மதுரை ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அடக்கம்: இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அடக்கம்: இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரை

மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லக்ஷ்மணன் (24) ஜம்மு காஷ்மீர் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய  தாக்குதலில் உயிரிழந்தார். இன்று அவரது உடல் விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இயக்குநர் அலுவலகம் முன்பு ஏற்படுத்தப்பட்டுள்ள மேஜையில் வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர் லக்ஷ்மணனின் உடலுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உடல் முழு ராணுவ மரியாதையோடு 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

லட்சுமணனுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் என்பதால் சிறுவயதில் அவர் விளையாடிய கிரிக்கெட் மட்டையும் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu madurai army man lakshman body arrived in madurai airport

Best of Express