Coimbatore, Madurai, Trichy News: கோவை மாணவி கூட்டு பாலியல் சம்பவம் - 'பெண்கள் பாதுகாப்பு குழிதோண்டி புதைப்பு': இ.பி.எஸ் கடும் தாக்கு

Coimbatore, Madurai, Trichy News Live- 3 November 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 3 November 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
edappadi eps

டன் கணக்கில் இறந்து கிடக்கும் மீன்கள்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் 16 கண் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தேங்கிய தண்ணீரில் கடந்த 3 நாட்களாக டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கி காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசி, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

Advertisment

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது: தமிழகம் மற்றும் புதுச்சேரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு நாட்டுப் படகு, மூன்று விசைப்படகு உள்ளிட்ட 35 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பின் மீனவர்கள் 35 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

  • Nov 03, 2025 22:36 IST

    கிட்னி முறைகேடு வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

    கேதர் மருத்துவமனைக்கு கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவ சேவைகள் இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.



  • Nov 03, 2025 21:47 IST

    "இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின்..." - நயினார் நாகேந்திரன்

    கோவையில்தனியார்கல்லூரிமாணவிமர்மகும்பலால்கூட்டுப்பாலியல்வன்கொடுமைசெய்யப்பட்டுள்ளசம்பவம்கடும்அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தைத்தலைகுனியவிடமாட்டேன்எனவெட்டிவசனம்பேசும்திமுகஆட்சியில்நமதுவீட்டுப்பெண்கள்வெளியில்தலைகாட்டவேஅஞ்சுகின்றனர்; இதுதான்நாடுபோற்றும்நல்லாட்சியின்லட்சணமா? எனபாஜகமாநிலத்தலைவர்நயினார்நாகேந்திரன்தெரிவித்துள்ளார்.

     



  • Advertisment
    Advertisements
  • Nov 03, 2025 21:40 IST

    தி. மலையில் கோவிலில் கிடைத்த தங்க புதையல்

    திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சிவன் கோவில் புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட பொழுது 103 தங்க நாணயங்கள் கிடைக்கப்பெற்றது.



  • Nov 03, 2025 21:09 IST

    கோவை மாணவி கூட்டு பாலியல் சம்பவம் - 'பெண்கள் பாதுகாப்பு குழிதோண்டி புதைப்பு': இ.பி.எஸ் கடும் தாக்கு

    கோவை விமான நிலையத்தின் பின்புற பகுதியில் நேற்று இரவு தனியார் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தன் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவியை பார்த்த அந்த கும்பல், ஆண் நண்பரை ஆயுதங்களால் தாக்கி, மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பிவிட்டனர்.

    இதுதொடர்பாக மாணவியின் ஆண் நண்பன் வினீத் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். மாணவி இன்று அதிகாலை 4 மணியளவில் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து, 7 தனிப்படைகள் அமைத்து அந்த 3 நபர்களை தேடி வருகிறார்கள்.

    இந்தநிலையில், பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

    2.11.2025 அன்று இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும், பாதிப்புக்குள்ளான அம்மாணவி, 3.11.2025 அன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வரும் செய்திகள் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.

    பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக, எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெரு நகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. அம்மா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.

    திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அஇஅதிமுக சார்பில் கண்களில் Pepper Spray அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர். திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

     



  • Nov 03, 2025 20:50 IST

    நாகை மீனவர்கள் 31 பேருக்கு வரும் 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 31 பேருக்கு வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளது. எல்லை தாண்டி மின் பிடித்ததாக கைதான 31 பெரும் , பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர்.



  • Nov 03, 2025 18:51 IST

    கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவம் - பா.ஜ.க மகளிர் அணி ஆர்ப்பாட்டம் 

    கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தை கண்டித்து இன்று பா.ஜ.க மகளிர் அணி சார்பில்  கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நாளை செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 



  • Nov 03, 2025 18:49 IST

    6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தி.மலை - உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Nov 03, 2025 18:48 IST

    கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் - வானதி சீனிவாசன் ஆய்வு

    கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நேரடி ஆய்வு மேற்கொண்டார். 



  • Nov 03, 2025 18:25 IST

    திருவள்ளூரில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்

    திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள 17 கிராமங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆட்சியர் பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். 2027ல் நடைபெறும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக மாதிரி கணக்கெடுப்பு நடைபெறுகிறது. மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் 97 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்தார்.



  • Nov 03, 2025 18:05 IST

    பாரை சூறையாடிய நா.த.க- வினர்

    கோவையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாரை நாம் தமிழர் கட்சியினர் அடுத்து சூறையாடி உள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் இருந்த மதுபான பாரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தோர் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். 



  • Nov 03, 2025 16:48 IST

    பள்ளி வேன்- கார் மோதிய விபத்தில் ஒருவர் மரணம்; பள்ளி மாணவிகள் உட்பட 5 பேர் காயம்

    கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பள்ளி மாணவிகள் உட்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.



  • Nov 03, 2025 16:45 IST

    டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் மரணம்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குணசேகரன் (45) என்பவர் உயிரிழந்தார்.



  • Nov 03, 2025 16:24 IST

    தருமபுரியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ஸ்டாலின்

    தருமபுரி மாவட்டம் ஏ.ரெட்டிஅள்ளியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.



  • Nov 03, 2025 16:07 IST

    தஞ்சை மருமகளான ஜெர்மன் பெண்

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கூடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரனும், ஜெர்மன் நாட்டை சேர்ந்த விலினா பெர்கனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் பாரம்பரிய முறையில் தஞ்சையில் திருமணம் நடைபெற்றது.



  • Nov 03, 2025 16:03 IST

    நெல்லையில் நிமோனியா காய்ச்சலால் குழந்தை மரணம்

    நெல்லையைச் சேர்ந்த ரூபிகா என்ற 3 வயது குழந்தை நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது



  • Nov 03, 2025 14:41 IST

    கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை: நவ.5-ம் தேதி பா.ஜ.க கண்டன ஆர்ப்பாட்டம் - நயினார் நாகேந்திரன்

     

    கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நாளை மறுநாள் (நவ.5) தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.



  • Nov 03, 2025 13:46 IST

    கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - அண்ணாமலை கண்டனம்

    கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ள பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Nov 03, 2025 13:43 IST

    கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும் - இ.பி.எஸ் வலியுறுத்தல்

    கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் பிடியில் நிறுத்தி கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.



  • Nov 03, 2025 13:01 IST

    கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் 7 தனிப்படைகள் அமைப்பு

    கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் இரவு 11 மணி அளவில் காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 3 பேர் ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியைத் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். ஆண் நண்பர் அளித்த தகவலின்பேரில் அதிகாலை 4 மணி அளவில் காவல்துறை மாணவியை மீட்டனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் 7 தனிப்படைகளை அமைத்துள்ளனர். 



  • Nov 03, 2025 12:26 IST

    கோவையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் அத்துமீறல்: 3 பேர் கும்பல் அட்டூழியம் - போலீஸ் விசாரணை

    கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதாகப் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவரின் புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், மாணவரைத் தாக்கியுள்ளனர். மேலும், அந்தக் கும்பல் மாணவியைத் தாக்குதல் நடத்தி, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறல் செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மாணவர், உடனடியாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அத்துமீறலில் ஈடுபட்ட அந்தக் கும்பலைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Nov 03, 2025 09:40 IST

    இன்று முதல் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருள்

    தாயுமானவர் திட்டத்தில் இன்றுமுதல் நவ.6 வரை வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருள் தரப்படுகிறது. தாயுமானவர் திட்டத்துக்கான வயது வரம்பு 70-லிருந்து 65ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தாயுமானவர் திட்டத்தில் 20.42 லட்சம் மூத்த குடிமக்களும் 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் பயன் பெறுகின்றனர்.



  • Nov 03, 2025 09:40 IST

    தமிழக மீனவர்கள் 35 பேர் கைது - இலங்கை கடற்படை

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப் படகை பறிமுதல் செய்தது. தொடர்ந்து மீனவர்களிடம் இலங்கை கடற்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் மீனவர்களை நேற்று இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் விரட்டியடித்தது.



  • Nov 03, 2025 09:21 IST

    கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: 306 பேருக்கு சி.பி.ஐ சம்மன்

    கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 306 பேருக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் 'சம்மன்' அனுப்பி உள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தார், இவர்களை கூட்டத்திற்கு அழைத்து சென்ற த.வெ.க.,வினர் என, 306 பேர் விசாரணைக்கு ஆஜ ராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திலும் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

     



  • Nov 03, 2025 09:15 IST

    வேடசந்தூர் அருகே ராட்சத காளான்கள் கண்டெடுப்பு

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகில் இருக்கும் பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள், காட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது மிகப்பெரிய காளான்களைக் கண்டெடுத்தனர். இந்த ராட்சத காளான்கள் ஒவ்வொன்றும் 13 கிலோ மற்றும் 6 கிலோ என மிகுந்த எடை கொண்டவையாக இருந்தன. இந்த அளவுக்குப் பெரிய காளான்கள் கிடைத்தது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: