மயிலாடுதுறை கொலை வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு

புலன் விசாரணை முடித்த பின்பு 21 குற்றவாளிகள் மீது மயிலாடுதுறை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது. இளம் பிழையாளி மீது மயிலாடுதுறை இளஞ்சிறார் நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டன.

புலன் விசாரணை முடித்த பின்பு 21 குற்றவாளிகள் மீது மயிலாடுதுறை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது. இளம் பிழையாளி மீது மயிலாடுதுறை இளஞ்சிறார் நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டன.

author-image
WebDesk
New Update
Murder case mailadu

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. மயிலாடுதுறை காவல் சரகத்தில் கடந்த 20.11.2021 அன்று மயிலாடுதுறை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கண்ணன் (27) என்பவருக்கும், மயிலாடுதுறை கலைஞர் நகரைச் சேர்ந்த கதிரவன் (41) என்பவருக்கும் டிபன் கடையில் வாய் தகராறுஏற்பட்டது. இது தொடர்பாக  கதிரவனை கண்ணன் தரப்பினர் தாக்கியுள்ளனர். 

Advertisment

இந்த தகராறு சம்பந்தமாக வந்த புகாரை தொடர்ந்து, கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை காவல் நிலைய நிலையம், கண்ணன் மற்றும் அவரது 5 கூட்டாளிகளை கைது செய்தது. பின்னர் கண்ணன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து கடந்த 17.08.2022 அன்று கண்ணனும் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் என்பவரும் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகில் வந்த போது, கதிரவன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். கண்ணனுடன் வந்த ரஞ்சித் என்பவருக்கு காயங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக கதிரவன் உட்பட 22 எதிரிகள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதில் கைது செய்யப்பட்ட முக்கிய 5 குற்றவாளிகள் மீது தடுப்பு காவல்சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவான இளம் பிழையாளி ஆவார். புலன் விசாரணை முடித்த பின்பு 21 குற்றவாளிகள் மீது மயிலாடுதுறை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது. இளம் பிழையாளி மீது மயிலாடுதுறை இளஞ்சிறார் நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் கடந்த 20.03.2024-ந் தேதி கண்ணன் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 18-வது எதிரி அஜித்குமார் (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் வரும் போது, கண்ணனின் சகோதரன் மில்கி (எ) சந்திரமோகன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அஜித்குமாரை அரிவாளால் வெட்டிகொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது  வழக்கில் சம்மந்தப்பட்ட மில்கி (எ) சந்திரமோகன் மற்றும் அவரது 10 கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Advertisment
Advertisements

இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட 11 எதிரிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு எதிரிகள் சிறையில் இருந்து வருகின்றனர். வழக்கின் புலன்விசாரணை செய்த காவலர்கள் குற்றவாளிகளை மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்த கண்ணனை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த நபர்கள் கொலை செய்தது தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் நேற்று (31.10.2025) இவ்வழக்கினை விசாரித்த மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம்சாட்டப்பட்ட கதிரவன்,தேவா (எ) மகாதேவன், சேது, சந்தோஷ், திவாகர், கார்த்திக், சுபாஷ் சந்திரபோஸ், சுப்பிரமணியன், முருகவேல், பிரித்விராஜ், ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இதையடுத்து 9 தண்டனை குற்றவாளிகளும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

இவ்வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் இராம.சேயோன், புலன்விசாரணை அலுவலர், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வம், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர். சிவக்குமார் மற்றும் நீதிமன்ற அலுவல் புரிந்த காவலர் . மாரிமுத்து ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.

பாபு ராஜேந்திரன் கடலூர்

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: