Coimbatore, Madurai, Trichy News Highlights: விலைவாசி விண்ணை முட்டுகிறது, தி.மு.க. ஆட்சியில் அனைத்தும் உயர்வு: இ.பி.எஸ் பேச்சு

Coimbatore, Madurai, Trichy News Live- 12 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 12 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Eps

கரும்பு ஏற்றி வந்த லாரியை வழிமறித்த காட்டு யானை

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரி, ஆசனூர் அருகே சென்றபோது காட்டு யானை ஒன்று வழிமறித்தது. லாரியில் இருந்த கரும்புகளைத் தனது தும்பிக்கையால் பறித்துச் சாப்பிட்டதால், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisment
  • Sep 12, 2025 21:35 IST

    விலைவாசி விண்ணை முட்டுகிறது, தி.மு.க. ஆட்சியில் அனைத்தும் உயர்வு: இ.பி.எஸ் பேச்சு

    தி.மு.க அரசால் விலைவாசி உயர்வை குறைக்க முடியவில்லை. வீட்டு வரி, குடிநீர் வரி, மின்கட்டணம் என அனைத்தும் உயர்வு. அரசு நினைத்தால்தான் போதைப்பொருட்களை தடுத்து நிறுத்த முடியும் என திருப்பூரில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.



  • Sep 12, 2025 19:27 IST

    யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க  வனப்பகுதிகளில் வேலி அமைக்க அனுமதி

    கோவை, மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் நீதிபதிகள் சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி நேரில் ஆய்வு செய்த நிலையில், யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க  வனப்பகுதிகளில் வேலி அமைக்க அனுமதி அளித்துள்ளனர். இதன் மூலம் 10 கிமீ தூரத்திற்கு எஃகு கம்பி வேலி அமைக்கும்  பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்



  • Advertisment
    Advertisements
  • Sep 12, 2025 16:51 IST

    ராமேஸ்வரம் ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் எஞ்சின் சோதனை ஓட்டம்

    ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் எஞ்சினை இயக்கி சோதனை நடைபெற உள்ளது. ரயில் எஞ்சினை இயக்கி சோதனை நடைபெறுவதால் ரயில் பாதை அருகே மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - ராமநாதபுரம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவுபெற்றது. சோதனைக்காக புதிய மின் ரயில் பாதையில் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



  • Sep 12, 2025 16:18 IST

    திருச்சியில் நாளை மக்களை சந்திக்கிறேன்: விஜய்

    பொய் வாக்குறுதி தந்து மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்; நாளை காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மக்களை சந்திக்கிறேன் இந்த மக்கள் சந்திப்புப் பயணம் மகத்தான வெற்றி பெறும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் “உங்க விஜய், நான் வரேன்” என்று  தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். 



  • Sep 12, 2025 16:05 IST

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கோரி மனு

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதிகளில் பெரிய தடுப்பு சுற்றுச்சுவர் கட்டவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



  • Sep 12, 2025 14:16 IST

    அன்புமணி - ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு!


    திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தை ராமதாஸ் தரப்பினர் பூட்டியதால், அன்புமணி தரப்பினர் - ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அலுவலகம் இயங்கி வரும் கட்டடத்தின் உரிமையாளரான செந்தில், அன்புமணி தரப்பினர் அதனை பயன்படுத்திக் கொள்ள எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தார்.



  • Sep 12, 2025 12:58 IST

    மதுரை விமான நிலைய பெயர் விவகாரத்தை மீண்டும் எழுப்புவது நியாயமில்லை - கிருஷ்ணசாமி

    மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க நடவடிக்கை என்ற இ.பி.எஸ் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, “மதுரை விமான நிலைய பெயர் விவகாரத்தை மீண்டும் எழுப்புவது நியாயமில்லை’ என்று கூறினார்.

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, “எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறதோ அந்த கட்சியோடு கூட்டணி வைப்போம். ஆட்சி அதிகாரத்தில் விஜய் பக்கு தந்தால், அவருடன் கூட்டணி சேர்வது பற்றி பரிசீலிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.  



  • Sep 12, 2025 11:48 IST

    வீல்சேர் விவகாரம்; வீடியோ வெளியிட்ட மருத்துவமனை

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு வீல்சேர் தரவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டுக்கு சிசிடிவி ஆதாரங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது



  • Sep 12, 2025 11:30 IST

    ஜனவரி 7-ம் தேதி புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு

    புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு ஜனவரி 7 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்



  • Sep 12, 2025 11:17 IST

    தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

    வங்கக் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். படகின் எஞ்சின், வலை, ஜி.பி.எஸ் உள்ளிட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்



  • Sep 12, 2025 10:18 IST

    தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    திருவண்ணாமலை சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 2,100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், 119 அடி நீர்மட்டம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை இன்று எட்டவுள்ளது



  • Sep 12, 2025 10:02 IST

    தண்ணீர் தொட்டிக்குள் சிக்கி தவித்த யானை மீட்பு

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பழங்குடியின கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிக்கிய பெண் யானையை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மீட்டனர்.



  • Sep 12, 2025 09:47 IST

    கோவை, நெல்லை, மதுரையில் உள்ள போத்தீஸ் கடைகளில் வருமான வரி சோதனை

    கோவை, நெல்லை மற்றும் மதுரையில் உள்ள போத்தீஸ் ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. 

    நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது; சென்னை நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் உரிமையாளர்களின் இரு மகன்கள் வீடுகளிலும், கோவையில் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் பகுதி மற்றும் மதுரை மேலமாசி வீதியில் உள்ள போத்தீஸ் துணிக்கடைகளில் சோதனை நடந்து வருகிறது. 



  • Sep 12, 2025 09:44 IST

    தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

    தேனி - கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. 



  • Sep 12, 2025 09:21 IST

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

    தர்மபுரி - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 



  • Sep 12, 2025 09:19 IST

    காரக்கோட்டை கிராம மக்கள் குடிநீருக்காக அவதி

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள காரக்கோட்டை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, ஆழ்துளைக் கிணறு இல்லாததால் செயல்படாமல் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரால் திறக்கப்பட்ட இத்தொட்டிக்கு இதுவரை தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.



  • Sep 12, 2025 09:18 IST

    பல நாட்களாக மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் தவிப்பு

    வேலூர் மாவட்டம், பீஞ்சமந்தை மலை கிராமத்தில் மின்மாற்றி பழுது காரணமாக கட்டிப்பட்டு, பாலாண்டூர், புதூர் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. பல நாட்களாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுவதால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Sep 12, 2025 09:18 IST

    கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: