Advertisment

சென்னையில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி... அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

தமிழகத்தில் 50-க்கு மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதி கோரியது.

author-image
WebDesk
New Update
Madras-HC-3

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு போராட்டங்கள் அவசியம் என்று கூறியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 50-க்கு மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதி கோரியது. இந்த அணிவகுப்புக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், சுற்றுசுவருக்கு உட்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்திக்கொள்ளலாம் என்று கூறியது. அதே சமயம் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து கோவை குண்டுவெடிப்பு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக தொடரப்பட்ட அவதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாற்று தேதிகளில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து, அமல்படுத்தியத்காக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனிடையே அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 50 இடங்களில் 3 இடங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்த அரசு உத்தரவிட்டது.

மேலும் 23 இடங்களில் உள்ளரங்கில் நடத்தவும், 24 இடங்களில், அணிவகுப்பு நடத்த அனுமதி மறுத்தும் அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அணிவகுப்பு/அமைதியான ஊர்வலத்தை நடத்துவதற்காக மேல்முறையீடு செய்பவர்கள் மூன்று வெவ்வேறு தேதிகளுடன் மாநில அரசு அதிகாரிகளை அணுகுமாறு அறிவுறுத்தியது.

மேலும் குறிப்பிட்ட 3 தேதிகளில் ஒரு தேதியில் அவர்களுக்கு அனுமதி வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, கொடுக்கப்பட்ட உண்மை மேட்ரிக்ஸில் மற்றும் மேற்கூறிய சட்ட முன்மொழிவைப் பயன்படுத்துவதன் மூலம், மிகவும் புனிதமான ஒன்றாகக் கருதப்படும் பேச்சு, கருத்து மற்றும் ஒன்றுகூடுவதற்கான அடிப்படை உரிமையை நிலைநிறுத்தும் வகையில் மாநில அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மீற முடியாத உரிமைகள்” என்று நீதிபதிகள் ஆர் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வு குறிப்பிட்டிருந்தது.

மேலும் குடிமக்களின் உரிமைக்கான அரசின் அணுகுமுறை ஒரு பொதுநல அரசில் ஒருபோதும் விரோதமாக இருக்க முடியாது, மேலும் அரசியல் அமைப்புச் சட்டம் மேலாதிக்கம் மற்றும் அடிப்படை உரிமைகளை ஆளும் ஆரோக்கியமான ஜனநாயகத்தை பராமரிக்க அமைதியான பேரணிகள், போராட்டம், ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். என்று மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 4, 2022 தேதியிட்ட, அவமதிப்பு மனுக்களில் இயற்றப்பட்ட உத்தரவு, ரத்து செய்யப்பட்டு, செப்டம்பர் 22, 2022 தேதியிட்ட, ரிட் மனுக்களில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, மறுசீரமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும். மேல்முறையீடு செய்தவர்கள் அணிவகுப்பை நடத்த விரும்பிய தேதிகள் கடந்துவிட்டதால், இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படுவது மட்டுமே பொருத்தமானது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், ஆர்எஸ்எஸ் கடுமையான ஒழுக்கத்தை உறுதி செய்யுமாறும், அணிவகுப்பின் போது தங்கள் தரப்பில் கோபத்தை தூண்டும் செயல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஊர்வலம் மற்றும் கூட்டம் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய, மாநில அரசு, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, மாநிலம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் சீருடை (அடர் ஆலிவ் பச்சை நிற கால்சட்டை, வெள்ளை சட்டை, தொப்பி, பெல்ட், கருப்பு காலணிகள்) அணிந்து ஊர்வலத்தை நடத்த அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆர்எஸ்எஸ் கோரிக்கை விடுத்தது.

சுதந்திரத்தின் 75வது ஆண்டு, பாரத ரத்னா பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமி விழாவைக் கொண்டாடும் வகையில், 2022 அக்டோபர் 2-ம் தேதி பல்வேறு இடங்களில் பாதை அணிவகுப்பு நடத்தவும், பொதுக்கூட்டம் நடத்தவும் இந்த அமைப்பு முன்பு அனுமதி கோரியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment