Coimbatore, Madurai, Trichy News Live: ஆம்பூர் கலவரம் வழக்கு: 22 பேர் குற்றவாளி - திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

Coimbatore, Madurai, Trichy News Live- 28 August 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 28 August 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ambur judgement

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா தொடங்குவதையொட்டி நாளை முதல் கடலில் குளிக்க தடை திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தடை விதித்துள்ளார். 

  • Aug 28, 2025 17:20 IST

    கோவில் நிதியில் கடைகள் கட்ட தடை

    மதுரை கள்ளழகர் கோவில் உபரி நிதியை பயன்படுத்தி, வணிக நோக்கில் கடைகள் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கள்ளழகர் கோவில் வளாகத்தில் கழிப்பறைகள், ஓய்வறைகள் கட்டுவதற்கான பணிகளை தொடரலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • Aug 28, 2025 17:01 IST

    கனமழைக்கு வாய்ப்பு!

    நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று (ஆக.28) கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Advertisment
  • Aug 28, 2025 16:45 IST

    மதுரையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

    மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்ட நிலையில், ஓடுதளத்தில் 130 பயணிகளுடன் தயாராக இருந்த விமானம், நிறுத்துமிடம் திரும்பியது.



  • Aug 28, 2025 16:34 IST

    நீர்நிலையை மாசுபடுத்தும் பன்றிகளை அகற்ற உத்தரவு

    நீர்நிலை ஆக்கிரமித்து நீர்நிலையை மாசுபடுத்தி பன்றி வளர்ப்போர் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைப் பகுதியை மாசுபடுத்தும் வகையில் உள்ள பன்றிகளை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களையும் அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Aug 28, 2025 16:20 IST

    ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

    உதகையில் உள்ள ராஜ்பவன் மற்றும் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு மிரட்டல் குறித்து வெலிங்டன் ராணுவ கல்லூரி அதிகாரிகள் உதகை எஸ்பி அலுவலகத்தில் புகார் அழைத்துள்ளனர். அதை போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். 



  • Aug 28, 2025 16:12 IST

    தெருநாய் விவகாரம்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவு

    தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.



  • Aug 28, 2025 15:12 IST

    மதுரை அழகர் கோயிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு

    மதுரை அழகர் கோயிலில் வணிகரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அழகர் கோயில் வளாகத்துக்குள் உபரி நிதியில் கட்டப்படும் வணிக கட்டுமானங்களுக்கு தடை கோரி நாகையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில்; கோயில் நிதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் கட்டுமானங்களுக்கு தடை விதிக்க முடியாது. மேலும், மற்ற கட்டுமானங்கள் மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என உறுதி தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.



  • Aug 28, 2025 15:10 IST

    மூதாட்டியை முட்டித் தள்ளிய மாடு

    கொல்லங்குடியில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியின்போது சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது மாடு முட்டியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. காளையார் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Aug 28, 2025 14:36 IST

    ஆம்பூர் கலவரம்: 22 பேர் குற்றவாளி - திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 2015-ம் ஆண்டு ஆட்கடத்தல் வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அகமது உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஆம்பூர் பகுதியில் 2015-ம் ஆண்டு நடந்த கலவரத்தில், 7 வது வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கலவரம் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செயய்ப்பட்ட நிலையில், 6 வழக்குகள்ல் அனைவரும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Aug 28, 2025 14:07 IST

    ஆம்பூர் கலவர வழக்கு: 161 பேர் விடுதலை - திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 2015-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் கைது செய்யப்பட்ட 191 நபர்களில் 161 பேர் 
    7 வழக்குகளில் விடுதலை செய்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொத்தமாக 191 நபர்களில் 161 பேரை விடுதலை செய்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார். கலவரம் தொடர்பாக வழக்கு பதியப்பட்ட 14 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

    ஆட்கடத்தல் வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அகமது உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் ஆம்பூர் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் 191 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. 



  • Aug 28, 2025 13:43 IST

    ஆம்பூர் கலவரம்: 2 வழக்குகளில் 58 பேர் விடுதலை - கோர்ட் உத்தரவு

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 2015-ம் ஆண்டில் நடந்த கலவரம் தொடர்பாக பதிவான 2 வழக்குகளில் 58 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முதல் 2 வழக்குகளில் 58 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2015-ல் ஆம்பூரில் காவல்துறையைக் கண்டித்து நடைபெற்ற கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.



  • Aug 28, 2025 12:40 IST

    கமுதி: மின்கம்பத்தில் பைக் மோதியதில் 2 பேர் பலி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். கே.நெடுங்குளம் மார்னிங் ஸ்டார் கல்லூரி அருகே நடந்த விபத்தில் காளிராஜ், பூமணி ஆகியோர் உயிரிழந்தனர்



  • Aug 28, 2025 12:15 IST

    இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு- நீலகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

    நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

    கோவை, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.



  • Aug 28, 2025 12:00 IST

    ஆரணி அருகே தனியார் பள்ளிப் பேருந்துகள் மோதி விபத்து

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சீனிவாசபுரம் கூட்ரோடு பகுதியில் இரண்டு தனியார் பள்ளிப் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் 23 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • Aug 28, 2025 11:39 IST

    திருவள்ளூரில் சிறுவனை கடித்த தெருநாய்!

    திருவள்ளூரில் கடைக்குச் சென்ற 6 வயது சிறுவனின் கை, கால்களை தெருநாய் வெறிகொண்டு கடித்ததில், காயமடைந்த சிறுவன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.



  • Aug 28, 2025 10:47 IST

    18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர், கோவை, நீலகிரி, திருவாரூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 28, 2025 10:46 IST

    சேலம் அருகே பாம்பு கடித்து இளைஞர் பலி

    சேலம் அருகே, வீட்டில் நுழைந்த நல்லபாம்பை விளையாட்டாகப் பிடிக்க முயன்ற இளைஞரின் கைவிரலை பாம்பு கடித்துவிட்டது. வலி இருந்தும் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல், காயம்பட்ட விரலில் துணியைக் கட்டிக்கொண்டு மீண்டும் அந்தப் பாம்பைப் பிடிக்க முயற்சித்திருக்கிறார். நேரம் செல்லச் செல்ல வலி அதிகரிக்கவே, வேறு வழியின்றி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால், அதற்குள் விஷம் உடல் முழுவதும் பரவி, அவர் சுயநினைவை இழந்துவிட்டார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல், அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.



  • Aug 28, 2025 09:37 IST

    நாளை திருமணம்: பைக்கில் சென்ற புதுமாப்பிளை பலி

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 27). இவர் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் இரும்பு கடையும் நடத்தி வந்தார். இவருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்க இருந்த நிலையில் லாரி மோதி விபத்தில் பலியான சம்பவம் சேலம் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



  • Aug 28, 2025 09:14 IST

    10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

     



  • Aug 28, 2025 09:14 IST

    திருவள்ளூர்: 6 வயது சிறுவனை கடித்த தெரு நாய்

    திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற 6 வயது சிறுவனை துரத்திச் சென்று கை, கால்களில் தெரு நாய் கடித்துள்ளது. சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

     



  • Aug 28, 2025 09:14 IST

    வேளாங்கண்ணி கடலில் நாளை முதல் குளிக்கத் தடை

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா தொடங்குவதையொட்டி நாளை முதல் கடலில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்படுதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

     



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: