/indian-express-tamil/media/media_files/2025/02/18/TPLLkkgIcxMuwYV2kcjH.jpg)
சேலத்தில் லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது
சேலத்தில் லஞ்சம் வாங்கிய 4 காவலர்கள் கைது: சேலத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் ராஜலட்சுமி உட்பட 4 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பாலு என்பவரிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கியபோது 4 பேரும் சிக்கினர். லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் ராமராஜன், எஸ்.ஐ. ராமகிருஷ்ணன், சரவணகுமார், தலைமை காவலர் ராஜலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு
வேலூர்: கனமழை காரணமாக கொட்டாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளமானது, பேரணாம்பட் - வீ.கோட்டா செல்லும் சாலையில் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் தரைக்காடு, ஜெ.ஜெ.நகர், சின்ன பஜார் வீதி, கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புக்குள் கழிவு நீரோடு சேர்ந்த மழை நீர் பெருக்கெடுத்ததால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
செண்பகத் தோப்பு அணையில் நீர் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில், செண்பகத் தோப்பு அணையில் இருந்து விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க நீர்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- Oct 11, 2025 07:16 IST
சேலத்தில் லஞ்சம் வாங்கிய 4 காவலர்கள் கைது
சேலத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் ராஜலட்சுமி உட்பட 4 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பாலு என்பவரிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கியபோது 4 பேரும் சிக்கினர். லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் ராமராஜன், எஸ்.ஐ. ராமகிருஷ்ணன், சரவணகுமார், தலைமை காவலர் ராஜலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- Oct 10, 2025 21:55 IST
அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் முடக்கம்- இ.பி.எஸ் குற்றச்சாட்டு
ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ், போதைப்பொருட்களால் இளைஞர் சமுதாயம் சீரழிகிறார்கள். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
- Oct 10, 2025 20:50 IST
அதிமுக, பாஜக கூட்டணியை பார்த்து பயம்- இபிஎஸ் கருத்து
2026 சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுகவுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தான் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இருக்க முடியும் என்று ஈரோடு மொடக்குறிச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- Oct 10, 2025 20:41 IST
உண்மையை கண்டிப்பாக சொல்வேன்-ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்
கரூர் சம்பவம் - விஜய் உட்பட அனைவரும் பேசமுடியாத அளவுக்கு வேதனையில் உள்ளோம். உயிரிழந்தவர்களை எங்களது குடும்பத்தினராக கருதுகிறோம். உண்மையை கண்டிப்பாக சொல்வேன். த.வெ.க மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது, நீதித்துறையை நம்பி போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம் என டெல்லியில் இருந்து சென்னை வந்த ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
- Oct 10, 2025 19:15 IST
நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கு
நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கில் 2வது முறையாக ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்த சுர்ஜித்தின் தந்தை எஸ்.எஸ்.ஐ சரவணன் மனுவை நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- Oct 10, 2025 18:22 IST
இ.பி.எஸ் - க்கு தவெக சார்பில் பேனர்
ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று த.வெ.க சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
- Oct 10, 2025 18:19 IST
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா!
என்னுடையவாழ்க்கையைபிறர்திட்டமிடுவதுஎனக்குமிகவும்பிடிக்கும். எனதுதேனிலவையும்அவர்களேதிட்டமிட்டுகொடுப்பார்கள்எனகாத்திருக்கிறேன். திருமணம்குறித்துவதந்திகள்பரவியநிலையில்நடிகைத்ரிஷாஇன்ஸ்டாஸ்டோரியில்கிண்டல்பதிவுவெளியிட்டுள்ளார்.
- Oct 10, 2025 15:48 IST
மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்
மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து ஐகோர்ட் கிளை 3வது நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், சிக்கந்தர் தர்கா செல்லும் வழியில் நெல்லிதோப்பில் இஸ்லாமியர் வழிபாடு நடத்த தடையில்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
- Oct 10, 2025 15:14 IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை: உச்சநீதிமன்றம்
இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்று இரவில் உடற்கூறாய்வு நடைபெறுவது வழக்கம்தான் என உடற்கூறாய்வு இரவில் நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் கூறிய நிலையில் நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
- Oct 10, 2025 15:06 IST
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிவிலக்கான வழக்குகளில் மட்டும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு உள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒரு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது. விசாரணையில் பெரும் குறைபாடுகள் இருந்தாலே ஒழிய சிபிஐக்கு மாற்ற உத்தரவிட முடியாது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 10, 2025 14:40 IST
விஜய் தாமதமாக வந்ததே விபத்துக்கு காரணம் - உச்சநீதிமன்றம்
அறிவித்த நேரத்துக்கு விஜய் வராததே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம் என உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக 5 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்; விஜய் பகலில் வருவதாக கூறியதால் காலை 7 மணி முதலே பொதுமக்கள் காத்திருந்தனர். சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது காவல்துறை அதிகாரிகளை சந்தேகிக்க தேவையில்லை. கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் இன்று வரை செல்லவில்லை. கரூர் நெரிசல் வழக்கில் விஜய் இன்று வரை சேர்க்கப்படாத நிலையில் ஆறுதல் கூற அவர் செல்லவில்லை. பொதுக்கூட்டம் தொடர்பான நெறி முறைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி விசாரித்ததால் மதுரை அமர்வு அதை எடுக்கவில்லை. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு நாங்கள் எந்த அதிகாரிகளையும் பரிந்துரைக்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- Oct 10, 2025 14:40 IST
ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் நாளை (அக்.11) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் நாளை (அக்.11) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம். ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் இலங்கை கடற்படையால் | கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 10, 2025 14:32 IST
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி, கோவை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Oct 10, 2025 14:24 IST
நெல்லையில் உள்ள சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயர் வைக்க முடிவு
நெல்லை ஹைகிரவுண்ட் வடக்கு சாலைக்கு மறைந்த தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயரை சூட்ட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாலை பெயர் மாற்றத்திற்கு தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற்றுள்ளதாக மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
- Oct 10, 2025 13:20 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், தேனி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், தென்காசி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 10, 2025 12:32 IST
நெல்லை வடக்கு ஹைகிரவுண்ட் சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயர் சூட்ட முடிவு
நெல்லையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் நெல்லை வடக்கு ஹைகிரவுண்ட் சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயர் சூட்ட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்கள் பண்பாட்டில் முக்கிய ஆய்வாளரான தொ.பரமசிவன் டிசம்பர் 24, 2020-ல் மறைந்தார்.அவரது நினைவாக நெல்லை வடக்கு ஹைகிரவுண்ட் சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- Oct 10, 2025 11:54 IST
மரக்கன்று நட்டால் தான் வணிக வளாகம் கட்ட அனுமதி - நெல்லை மேயர் அறிவிப்பு
மரக்கன்று நட்ட புகைப்படத்துடன் விண்ணப்பித்தால் மட்டுமே வணிக வளாகம் போன்ற கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இந்த புதிய விதி இன்று முதல் அமலாகிறது
- Oct 10, 2025 11:51 IST
முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.பி. அணை
கே.ஆர்.பி. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து உபரிநீர் திறப்பால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- Oct 10, 2025 11:17 IST
சேலம்: மோதிரம் வழிப்பறி வழக்கில் போலீஸ்காரர் கைது
சேலம், ஓமலூர் அருகே 2 சவரன் தங்க மோதிரத்தை வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமலூர் பனங்காட்டூரை சேர்ந்த இளநீர் வியாபாரி பைக்கில் சென்றபோது வழிமறித்து 2 சவரன் தங்க மோதிரத்தை 4 பேர் வழிப்பறி செய்தனர். இந்த வழக்கில், சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் சிவகுமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து போலீஸ்காரர் சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து சேலம் போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி நடவடிக்கை எடுத்துள்ளார்
- Oct 10, 2025 10:30 IST
ராணிப்பேட்டை: 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் உள்ள பொன்னை அணைக்கட்டு தடுப்பணையில் விநாடிக்கு 6,500 கன அடி தண்ணீர் வரத்து இருக்கிறது. இதையடுத்து பொன்னை ஆற்றின் கரையோரம் வசிக்கும் 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Oct 10, 2025 09:55 IST
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்களை மூட உத்தரவு
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக இயங்கும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள கருவண்ணராயர் கோவில் திருவிழாவில், வனக் கட்டுப்பாடு, ஆடு பலியிடுதல் உள்பட ஏற்கனவே விதிக்கப்பட்ட 11 கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
- Oct 10, 2025 09:32 IST
பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியை மூட நோட்டீஸ்
நெல்லை மாவட்டம் திடியூரில் உள்ள பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாட்டால் 7 மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்லூரியின் விடுதி வளாகத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர். சுகாதாரமான வசதிகளை ஏற்படுத்தும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் விடுதி உணவகத்தில் ஆய்வு நடத்தியதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் 2 உணவகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
- Oct 10, 2025 09:31 IST
பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்தது
பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால், கோபிச்செட்டிப்பாளையம் கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- Oct 10, 2025 09:30 IST
திருச்செந்தூர் கோயிலில் 5.28 கோடி ரூபாய் உண்டியல் வருமானம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் உண்டியல் மூலம் 5.28 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் ஒரு கிலோ 905 கிராம் தங்கம், 7 கிலோ 250 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.