Coimbatore, Madurai, Trichy News Live: அஜித்துக்கு கஞ்சா கொடுத்துதான் போலீசார் அடித்தனர் - நண்பர் மனோஜ் பாபு பரபர பேட்டி

Coimbatore, Madurai, Trichy News Live- 3 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 3 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ajith kumar sivagangai friend press meet

Coimbatore, Madurai, Trichy News Live: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்துள்ளது. நேற்று 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து காலை முதல் குறைந்துள்ள நிலையில், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 9-வது நாளாக தொடர்கிறது.

  • Jul 03, 2025 19:14 IST

    திருப்புவனம் இளைஞர் சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு

    திருப்புவனம் இளைஞரை தாக்கும் காட்சியை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட போலீசார் பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபிக்கு ஆன்லைனில் சக்தீஸ்வரன் மனு அளித்திருந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.



  • Jul 03, 2025 19:08 IST

    நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்; ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது - நெல்லை காவல்துறையினர் எச்சரிக்கை

    "நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஜாதி ரீதியான கொடிகள், பனியன்கள் அணிந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்தாண்டில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் அதேபோல் ஏதாவது செயல்பாடுகள் இருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படும். தேரோட்டத்திற்கு வருவோர் ஜாதி சம்பந்தமான பனியன், கொடிகள், பேண்டுகள் அணிந்து வரக்கூடாது. 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்." என்று நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். 



  • Advertisment
  • Jul 03, 2025 19:00 IST

    அஜித்துக்கு கஞ்சா கொடுத்துதான் போலீசார் அடித்தனர் - நண்பர் மனோஜ் பாபு பரபர பேட்டி 

    "அஜித்துக்கு கஞ்சா கொடுத்துதான் போலீசார் அடித்தனர்; போலீசார் தாக்கும்போது நான் அருகில்தான் இருந்தேன்; அஜித் மீது கஞ்சா வாசனை வந்தது நீரில் மிளகாய் பொடி கலந்து அஜித்துக்கு கொடுத்தனர்; முகத்திலும் மிளகாய் பொடியை தடவினர்." என்று  அஜித் குமாரின் நண்பர் மனோஜ் பாபு தெரிவித்துள்ளார். 



  • Jul 03, 2025 18:36 IST

    திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கை ஒட்டி 600 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 5 முதல் 8 வரை திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 



  • Advertisment
    Advertisements
  • Jul 03, 2025 18:20 IST

    ஈரோடு மாணவர் மரணம் - சக மாணவர்கள் கைது

    ஈரோடு குமலன்குட்டை அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர் ஆதித்யா உயிரிழந்த சம்பவத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது  கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான மாணவர்களிடம் ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 



  • Jul 03, 2025 17:17 IST

    பழனியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்.

    பழனியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தனது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தார்.



  • Jul 03, 2025 16:52 IST

    ரேசன் கடை ஊழியரிடம் வாக்குவாதம்

    தென்காசி மாவட்டத்தில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு சரியான அளவில் பொருள் வழங்கப்படவில்லை என ரேஷன் கடை ஊழியரிடம் இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டதால் ரேஷன் கடையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 



  • Jul 03, 2025 16:51 IST

    இளைஞர் மரணம் - குடும்பத்தாரிடம் நீதிபதி விசாரணை

    காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணமடைந்த சம்பவத்தில்  அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீன் குமார், சித்தி ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.



  • Jul 03, 2025 16:05 IST

    கட்டடம் இடிந்து விழுந்து பெண் பலி

    கேரளம் கோட்டயத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 14வது வார்டு அமைந்துள்ள கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம், கழிவறைக்கு சென்று வந்தபோது இடிபாடுகளில் சிக்கி பெண் பலியானார்.



  • Jul 03, 2025 16:04 IST

    மாவு மூட்டை சரிந்து விழுந்து - சிறுவன் பலி

    கோலமாவு விற்பனை செய்து வரும் சின்னப்பராஜின் 3 வயது மகன் மேகராஜ் கோல மாவு மூட்டை சரிந்து விழுந்து மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.



  • Jul 03, 2025 15:40 IST

    8 வயது சிறுவன் சடலமாக மீட்பு

    ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே நேற்று காரில் கடத்தப்பட்ட 8 ஆம் வகுப்பு மாணவன் கொல்லப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார். 



  • Jul 03, 2025 15:39 IST

    அஜித்குமார் மரண வழக்கு - சக்தீஸ்வரனுக்கு பாதுகாப்பு

    திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமான அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு.  தனக்கு பாதுகாப்பு கோரி அவர் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பாதுகாப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 



  • Jul 03, 2025 15:26 IST

    திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கு: ஐஜி-க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கில் ஐ.ஜி.க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விசாரணை நடத்தி அறிககை அளிக்க ஐ.ஜி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியது.



  • Jul 03, 2025 15:15 IST

    நெல்லை வழக்கறிஞர் சங்கதேர்தல்: 4 வாரத்தில் நடத்த ஐகோர்ட் கிளை ஆணை

    நெல்லை வழக்கறிஞர் சங்கத் தேர்தலை 4 வாரத்தில் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் பதவிகாலம் முடிந்தவுடன் உடனடியாக நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்த நிலையில், விதிகளை பின்பற்றி தேர்தலை 4 வாரத்தில் நடத்த தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டது.



  • Jul 03, 2025 14:32 IST

    ராமேஸ்வரம் 8 மீனவர்களுக்கு ஜூலை17ம் தேதி வரை காவல்!!

    இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.



  • Jul 03, 2025 14:18 IST

    திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: நிகிதா மீது மேலும் 2 புகார்கள்

    திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் சிக்கிய நிகிதா மீது மேலும் 2 புகார்கள் எழுந்துள்ளது. திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிகிதா மீது இருவர் புகார் தெரிவித்தனர். அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக முருகேசன், முத்துக்கொடி ஆகியோர் புகார் அளித்தனர். 2011ல் அளித்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மீண்டும் புகார் அளிக்கப்பட்டது



  • Jul 03, 2025 14:18 IST

    தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை..!!

    தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. நகராட்சி ஆணையர் ஏகராஜா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஏகராஜா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.



  • Jul 03, 2025 14:06 IST

    தண்டவாளத்தின் கீழ் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஏற்பட்ட லேசான மண் சரிவு: பயணிகள் ரயில் நடுவழியில் நிறுத்தம்

    அரியலூர் மாவட்டம் வெள்ளூர் அருகே தண்டவாளம் கீழ் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. ஒருமணி நேர தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டது. பின்னர் வழக்கம்போல அவ்வழியே ரயில் போக்குவரத்து இயங்குகிறது.



  • Jul 03, 2025 12:38 IST

    அஜித்குமார் மரணம்: சாட்சிகளிடம் நீதிபதி தனித்தனியே விசாரணை

    திருப்புவனம் இளைஞர் அஜித் மரணம் அடைந்த விவகாரத்தில் முக்கிய சாட்சிகளான சக்தீஸ்வரன், கார்த்திக் வேலு, பிரவீன் குமாரிடம் நீதிபதி தனித்தனியே விசாரணை நடத்தினார்.



  • Jul 03, 2025 12:19 IST

    நகை திருடியதாக புகார் கூறிய நிகிதா மீதான வழக்குகளை உடனடியாக விசாரிக்குமாறு மனு 

    மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில், மடப்புரம் கோயில் காவலாளி நகை திருடியதாக புகார் கூறப்பட்ட நிகிதா மீதான வழக்குகளை உடனடியாக விசாரிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகிதா மீது அரசுப்பணி வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



  • Jul 03, 2025 12:16 IST

    செல்போன் டவரில் ஏறிய இளம்பெண்; பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கிய தீயணைப்பு வீரர்கள் 

    நெல்லை மாவட்டம், பணகுடி அருகே சொத்து வாங்க கொடுத்த 3 லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றிய தாய்மாமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி செல்போன் டவரில் ஏறி த*கொலைக்கு முயன்ற இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இளம்பெண்ணை கீழே இறக்கினர்.



  • Jul 03, 2025 11:43 IST

    பள்ளி மாணவர் உயிரிழப்பு: சக மாணவர்களிடம் விசாரணை

    ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை பகுதியில் 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் அதே பள்ளியை சேர்ந்த 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை

    உயிரிழந்த மாணவனின் உறவினர்களிடம், போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



  • Jul 03, 2025 11:24 IST

    அஜித் குமார் கொலை: நீதிபதி விசாரணை

    அஜித் குமார் கொலை வழக்கை மதுரை மாவட்ட நான்காவது அமர்வு கூடுதல் நீதிமன்ற நீதிபதி  ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று முதல் நாள் விசாரணை பதினோரு மணி நேரம் நடந்து முடிந்த நிலையில் இன்று காலையில் விசாரணைக்கு வருகை தந்துள்ளார்.



  • Jul 03, 2025 10:52 IST

    திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜை

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 3வது நாளாக வெகு விமரிசையாக நடைபெற்று வரும்  யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்



  • Jul 03, 2025 10:28 IST

    போதையில் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: காவலர் சஸ்பெண்ட்

    ராமநாதபுரத்தில் மதுபோதையில் மாற்றுத்திறனாளியை தாக்கி கையை உடைத்த காவலர் லிங்குசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சிஐடி காவலர் லிங்குசாமியை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. உத்தரவு



  • Jul 03, 2025 09:38 IST

    அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தவெக நிர்வாகி கைது

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 56). இவர், பழனியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். சின்ன அய்யங்குளம் பகுதியை சேர்ந்த வடிவேல் மனைவி ரீத்தா (46). இவர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக உள்ளார். முருகானந்தத்துக்கும், ரீத்தாவுக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் முருகானந்தத்தை ரீத்தா அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அவர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூரியகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரீத்தாவை கைது செய்தனர். 



  • Jul 03, 2025 09:38 IST

    வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசன தேவைக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தம் செய்யப்பட்டது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் 4 அடி குறைந்து 59 அடியாக சரிந்துள்ளது. அதே நேரத்தில் நீர்வரத்து கூடுதலாக உள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.



  • Jul 03, 2025 09:37 IST

    முதியவர்களை கட்டிப்போட்டு 200 சவரன் நகை கொள்ளை

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதியவர்களை கட்டிப்போட்டு 200 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முதியவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 03, 2025 09:37 IST

    ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக சரிவு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்துள்ளது. நேற்று 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து காலை முதல் குறைந்துள்ள நிலையில், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 9-வது நாளாக தொடர்கிறது.



  • Jul 03, 2025 09:37 IST

    ஓசூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 பேர் கைது

    ஓசூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக தங்கி இருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: