Tamilnadu local body elections results: தமிழகத்தில் காலியாக உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் பல்வேறு காரணங்களால், காலியாக இருந்த 510 நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையும் படியுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி
இவற்றில் மாநகராட்சியில் 2 பதவிகளும், நகராட்சியில் 2 பதவிகளும், பேரூராட்சியில் 8 பதவிகளும் காலியாக இருந்தன. ஊரக உள்ளாட்சி பதவிகளைப் பொறுத்தவரை 498 பதவிகள் காலியாக இருந்தன.
இவற்றில், 303 இடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 207 இடங்களில், 26 இடங்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஒரு இடத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, 180 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்கு வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இவற்றில் கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய இடங்களில் பெரும்பாலானவற்றில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக மொத்தமாக 25 பதவிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது. 6 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பாக யாரும் போட்டியிடவில்லை. ஒற்றை தலைமை விவகாரத்தால், அதிமுக வேட்பாளர்கள் கட்சி சார்பாக இல்லாமல் சுயேச்சையாக போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil