சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி தேவி பதவி ஏற்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில், சிவகங்கையில் ஆட்சியரை சந்தித்து பதவிபிரமாணம் செய்து வைக்க கடிதம் வழங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது காரைக்குடி அடுத்துள்ள சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக காங்கிரசைச் சேர்ந்த காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடியின் மனைவி தேவி என்பவரும், தனியார் பொறியியல் கல்லூரி நடத்திவரும் ஐயப்பன் என்பவரின் மனைவி பிரியதர்ஷினியும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது முதலாவதாக மாங்குடி மனைவி தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதே ஊராட்சிக்கு உட்பட்ட நான்கு வாக்குப்பெட்டிகள் எண்ணப்படவில்லை என பிரியதர்ஷினி தரப்பினர் புகார் அளித்ததை தொடர்ந்து, மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அப்போது ஐயப்பன் மனைவி பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ மாங்குடியின் மனைவி பிரியதர்ஷினி உயர் நீதிமன்றம் சென்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலில் அறிவிக்கப்பட்ட வெற்றியே செல்லும் என தீர்ப்பு அளித்த்து.
இந்த தீர்ப்பை எதிர்த்து பிரியதர்ஷினி தரப்பும் நீதிமன்றத்தை நாடியது இதில் கீழமை நீதிமன்றமே விரிவான விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க உயர் நீதிமன்றம் கூறிய நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இதில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக தீர்ப்பு வந்தது இதனை எதிர்த்து மாங்குடி மனைவி தேவி தரப்பினர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் வழக்கிற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரமே தேவி தரப்பிற்காக ஆஜராகினர்.
இதில் முதலில் அறிவிக்கப்பட்ட வெற்றியே செல்லும் என தீர்ப்பு வெளியான நிலையில் அந்த தீர்ப்பு நகலுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வந்த காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி மற்றும் அவரது மனைவி தேவி ஆட்சியர் ஆஷா அஜித்தை சந்தித்து பதவிபிரமானம் செய்துவைக்க கடிதத்தை வழங்கினர். அதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வாயிலிலேயே காங்கிரஸ் கட்சியினர் தேவி மாங்குடிக்கு பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்ததுடன் இனிப்புகள் வழங்கி அங்கேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பதவி காலம் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மனைவி மாங்குடி தேவி பதவி பிரமாணம் செய்து வைக்க ஆட்சியரை சந்தித்து கடிதம் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“