Tamilnadu Local Body Election Update : தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ந் தேதி அனைத்து மாவட்டங்களுக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கடந்த மாத இறுதியில் தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும், தமிழகம் முழுவதும், 1064 மாநகராட்சி உறுப்பினர்கள் (21 மாநகராட்சிகள்), 3468 நகராட்சி உறுப்பிளர்கள் (138 நகராட்சிகள்), 8288 பேரூராட்சி உறுப்பினர்ள் (490 பேரூராட்சிகள்) என மொத்தம் 12820 பதவிகளுக்கான நகர்புற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 4-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை தொடர்ந்து 5-ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. மேலும் வேட்புமனுவை வாபஸ் பெற பிப்ரவரி 7-ந் தேதி (நேற்று) கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை நகர்புற உள்’ளாட்சி தேர்தலுக்கான முழு வேட்பாளர்கள் பட்டியல் வௌயிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னமும் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என அனைவரும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கினர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில்’ முதல்நிலை பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலகர்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாத காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், இந்த பேரூராட்சிக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “