ஜாதி மதம் சாயல்கள் இல்லாமல் மாவட்ட நிர்வாகவாகமே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடநத்தப்படுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாயும் காளைகயை வீரர்கள் கட்டி தழுவுவார்கள். இது அவ்வளவு எளிதானது அல்ல என்றாலும் கூட இந்த போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பது வழக்கம்.
அதே சமயம் இந்த போட்டியில் ஆபத்தும் அதிகம் இருப்பதால், நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமே இதில் களமிறங்கி அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கும் வீரர்களுக்கு முதல்கட்டமாக மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல சோதனைகள் நடத்தப்பட்டு அதன்பிறகு தேர்வு செய்யப்படுவார்கள்.
பாரம்பரியமாக நடைபெற்று வந்தாலும், தமிழகத்தில் சில முக்கிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டில் இருந்தும் வருவார்கள். இங்கு ஆண்டு தோறும் தமிழ் மாதத்தில் தை 1-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த போட்டியை நடத்த பல்வேறு அமைப்புகள் தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், தற்போது மாவட்ட நிர்வாகம் தான் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு இரு அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அடுத்த 8 ஆண்டுகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற வில்லை.
அதன்பிறகு ஊர் பொதுமக்கள் ஒன்றினைத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திய நிலையில், நடப்பு ஆண்டில் விவசாய அமைப்பும், கிராமிய கமிட்டியும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தீவிரம் காட்டி காட்டியது. சாதிய தலையீடு இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், நீதிமன்றம் ஜல்லிகட்டு போட்டியை அரசு தலையிட்டு நடத்த வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து இதில் பஞ்சாயத்து சார்பில் ஜல்லிக்கட்ட போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்து 2024-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியை நாங்கள் தான் நடத்துவோம் என்று சில அமைப்புகள் முயற்சி செய்து வரும் நிலையில், இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, 2024-ம் ஆண்டும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும். இந்த போட்டியில் ஜாதி மதம் சாயல்கள் இருக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நடப்பு ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னதாக யாருக்கும் முதல் மரியாதை கொடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.