Coimbatore, Madurai, Trichy News Live: 50% வரி விதிப்பு எதிரொலி - தூத்துக்குடிக்கு திரும்பும் 500 டன் கடல் உணவுகள்

Coimbatore, Madurai, Trichy News Live- 29 August 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 29 August 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tuticorin Amonia

இன்று கோலாகல தொடக்கம்

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வருவோர் மாதா சொரூபத்தை வழிபட்டுச் செல்கின்றனர். கடற்கரை சாலை, கடைவீதி, தேவாலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

  • Aug 29, 2025 15:51 IST

    4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.



  • Aug 29, 2025 15:44 IST

    நெல்லையில் இருந்து சுற்றுலா சிறப்பு ரயில்

    ரயிலில் புனித யாத்திரை மேற்கொள்ளும் வகையில் நவ.9ம் தேதி நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நவ.9இல் தொடங்கி நவ.16ம் தேதி வரை நாசிக், சீரடி, பண்டரிபுரம், மந்திராலயம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வகையில் சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கம்; 3 வகையான கட்டணங்கள் நிர்ணயம்; www.irctctourism.com என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல மேலாளர் ராஜலிங்கம் பாசு தெரிவித்துள்ளார். 



  • Advertisment
  • Aug 29, 2025 15:23 IST

    தூத்துக்குடிக்கு திரும்பும் 500 டன் கடல் உணவுகள்

    50% வரி விதிப்பு எதிரொலியால் தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு 60 கண்டெய்னர்களில் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கடல் உணவுகள் பாதியில் வழியில் திருப்பி அனுப்பப்பட்டன. 500 டன் இறால், கணவாய் உள்ளிட்ட கடல் உணவுகளை வாங்க அமெரிக்க வர்த்தகர்கள் மறுத்தனர். அமெரிக்காவிற்கு கடல் உணவுகள் வந்து சேர்ந்தால் டெலிவரி எடுக்க மாட்டோம் என வர்த்தகர்கள் திட்டவட்டமாக கெரிவித்துள்ளனர்.   



  • Aug 29, 2025 14:18 IST

    கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Aug 29, 2025 13:53 IST

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.க்கு காலவரையற்ற விடுமுறை

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மாணவர்கள் மோதல் விவகாரத்தால் வகுப்புகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பல்கலை. வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 29, 2025 13:12 IST

    புதுச்சேரியில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு- 2 பேர் கைது

    புதுச்சேரியில் தனியார் பேருந்தின் கண்ணாடியை கற்களை வீசி தாக்கி உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Aug 29, 2025 10:58 IST

    அரசு பேருந்து மோதி தூய்மை பணியாளர்கள் மரணம்

    சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி சாலையோரம் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் சரண்யா உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர்.



  • Aug 29, 2025 10:37 IST

    சிவகங்கை பா.ஜ.க நிர்வாகி இறப்பில் மர்மம்

    சிவகங்கை வாரச்சந்தை பகுதியில் பா.ஜ.க நிர்வாகி சதீஷ்குமார் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இயற்கை மரணமா? யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Aug 29, 2025 10:32 IST

    பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!

    தென்காசி: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஆக.29) மதியம் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 29, 2025 10:14 IST

    காதல் மனைவியை பிரித்த சித்தப்பாவை கொலை செய்த இளைஞர்

    தூத்துக்குடி: ஒட்டப்பிடாரத்தில் காதல் மனைவி தன்னுடன் வர மறுத்ததற்கு மனைவியின் சித்தப்பாதான் காரணம் எனக் கூறி அவரை கல்லால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவர் மாரி செல்வத்துக்கு (24) போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

    4 மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி முகிலாவை மாரி சரியாக கவனித்துக் கொள்ளாததால், அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் முகிலா.



  • Aug 29, 2025 10:12 IST

    பாஜக நிர்வாகி இறப்பில் மர்மம்

    சிவகங்கை வாரச்சந்தை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பாஜக நிர்வாகி சதீஷ்குமார். இயற்கை மரணமா? யாரேனும் அடித்து கொலை செய்தார்களா?  என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Aug 29, 2025 09:12 IST

    திருப்புவனம் அஜித்குமார் வழக்கு

    திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது பேராசிரியர் நிகிதா தந்த நகைத் திருட்டுப் புகாரில் வழக்குப் பதிவு செய்தது சிபிஐ. அஜித்குமார் கொலை வழக்கு ஏற்கனவே சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், நிகிதா வழக்கையும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.



  • Aug 29, 2025 09:11 IST

    22 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு

    தஞ்சாவூர்: மருத்துவ கல்லூரி சாலையில் வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு 22 குட்டிகளை ஈன்றுள்ளது. தாய் மற்றும் குட்டிகள் வனத்துறையினரால் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட உள்ளன.

    GzfOISEbkAE54Dg



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: