/indian-express-tamil/media/media_files/2025/07/21/nainar-nagendran-2-2025-07-21-17-23-49.jpg)
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தது. நெடுந்தீவு கடல் பகுதியில் வைத்து மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
Jul 29, 2025 17:10 IST
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலை 4 மணி நிலவரப்படி, விநாடிக்கு 1.10 லட்சம் கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து அதே அளவுக்கு நீர் வெளியேற்றப்படுகிறது.
-
Jul 29, 2025 16:50 IST
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சி அளிக்கிறது - நயினார் நாகேந்திரன்
கிருஷ்ணகிரி வேப்பனம்பள்ளியில் கடந்த 2 வாரத்தில் மட்டும் நான்கு பேருக்கு பா*யல் வன்கொடுமை நடந்துள்ள செய்தியால் அதிர்ச்சி- பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
-
Jul 29, 2025 16:15 IST
சிறுவனுக்கு 18 வயது பூர்த்தி
நெல்லை பாப்பாக்குடியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச்சென்ற காவல் உதவி ஆய்வாளரை வெட்டிக்கொல்ல முயன்ற சண்முகசுந்தரம் மீது துப்பாக்கிச்சூடு முன்னர் 17 வயது இளஞ்சிறார் எனக் கூறப்பட்ட நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்தது உறுதியானது.
-
Jul 29, 2025 15:37 IST
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் விசாரணைக்கு அனுமதி
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு திருவள்ளூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
Jul 29, 2025 14:49 IST
300.17 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்திருக்கிறார் திருச்சியை சேர்ந்த செல்வபிருந்தா
கடந்த இரண்டு ஆண்டுகளில், 'அமிர்தம் தாய்ப்பால் தானம்' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் துணையுடன் 300.17 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்திருக்கிறார். திருச்சியை சேர்ந்த செல்வபிருந்தா; இதன்மூலம் 300 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்த ஆசியாவின் முதல்| பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்
-
Jul 29, 2025 14:33 IST
மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நேற்று இரவு இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jul 29, 2025 14:03 IST
நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதி பணியிடை நீக்கம்
நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன்-கிருஷ்ணவேணி தம்பதி பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கவின் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோர்களான எஸ்.ஐ தம்பதியினர் தூண்டுதலால்தான் கவின் கொலை செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 29, 2025 11:09 IST
எஸ்ஐ மீது தாக்குதல் - 2 சிறுவர்களும் கைது
நெல்லையில் விசாரணைக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் மற்றொரு சிறுவனும் கைது செய்யப்பட்டான். மதுபோதையில் 2 சிறுவர்களும் மாற்றுத்திறனாளி ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
-
Jul 29, 2025 10:47 IST
மதுரை ஆதீனம் எச்.ராஜா சந்திப்பு
உடல்நலக் குறைவால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகளை மதுரை ஆதீனம் மடத்திற்கு சென்று சந்தித்து அவரது உடல்நலன் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து எச் ராஜா கேட்டறிந்து அவரிடம் ஆசி பெற்றார்.
-
Jul 29, 2025 10:46 IST
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி அமளி
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் சொத்துவரி முறைகேடு விவாகரத்துக்கு பொறுப்பேற்று மேயர் இந்திராணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுக 15 கவுன்சிலர்கள் ஒரு பாஜக கவுன்சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். கூட்டஅரங்கில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் பாதுகாவலர்களால் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Jul 29, 2025 10:33 IST
2வது கட்டமாக தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி
2வது கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி
-
Jul 29, 2025 09:53 IST
திருவாரூர்: சண்டையை விலக்க சென்றவர் குத்திக்கொலை
திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் சண்டையை விலக்கச் சென்ற நீதிமன்ற ஊழியர் தினேஷ் குத்திக் கொலை செய்யப்பட்டார். முகமது ஆஸம் என்பவரின் பெண் நண்பர் கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்து வந்துள்ளார். பெண் நண்பர் வீட்டுக்கு வந்த முகமது ஆஸம், அவரது உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சண்டையை விலக்க நீதிமன்ற ஊழியர் தினேஷ் முயற்சித்தபோது முகமது ஆஸமிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
-
Jul 29, 2025 09:12 IST
தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறிய இலங்கை கடற்படையினர் அதிரடியாக கைது செய்தது தெரியவந்துள்ளது. இலங்கை பருத்தித் துறை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அட்டூழியம் செய்வதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் நேற்று கூறியிருந்த நிலையில், இரவோடு இரவாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Jul 29, 2025 09:12 IST
நெல்லை அருகே சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு -பரபரப்பு
நெல்லை பாப்பாகுடியில் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்றதாக 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக சிறுவன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளரை வெட்ட முயற்சி செய்துள்ளார்.
-
Jul 29, 2025 09:12 IST
பவானிசாகர் அணை: நீர்வரத்து 9742 கனஅடியாக உயர்வு
ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6548 கன அடியில் இருந்து 9742 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.04 அடி; அணையில் இருந்து வினாடிக்கு 9705 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
-
Jul 29, 2025 09:12 IST
தூத்துக்குடி: 3,000 ஏக்கரில் அமைகிறது கப்பல் கட்டும் தளம்
தூத்துக்குடியில் 3,000 ஏக்கரில் கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடியை முக்கிய கப்பல் கட்டும் தளமாக உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 5 மாநிலங்களில் 15,000 ஏக்கரில் ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பீட்டில் கப்பல் கட்டுமான தொகுப்பு செயல்பட உள்ளன. ஆந்திரா, ஒடிசா, குஜராத், மராட்டியம் வரிசையில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கப்பல் கட்டும் தளத்துக்காக துறைமுகம் அருகே 1,800 ஏக்கர் இடம் தேர்வு; விரைவில் கூடுதலாக 1,200 ஏக்கர் இணைக்கப்பட்டுள்ளது.
-
Jul 29, 2025 09:11 IST
பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் - அவதி
ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களால், பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆண்டுதோறும் ஆடிப்பூர விழாவையொட்டி மேல்மருவத்தூர், மேல்மலையனூர், சமயபுரம், மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்னை புறநகர் பகுதியில் இருந்து கார் மற்றும் அரசு பேருந்துகளில் பக்தர்கள் அதிகளவில் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று ஆடிப்பூர விழாவையொட்டி ஏராளமானோர் சென்னையில் இருந்து மேற்கண்ட கோயில்களுக்கு வாகனங்களில் சென்றதால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.