Advertisment

இலவச பட்டா, கலைஞர் திட்டத்தில் வீடு : மாஞ்சோலை தொழிலாளர்கள் கோரிக்கை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாஞ்சோலை இடத்திற்கான குத்தகை முடிய இன்னும் 4 வருடங்கள் உள்ள நிலையில், தொழிலாளர்களை வெளியேற்ற தனியார் நிறுவனம் முயற்சித்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manjolai Estae

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைபகுதியில் அமைந்துள்ள இடம் மாஞ்சோலை. மணிமுத்தாறு அணையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி, இந்தியா சுதந்திரத்திற்கு முன் சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் இருந்துள்ளது. மொத்தம் 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் எப்போதும் பசுமையாகவே காட்சியளிக்கும்.

இந்த நிலத்தை மும்பையை சேர்ந்த பாம்பே டிரேட்டிங் கார்ப்ரேஷன் என்ற நிறுவனத்திற்கு 100 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளார் சிங்கம்பட்டி ஜமீன்தார். 1929-ம் ஆண்டு முதல் 2028-ம் ஆண்டு வரை இந்த குத்தகை காலம் செல்லுபடியாகும் இந்த நிலத்தில், காபி, தேயிலை, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட பணப்பயிற்களை பயிரிட்ட நிலையில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து பணியமர்த்தியுள்ளனர்.

தற்போது மாஞ்சோலை இடத்திற்கான குத்தகை முடிய இன்னும் 4 வருடங்கள் உள்ள நிலையில், ஜமீன் நில ஒழிப்பு திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசு, மாஞ்சோலை எஸ்டேட்டை கையப்படுத்த முயற்சித்தது. ஆனால் மும்பையை சேர்ந்த அந்நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்று குத்தகை காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அதுவரை நிலத்தை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியது.

அதன்படி குத்தகை காலம் வரை நிலத்தை பயன்படுத்திக்கொள்ளவும், வரும் 2028-ம் ஆண்டு நிலத்தை அரசு கையகப்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. நிலத்தை ஒப்படைக்க இன்னும் 4 ஆண்டுகள் உள்ள நிலையில், இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க முடிவு செய்த அந்நிறுவனம் தொழிலாளர்களை அஙகிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டது. கடந்த ஜூன் 15-ந் தேதியே தொழிலாளர்கள் மாஞ்சோலையில் இருந்து வெளியேற கடைசி நாளாகும்.

இந்த நாளில் தொழிலாளர்கள் பசுமை நிறைந்த நினைவுகளே என்ற பாடலை பாடிக்கொண்டே அங்கிருந்து வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்தது. இதனிடையெ மாஞ்சோலை தொழிலாளர்களக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து தரும்வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுகக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

குத்தகை காலம் முடியும் முன்பே அங்கிருந்து வெளியேற சொல்வதாக மாஞ்சோலை தோட்டதொழிலாளர் அமுதா என்பவர் தொடர்ந்த வழக்கில், நாங்கள் 2 தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருகிறோம். மேலும் இந்த பகுதியில் 700-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் 2028 பிப்ரவரி 11-ந் தேதி முடிவடைகிறது. குத்தகை காலம் முடிந்தபின் இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றி அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் குத்தகை காலம் முடிவதற்கு முன்பாக, இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் நிறுவனம் அங்கிருந்து தொழிலாளர்களளை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. சொந்த வீடோ நிலமோ இல்லாத மாஞ்சோலை தொழிலாளர்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்கள். இதனால் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்க மறுவாழ்வு அளிக்கும வகையில் நத்தம் புறம்போக்கு பகுதியில் அவர்களக்க வீட்டுமனை பட்டா வழக்க வேண்டும்.

மேலும் அவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக்க வேண்டும். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்ட கழகம், கலக்காடு முண்டந்துரை புலிகள் சரணாலய பகுதிகள். அங்கன்வாடிகள் ஆகியவற்றில் பணி வழங்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தோம்.

இந்த மனு குறித்து அதிகரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆகவே இந்த கோரிக்கைளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்றும் 700 குடும்பங்களக்கும் மாதம் ரூ10,000 வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்க மதுரை உயர்நீதிமன்ற பொறுப்ப நீதிபதி மகாதேவன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்க வந்தது. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Manjolai Estate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment