மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்குமு் இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை செய்த நிலையில், ஏலத்தின்போது தமிழக அரசு எதிர்க்கவில்லை. பிப்வரியில் ஏலம் தொடங்கி நவம்பர் 7-ந் தேதி ஏலம் நிறைவடைந்தது. ஏலம் முடிவு அறிவிக்கும்வரை தமிழக அரசிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த சுரங்கத்திற்கு அப்பகுதி மக்களிடடையே பெரும் எதிர்ப்பு எழுந்த நிலையில, பலரும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த இடத்தில் சுரங்கம் அமைக்க கூடாது என்ற கருத்து வலுவாக எழுந்துள்ளது.
இதனிடையே, மதுரையில், மக்களின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய பரிந்துரை செய்துள்ள, பல்லுயிர் பகுதிகளை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மேலும் பிப்ரவியில் நடத்தப்பட்ட டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான ஏலத்தில், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம், ஏல முடிவு அறிவிக்கும்போதும், தமிழக அரசிடம் இருந்து எந்த முடிவும் இல்லை என்று கூறியுள்ள மத்திய அரசு, டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்யுமாறு, இந்திய புவியியல் ஆய்வு மையத்துக்கு பரிந்துரைத்திருக்கிறது. அதில், பல்லுயிர் பாரம்பரிய தலம் உள்ள இடத்தில் சுரங்கம் அமையவுள்ளதாக கருத்துருக்கள் வந்திருக்கிறது. அதனால் பல்லுயிர் பகுதிகளைத் தவிர்த்துவிட்டு மீதமுள்ள பகுதிகளில் சுரங்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
மேலும், ஏலம் விடப்பட்ட பிறகு, சுரங்கம் அமையும் பகுதியில் பல்லுயிர் தளம் உள்ளது எனக்கூறி, இந்த ஏலத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனவே, சுரங்கம் அமையும் பகுதியில் உள்ள பல்லயிர் தளம் உள்ள பகுதிகள் எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து ஆய்வு செய்வது, பல்லுயிர் தளம் இல்லாத பகுதிகளில் சுரங்கம் அமையும் பிளாக்குகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என ஜிஎஸ்ஐ., கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு நாயக்கர்பட்டி டங்ஸ்டின் பிளாக்கை ஏலத்தில் எடுத்த நிறுவனத்திற்கு லெட்டர் ஆஃப் இண்டன்ட் (letter of intent) வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. பொருளாதா வளர்ச்சிக்காக கனிமங்களை ஏலம் விடுவதே சுரங்கத்துறை அமைச்சகத்தின் பங்கு. கூட்டு உரிமம், கனிம சுரங்கத்தை குத்தகை விட கையெழுத்திடுவது, மாநில அரசால் செய்யப்படுகிறது என்று கூறியுள்ள மத்திய அரசு, டங்ஸ்டன் விருப்ப ஏலதாரருக்கு, ஒப்பந்த கடிதம் வழங்கும் பணியை நிறுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“