/indian-express-tamil/media/media_files/2025/08/01/kavin-body-native-2025-08-01-12-49-06.jpg)
டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஆக.1) ஓரிரு இடங்களிலும், ஆக. 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
தமிழகத்தில் நாளை (ஆக. 2) டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Aug 01, 2025 20:06 IST
தென்காசியில் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவை ஒட்டி வரும் 7ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக வரும் 23ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
Aug 01, 2025 19:33 IST
நெல்லையில் பாலியல் தொல்லைக்குள்ளான மாணவிக்கு டிசி - போராட்டம்
10-ம் வகுப்பு மாணவிக்கு ஓட்டுநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மாணவியை மிரட்டி, அதிகாரத்தை பயன்படுத்தி டிசி கொடுக்க வைத்துள்ளார். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிக்கு ஆதரவாக 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்திலும், அம்பை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Aug 01, 2025 18:17 IST
பிறந்தநாளில் மரணமடைந்த தி.மு.க கவுன்சிலர் குமரவேல்
உளுந்தூர்பேட்டை நகராட்சியின் 2வது வார்டு திமுக கவுன்சிலர் குமரவேல் மாரடைப்பால் மரணமடைந்தார். இன்று அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது
-
Aug 01, 2025 17:59 IST
பாலியல் தொல்லைக்குள்ளான மாணவிக்கு டிசி - போராட்டம்
10-ம் வகுப்பு மாணவிக்கு ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியை மிரட்டி, அதிகாரத்தை பயன்படுத்தி ஓட்டுநர் டிசி கொடுக்க வைத்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 200-க்கும் மேற்பட்டோர் அம்பை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
-
Aug 01, 2025 17:33 IST
கவினின் இறுதி நொடிகள்... சோகத்தில் மூழ்கிய கிராமம்!
நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் உடல் இறுதி மரியாதைக்குப் பின் தகனம் செய்யப்பட்டது. 5 நாள் போராட்டத்துக்குப் பின்னர் இன்று அவரது உடலை குடும்பத்தினர் வாங்கியிருந்த நிலையில் இறுதி ஊர்வலத்துக்குப்பின் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
Aug 01, 2025 16:57 IST
கவினை, ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டியதாக வெளியான செய்திக்கு நெல்லை மாநகர காவல் துறை மறுப்பு
நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினை, ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டியதாக வெளியான செய்திக்கு நெல்லை மாநகர காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
Aug 01, 2025 16:40 IST
ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடலுக்கு திமுக கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் அஞ்சலி
ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு திமுக கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல் தெரிவித்தனர்.
-
Aug 01, 2025 16:10 IST
மூதாட்டியை கடித்த நாய்
திருத்தணியில் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த 90 வயது மூதாட்டியை கடித்த தெரு நாய். தடுக்கச் சென்ற அவரது மகனையும் கடித்துள்ளது. மூதாட்டிக்கு 7 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Aug 01, 2025 15:55 IST
திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்களை தடுக்க முடியவில்லை - அன்புமணி
திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்களைக்கூட காவல் துறையால் தடுக்க முடியவில்லை. தூத்துக்குடியில் தகராறை தட்டிக்கேட்ட இரு சகோதரர்கள் கஞ்சா போதை கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்களை பார்க்கும் மக்கள் அரசும், காவல் துறையும் இருக்கிறதா என கேள்வி எழுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
-
Aug 01, 2025 15:02 IST
கஞ்சா கும்பலை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பி கொலை
தூத்துக்குடி கஞ்சா போதையில் தகராறு செய்த கும்பலை தட்டிக் கேட்ட அண்ணன், தம்பி கொலை செய்யப்பட்டனர். அண்ணன் மாரிபாண்டி, மாற்றுத்திறனாளி தம்பி அருள்ராஜ் ஆகியோரை கும்பல் அடித்துக் கொன்றது. இருவரை அடித்துக் கொன்று பண்டுகரை பகுதியில் குழி தோண்டி புதைத்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. புதைக்கப்பட்ட இருவரின் உடலை தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Aug 01, 2025 14:54 IST
காவலர்கள் காலால் தாக்கியதால் மூதாட்டி இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் உடற்கூராய்வு செய்ய உத்தரவு
காவலர்கள் காலால் தாக்கியதால் மூதாட்டி இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் உடற்கூராய்வு செய்ய உத்தரவு அளித்துள்ளது. இறந்த சூசைமரியாளின் உடலை முறையாக உடற்கூறு ஆய்வு செய்து அதனை வீடியோ பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளை குமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செய்ய மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
-
Aug 01, 2025 14:36 IST
பர்பி, தீப்பெட்டி உற்பத்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
தனது தேர்தல் சுற்றுப் பயணத்தின் ஒருபகுதியாக தூத்துக்குடி கோவில்பட்டியில் பர்பி, தீப்பெட்டி உற்பத்தியாளர்களை சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
Aug 01, 2025 14:09 IST
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வறைகள் - மேயர் ரங்கநாயகி
கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உதவியாளர்களுக்கு ஓய்வறைகள் அமைக்கப்படும் என்று மேயர் ரங்கநாயகி அறிவித்துள்ளார். 66 ஆம்புலன்ஸ்கள் இயங்கும் நிலையில் அதில் பணியாற்றும் சுமார் 100 ஊழியர்களுக்கு இது மிகுந்த உதவியாக இருக்கும் என மேயரைச் சந்தித்து அவர்கள் நன்றி தெரிவித்தனர்
-
Aug 01, 2025 13:36 IST
சொந்த ஊர் வந்த மகன் கவின் உடல்; கதறி அழுத தாய்
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்துக்கு கொண்டுவரப்பட்டது. கவினின் உடலைப் பார்த்து அவரது தாய், உறவினர்கள் கதறி அழுதனர்.
-
Aug 01, 2025 12:45 IST
கவினின் உடல் சொந்த ஊர் ஆறுமுகமங்கலத்தை அடைந்தது
நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்துக்கு கொண்டுவரப்பட்டது. 5 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு கவின் உடலை நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
-
Aug 01, 2025 11:20 IST
ஐ.டி ஊழியர் கவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐ.டி ஊழியர் கவின் உடல் 5 நாள் போராட்டத்திற்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு, ஆட்சியர் உள்ளிட்டோர் கவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
-
Aug 01, 2025 10:24 IST
ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் ஜப்பானிய பக்தர்கள்- உலக அமைதிக்காக சிறப்பு யாகம்
திருச்சி திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் உலக அமைதிக்காக ஜப்பானிய இந்து பக்தர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.
#WATCH | Trichy, Tamil Nadu: Japanese Hindu devotees conducted a special Yagam for world peace at Thiruvanaikoil Arulmigu Jambukeswarar Temple. (31.07) pic.twitter.com/mJ2Dl5dvbp
— ANI (@ANI) August 1, 2025 -
Aug 01, 2025 10:13 IST
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20,000 கன அடியாக சரிந்த்தை தொடர்ந்து 10 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
-
Aug 01, 2025 10:12 IST
ஐடி ஊழியர் கவின் கொலை: மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை
ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் இமையம், அண்ணாமலை உள்ளிட்ட உறுப்பினர்கள் நெல்லை வந்தனர். முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்து இன்று மதியம் நேரடியாக களத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
Aug 01, 2025 09:37 IST
சுர்ஜித்தின் தாயை உடனே கைது செய்ய வேண்டும்- கவின் தந்தை
என் மகன் கவின் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் தாயை உடனே கைது செய்ய வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோரை உடனே காவல் பணியில் இருந்து நீக்க வேண்டும்.
நெல்லை மருத்துவமனையில் கவின் உடலை வாங்க செல்வதற்குன் முன் சந்திரசேகர் பேட்டி
-
Aug 01, 2025 09:11 IST
கவினின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்
நெல்லை ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 5 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் கவினின் உடலை வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.