ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய முதல்வர், அமைச்சர்கள்

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

author-image
WebDesk
New Update
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய முதல்வர், அமைச்சர்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

தமிழகமெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

Advertisment
Advertisements

வேலூர், காட்பாடி வாக்குச்சாவடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் ஆகியோர் வாக்களித்தனர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மா.சுப்பிரமனியன் உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை, மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக எம்.பி.யான கனிமொழி, திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை, தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் தனது கணவருடன் வந்து வாக்கு செலுத்தினார்.

நடிகர் விஜய், நீலாங்கரையில் காலையில் முதல் நபராக வந்து வாக்கு செலுத்திவிட்டு சென்றார். அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் திரண்டதால் அங்கு சற்று பரபரப்பு காணப்பட்டது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையிலும் கோவை, சுகுணாபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் வாக்களித்தனர்.

இதையும் படியுங்கள்: பூத் சிலிப்புடன் பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினர் தப்பியோட்டம் – திமுக புகார்

கிருஷ்ணகிரியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்றபடி வாக்களித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி. சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.

இதனிடையே, சன் நெட்வொர்க் நிறுவனர் கலாநிதி மாறன் சென்னையிலும், கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் வாக்களித்தனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் திமுக எம்.பி.யான டி.ஆர்.பாலு, சென்னை மயிலாப்பூர் தொகுதி 126 ஆவது வார்டு மந்தைவெளி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்,பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அமைப்பாளரும், நடிகையுமான குஷ்பூ சுந்தர், தியாகராய நகர் வாக்குச்சாவடியில் சசிகலா, சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாக்கு செலுத்தினார்.

இதனிடையே, நடிகர் டி.ராஜேந்தர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், திண்டிவனம் வாக்குச் சாவடியில் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: