நான் ரவுடி இல்லை ஜோக்கர் என்று போடுங்கள் எம்.ஜி.ஆருக்கு தொப்பி, கருணாநிதிக்கு கண்ணாடி போன்று எனக்கு நகைகள் என்று பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரையில் உடல் முழுவதும் கிலோ கணக்கில் நகைகள் அணிந்து கொண்டு ஹெல்மட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக ரிட்டயர்டு ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நான் அணிந்திருக்கும் நகைகள் அனைத்திற்கும் வருமான வரி கட்டுகிறேன். நடப்பு ஆண்டில் கூட 45 லட்ச ரூபாய் வருமான வரி கட்டியுள்ளேன். அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் எனது மகன் மற்றும் மகள் பெயரில் உள்ளது. என் தந்தை பெயரில், பலகோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன.
என் குடும்பத்தினர் மாதம் 3 லட்ச ரூபாய் எனக்கு பாக்கெட் மணியாக கொடுக்கிறார்கள். அதனால் நான் சம்பாதிப்பதில்லை. ஜாலியாக ஊர் சுற்றி வருகிறேன். இதனால் நான் ரவுடித்தனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. என் தந்தையை கொன்றதற்காக நான் ஒருவரை கொலை செய்தேன். இதற்காக 10 வருடங்கள் தண்டனை அனுபவித்தேன். அப்போதும் கூட தினமும் 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாப்பிட்டேன்
இப்போது நான் ரவுடி இல்லை. என் பெயரை சொல்லி மிரட்டி பணம் வாங்குவதாக வெளியாகும் தகவல் தவறானது. என்னை கண்கானிப்பதற்காக ஒரு தனி போலீஸ்காரரை நியமித்துள்ளனர். அப்படி இருக்கும்போது நான் எப்படி குற்ற செயல்களில் ஈடுபட முடியும். என்மீது பதிவு செய்யப்பட்ட 70க்கு மேற்பட்ட வழக்குககளில் 60-க்கு மேற்பட்ட வழக்குகளில் நான் குற்றமற்றவன் என்று நிரூபித்துவிட்டேன. இன்னும் 6 வழக்குகள் தான் உள்ளது.
நான் ரவுடி இல்லை எனக்கு இந்த நகைகள் அடையாளமாக இருக்க வேண்டும் என்றுதான் இப்படி சுற்றிக்கொண்டிருக்கிறேன். இப்படி இருக்கும்போது என்னை ரவுடி என்று சொல்லி சித்ரவதை செய்கிறார்கள். நான் ரவுடி இல்லை என்னை ஜோக்கர் என்று போடுங்கள். நான் வெளியே வந்தால் 100 பேர் என்னுடன் போட்டோ எடுப்பார்கள். அப்படித்தான் காயத்ரி ரகுராம் வநதார். நான் அவரை ஒருமுறைதான் பார்த்திருக்கிறேன். அவரைப்பற்றி தவறாக பதிவிட்டதற்காக திருச்சி சூர்யா என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/