உள்ளாட்சித் தேர்தல்: ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வெற்றி சதவீதம் என்ன?

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சதவிகிதம் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை தொடர்கின்றன.

By: Updated: January 6, 2020, 05:25:35 PM

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சதவிகிதம் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை தொடர்கின்றன.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!

சென்னை மாவட்டம், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, மற்ற 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ம் தேதி தமிழகம் முழுவதும் 315 வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்பட்டன.

தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணி 240 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சதவீத அளவில் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, 27 மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் கட்சி வாரியாக வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திமுக – 47.18%, அதிமுக – 41.55%, காங்கிரஸ் – 2.91.%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 1.36%, பாஜக – 1.36%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 0.39%, மற்றவை – 4.27% சதவீத வெற்றி பெற்றுள்ளன. 0.39% அளவு இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதில் பாமக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் என்பதால் அதன் சதவீதம் குறிப்பிடப் படவில்லை.

அதே போல, 5090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் கட்சி வாரியாக வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திமுக – 41.20%, அதிமுக – 34.95%, காங்கிரஸ் – 2.57%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 1.22%
பாஜக – 1.67%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 0.65%, மற்றவை – 15.64% சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் 0.2% முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதில் பாமக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் என்பதால் அதன் சதவீதம் குறிப்பிடப் படவில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu local body election results political parties won percentages

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X