/indian-express-tamil/media/media_files/2025/09/09/edappadi-k-palani-samy-admk-coimbatore-election-campaign-tamil-news-2025-09-09-18-48-44.jpg)
ஜி.டி.நாயுடு மேம்பாலம் நாளை திறப்பு: கோவை அவிநாசி சாலையில் 10.10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் முதல் நீளமான மேம்பாலத்தை மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரூ.1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இதில் 301 தூண்களும், 610 சாலை விளக்குகளும் உள்ளன. 17.25 மீட்டர் அகலம் கொண்டது.
விஜய் சந்திக்க அனுமதி கோரி த.வெ.க. மனு: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதற்காக அனுமதி கோரி தவெக தரப்பில் மின்னஞ்சல் மூலமாக டிஜிபி அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கரூர் செல்வதற்கான தேதி குறிப்பிடப்படாமல் மனு அளிக்கப்பட்டிருப்பதால், இந்தச் சந்திப்பு குறித்து மேலும் விவரங்களைக் காவல்துறை கேட்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 08, 2025 22:56 IST
திட்டங்களின் பெயரை மாற்றுவதில் கை தேர்ந்தவர் முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ் விமர்சனம்
திருச்செங்கோட்டில் உரையாற்றிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திட்டங்களின் பெயரை மாற்றுவதில் கை தேர்ந்தவர் முதல்வர் ஸ்டாலின். கோவையில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாலம் நாளை திறக்கப்படுகிறது. ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போராடுகிறார்கள். 53 மாதங்களில் திருச்செங்கோட்டில் ஒரு பெரிய திட்டம் கூட நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சியில் வரி பல மடங்கு அதிகரித்துள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.
- Oct 08, 2025 21:01 IST
எல்லா மாவட்டங்களிலும் அரசுப்பணிகள் குறித்து ஆய்வு - திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் தகவல்
முதலமைச்சர் ஆணைக்கிணங்க எல்லா மாவட்டங்களுக்கும் சென்று அங்கே இருக்கக்கூடிய மாவட்ட அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் திட்டப்படி பணிகள் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தோம் என திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
- Oct 08, 2025 19:09 IST
கிணற்றில் விழுந்த நரி
திருச்சி வெள்ளக்கல் பகுதியில் உள்ள தனியார் சொந்தமான தோட்டத்தில், வேட்டையாட வந்த நரியொன்று, அங்குள்ள 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்ததால் பரபரப்பு. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணப்பாறை தீயணைப்பு துறையினர், கடும் போராட்டத்திற்கு பின் நரியை மீட்டு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர்.
- Oct 08, 2025 19:07 IST
வேலூர்: ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு; மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதி - அண்ணாமலை
வேலூர்நெக்கினிமலைகிராமத்தில்இருந்துஅமிர்திவழியாகசெல்லும்ஆற்றில்அதிகவெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளதால்ஆற்றைக்கடக்கமுடியாததுஎன்பதால், மாணவர்கள்பள்ளிக்குசெல்லமுடியாமல்அவதிப்பட்டுவருவதாகஅண்ணாமலைதெரிவித்துள்ளார்.
- Oct 08, 2025 18:51 IST
எல்.ஐ.கே- பட்ஜெட் ரூ.100 கோடி!
பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் எல்.ஐ.கே படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி. ரூ.130 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்க இருந்ததாகவும், பின்னர் பிரதீப் இணைந்தபின் படத்தின் பட்ஜெட் 90 முதல் 95 கோடி வரை மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- Oct 08, 2025 18:15 IST
அனைத்துத் துறைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்துத் துறைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவருகிறது. அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
- Oct 08, 2025 17:46 IST
குற்றாலம் அருவியில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
குற்றாலம் அருவியில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. என்ன வசதிகள் தேவை என்பது குறித்து வழக்கறிஞர் ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
- Oct 08, 2025 16:00 IST
உடுமலை; தமிழ்நாடு-கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு
உயர் அழுத்த மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால் தமிழ்நாடு-கேரள எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சின்னார் வனப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளதால் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
- Oct 08, 2025 15:21 IST
கரூரில் விஜய் பரப்புரை நெரிசலின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கு - தவெக உறுப்பினர் சரண்
கரூரில் விஜய் பரப்புரை நெரிசலின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் தவெக உறுப்பினர் சரணடைந்தார். கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் முன்ஜாமின் கோரி சேலத்தை சேர்ந்த மணிகண்டன் சரண் அடைந்துள்ளார். கரூர் நீதிமன்ற நீதிபதி முன் சரணடைந்து முன்ஜாமின் கேட்டுள்ளார் மணிகண்டன்.
- Oct 08, 2025 15:21 IST
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்புகள் அதிகளவில் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்புகள் அதிகளவில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெல்லையில் பேட்டி அளித்துள்ளார். பின்னர் பேசிய அவர், 2012, 2017 காலகட்டத்தில்தான் டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
- Oct 08, 2025 14:59 IST
கரூர் சம்பவம் - பவுன்ராஜ் மனு தள்ளுபடி
கரூர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து கரூர் நீதிமன்றம் உத்தரவு. கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பவுன்ராஜ் கைது செய்யப்பட்டார்
- Oct 08, 2025 13:56 IST
தமிழகத்தில் இந்த மாவட்டங்களின் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
இன்று (08-10-2025) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 08, 2025 11:47 IST
கரூர் சோகம்: ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கிய செந்தில்பாலாஜி
கரூர்: கடந்த செப். 27 அன்று விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், காயமடைந்த 45 பேருக்கு முதல் கட்டமாக தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி நேரில் சென்று வழங்கினார்.
- Oct 08, 2025 11:39 IST
நெல்லை மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சீவலப்பேரி மற்றும் கோவிலம்மாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலப் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர். மனோகரன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், உதவி திட்ட இயக்குநர் கீதா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
- Oct 08, 2025 11:21 IST
40 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல்
கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே பல கோடி மதிப்பிலான 40 கிலோ திமிங்கல எச்சத்தை விற்பனைக்காக காரில் கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டனர். திமிங்கல எச்சத்தைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Oct 08, 2025 11:01 IST
மதுரையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே: மதுரையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள தவெக போஸ்டர்
- Oct 08, 2025 09:57 IST
விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் 40 வீடுகள் இடித்து அகற்றம்
விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த 40 குடும்பத்தினரின் வீடுகளை, நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. ரயில்வேக்கு சொந்தமான இடம் எனக் கூறி பாதை கேட்டு வனஸ்பதி நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தது.
- Oct 08, 2025 09:32 IST
விஜய்யின் பிரசார பஸ்சை பறிமுதல் செய்ய தனிப்படை தீவிரம்
விஜய்யின் பிரசார பஸ்சை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று தமிழக அரசு வக்கீல்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதன் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையிலான தனிப்படையினர் விஜய் பிரசார பஸ்சை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் உயர் அதிகாரிகளிடம் இருந்து விஜய்யின் பிரசார பஸ்சை பறிமுதல் செய்ய எந்த நேரத்திலும் உத்தரவு வரும் நிலையில் உள்ளது. இவ்வாறு உத்தரவு வந்தவுடன் போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையிலான போலீசார் சென்னையில் உள்ள போலீசாரின் உதவியுடன் விஜய்யின் பிரசார பஸ்சை பறிமுதல் செய்ய உள்ளனர்.
- Oct 08, 2025 09:14 IST
6 மாவட்டங்களில் காலை 9.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காலை 9.30 மணி வரை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 08, 2025 09:13 IST
திருச்சி அரசு பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் சீனமொழி
திருச்சியில் அரசு பேருந்தின் டிஜிட்டல் பலகையில் சீன மொழி இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு லால்குடி, பெருவளநல்லூர், குமுளூர் வழியாக கொளக்குடி வரை செல்லும் அரசு டவுன் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் திடீரென சீன மொழியில் ஊர் பெயர் இடம் பெற்றது. இதனை பார்த்த பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.