/tamil-ie/media/media_files/uploads/2022/06/annamalai-bjp-3.jpg)
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆடியோ விவகாரம் தொடர்பாக மதுரை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் மதுரை மாநகர மாவட்ட பாஜக புகார் மனு அளித்துள்ளனர்.
மதுரையில் விமான நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரம் நடைபெற்றபோது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டு இருவருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி ஆடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அவப்பெயர் ஏற்படுத்த திமுக அரசின் பிண்ணனியில் டாக்டர் சரவணன் ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தின் பிண்ணனியில் திட்டமிட்ட சூழ்ச்சி உள்ளது. சரவணன் தனது மருத்துவமனையில் செய்த மோசடியை தற்காத்துக் கொள்ள மாநில தலைவர் மீது அவதூறு பரப்புகிறார்.
கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் விமான நிலையத்திற்குச் செல்லாத பாஜகவினரை கூட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர் என்று சுசீந்திரன் தெரிவித்தார். இதில் மதுரை மாநகர மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us