
Oct 25, 2024 12:09 IST
நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் ஸ்டாலின் கள ஆய்வு
தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் கள ஆய்வு தொடங்குகிறேன். கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும், கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கட்சி பணிகளையும் ஆய்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.
-
Oct 25, 2024 11:33 IST
முன்னாள் டிஜிபி மகன் கைது
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் மகன் அருண் கைது. 3 பேர் கைது செய்யப்பட்டதில் அவர்களிடம் இருந்து 2.5 கிராம் மெத்தபெட்டமைன், ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
Oct 25, 2024 11:29 IST
தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாட வைத்த உதயநிதி
அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் தவறான உச்சரிப்பில் பாடியதால், மீண்டும் சரியாக பாடுமாறு அறிவுறுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'புகழ் மணக்க' என்பதை 'திகழ் மணக்க' என பாடப்பட்டதால், மீண்டும் சரியாக பாடுமாறு அறிவுறுத்தி மீண்டும் பாடப்பட்டுள்ளது.
-
Oct 25, 2024 11:24 IST
101 அடி உயர கம்பத்தில் கொடியேற்றப்போகும் விஜய்
த.வெ.க-வின் 101 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. முதல் மாநாட்டில் விஜய் 101 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுகிறார்.
ராட்சத கிரேன்கள் மூலம் கம்பத்தைத் தூக்கி நிறுத்தும் பணிகள் மும்முரம், ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழக வெற்றி கழகக் கொடியை விஜய் ஏற்றி வைக்கிறார்
2 ஏக்கர் நிலப்பரப்பில் 15க்கு 15 என்ற அளவில் கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது.
-
Oct 25, 2024 10:32 IST
தாம்பரத்தில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
சென்னை தாம்பரம் தர்கா சாலையில் சேதமடைந்த பாலத்தை சீர் செய்யவும், மழை நீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்கவும் வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால், வாகனங்களில் வருபவர்கள் கடும் பாதிப்படைந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
-
Oct 25, 2024 10:30 IST
குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் - மக்கள் அவதி
மதுரைகீழபனங்காடி அண்ணாமலையார் நகரில் மழைநீர்குடியிருப்புகளை சூழ்ந்ததால், குடியிருப்புவாசிகள் குழந்தைகளை தோளில் சுமந்தவாறு வெளியேறி வருகின்றனர்.தேங்கி நிற்கும் மழைநீரால் வீடுகளுக்குள் புகும் பாம்புகள்"கடும் துர்நாற்றத்துடன் மழை நீர் புகுவதாகக் குற்றச்சாட்டு
-
Oct 25, 2024 10:11 IST
த.வெ.க மாநாடு: 'இது ஒரு நல்ல தொடக்கம்' - செல்வப்பெருந்தகை வாழ்த்து
புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ பேசுகையில், “தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜரின் கட்டவுட் வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. இது ஒரு நல்ல தொடக்கம்; விஜய்-ன் நடவடிக்கைகள் செயல்பாடுகள் குறித்து இனிவரும் காலங்களில் தான் தெரியும். இந்தியா முழுவதும் காவிமயம் ஆக்குவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அவர்களின் அஜெண்டாவே ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு மொழி, ஒரு அதிபர், ஒரு நிறம். அந்த நிறம் தான் காவி நிறம்” என்று கூறியுள்ளார்.
-
Oct 25, 2024 10:10 IST
அக். 30-ல் தேதி கீழடி அருங்காட்சியகம் மூடல்
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அக்டோபர் 30ம் தேதி கீழடி அருங்காட்சியகம் மூடப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
-
Oct 25, 2024 10:08 IST
ஒசூர்: குறைந்த ரசாயன நுரை - மீண்டும் தொடங்கிய போக்குவரத்து
ஒசூர் அருகே தட்டகானப்பள்ளி அருகே தரைப்பாலத்தை மூடிய ரசாயன நுரை குறையத் தொடங்கியதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து நேற்று காலை 4,700 கன அடி நீர் வெளியேற்றபோது, அந்தப் பகுதியில் திட்டுதிட்டுகளாக வெந்நுரையானது சாலையை ஆக்கிரமித்தது. 30 அடி உயரத்திற்கு நுரை இருந்ததால், போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.
#Watch | ஒசூர்: தட்டகானப்பள்ளி அருகே தரைப்பாலத்தை மூடிய ரசாயன நுரை குறையத் தொடங்கியதால் போக்குவரத்து தொடங்கியது.
— Sun News (@sunnewstamil) October 25, 2024
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து நேற்று காலை 4,700 கன அடி நீர் வெளியேற்றபோது, அந்தப் பகுதியில் திட்டுதிட்டுகளாக வெந்நுரையானது… pic.twitter.com/EJeaZD7RmZ -
Oct 25, 2024 10:06 IST
புயலாக வலுவிழந்தது டாணா
ஒடிசா - மேற்குவங்கம் இடையே இன்று அதிகாலை தீவிரப் புயலாக கரையைக் கடந்த டாணா புயல் தற்போது புயலாக வலுவிழந்துள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 25, 2024 09:47 IST
தலையணை பகுதிக்கு செல்ல தடை
நெல்லை: களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரிப்பதால் தலையணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத்துறை தடை விதித்துள்ளது
-
Oct 25, 2024 09:34 IST
சரியான திசையில் பயணிக்கிறார் விஜய்: திருமாவளவன்
தவெக தலைவர் விஜய் சமூகநீதி பார்வை கொண்டவராக சரியான திசையில் பயணிக்க தொடங்கியுள்ளார். மாநாடு வெற்றி பெற விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Oct 25, 2024 09:32 IST
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
தமிழ்நாட்டில் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீப ஒளி பண்டிகை ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீப ஒளி ஊக்கத்தொகை வழங்க வேண்டும்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 25, 2024
தீபஒளி திருநாளுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்களும், அவர்களுக்கும் கீழாக உள்ள தொழிலாளர்களும் தீப ஒளித் திருநாளைக் கொண்டாட கையில் பணமில்லாமல்… -
Oct 25, 2024 08:47 IST
வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்
கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்தியதற்றாக விளையாடுவதற்கு ஓராண்டு தடை மற்றும் கேப்டன் பொறுப்பேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவர் கேப்டன் ஆவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் பி.பி.எல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.
-
Oct 25, 2024 08:43 IST
கனமழை எதிரொலி: வெறிச்சோடி காணப்படும் குமரிமுனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், குமரி முனை, கடற்கரை பகுதியில் வழக்கமான சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன
-
Oct 25, 2024 08:42 IST
சேலம் பெரியார் பல்கலை. துணை வேந்தரின் செயலால் மீண்டும் சர்ச்சை
சேலம் பெரியார் பல்கலை. துணை வேந்தரின் செயலால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. பெரியார் குறித்த புத்தகத்தை அனுமதியின்றி வெளியிட்டதாக, இதழியல் துறை இணைப்பேராசிரியர் சுப்பிரமணியத்திடம், ”உங்கள் மீது ஏன் ஒழுங்குநடவடிக்கை எடுக்கக் கூடாது?” என துணை வேந்தர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில், கடந்தாண்டு துணை வேந்தர் அனுப்பிய மெமோவுக்கு இணைப்பேராசிரியர் சுப்பிரமணி உரிய விளக்கத்தை அளித்திருந்தார் தற்போது 10 மாதங்கள் கழித்து, “விதிமீறலில் ஈடுபட்டதற்கு முகாந்திரம் உள்ளது. ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என துணை வேந்தர் தரப்பில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது
-
Oct 25, 2024 08:35 IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறித்த விபரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 29,307 கன அடியிலிருந்து 31,575 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 102.92 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது நீர் இருப்பு 68.678 டிஎம்சியாக உள்ளது.
-
Oct 25, 2024 08:34 IST
4 கோடி பரிமுதல் வழக்கு: விசாரணைக்கு ஆஜராகும் பா.ஜ.க செல்வ கணபதி
மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வ கணபதி இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார். சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா புரோக்கர்கள் எனப்படும் பங்கஜ் லால்வாணி, சூரஜ் ஆகியோரும் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.