Coimbatore, Madurai, Trichy News Live: கரூரில் அன்புமணி நடைபயணம் 28-ம் தேதிக்கு மாற்றம்?

Coimbatore, Madurai, Trichy News Live- 23 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 23 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anbu

செங்கோட்டையன் தொகுதியில் இ.பி.எஸ்-க்கு உற்சாக வரவேற்பு: நீலகிரிக்கு இன்று சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு, வழியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சியை ஒருங்கிணைக்கும் வரை பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறியிருந்ததால், இந்த வரவேற்பில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை; கட்சியை ஒருங்கிணைக்க கோரி கெடு விதித்ததற்காக செங்கோட்டையனின் கட்சிப்பணி பறிக்கப்பட்ட நிலையில், அவரது சொந்த தொகுதியில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கிடைத்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisment
  • Sep 23, 2025 19:27 IST

    கரூரில் அன்புமணி நடைபயணம் 28-ம் தேதிக்கு மாற்றம்?

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் 27-ம் தேதி கரூரில் நடைபயண, பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். அதே தேதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் அங்கு பிரசாரத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். இந்த தேதியில் அன்புமணிக்கு அனுமதி கொடுத்ததால், விஜய்க்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், அன்புமணி தனது நடைபயணத்தை 28-ம் தேதி மாற்றி விஜய்க்கு உதவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Sep 23, 2025 16:43 IST

    ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தனுஷ்

    வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன்  நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரசிகர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதுடன், புடவைகள், ஸ்கூல் பேக் உள்ளிட்டவற்றையும் கொடுத்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 23, 2025 16:16 IST

    சிறுவாபுரி முருகன் கோயில் - 3 மணி நேரம் காத்திருப்பு

    சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 3மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட்ட மினிப்பேருந்து பழுதானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



  • Sep 23, 2025 15:39 IST

    திருவள்ளூரில் தாடி பாலாஜி சாமி தரிசனம்

    திருவள்ளூரில் தாடி பாலாஜி சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். விஜய்யின் சுற்றுப்பயணம் வெற்றியடைய பிரார்த்தித்தேன். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இது 2026 தேர்தலில் வாக்குகளாக மாறும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.



  • Sep 23, 2025 14:43 IST

    கன்னியாகுமரியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி மோசடி: 3 பேர் கைது

    கன்னியாகுமரியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்த தம்பதி உட்பட 3 பேரை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. மோசடி செய்த சுரேஷ், அவரது மனைவி அனுசியா, ரம்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



  • Sep 23, 2025 13:55 IST

    ‘தி.மு.க-வைத் தோற்கடிக்க எங்கள் கூட்டணியால்தான் முடியும்’ - வானதி சீனிவாசன்

    கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “தி.மு.க-வை தோற்கடிக்க, எங்கள் கூட்டணியால்தான் முடியும். மற்றவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளலாம். இங்க கோஷ்டி மோதல் எதும் இல்லை” என்று கூறினார்.



  • Sep 23, 2025 13:23 IST

    கோவையில் சுகுணா சிக்கன் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 

    கோவையில் சுகுணா சிக்கன் நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களிலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



  • Sep 23, 2025 12:42 IST

    ‘எத்தனையோ பேரை கொம்பு சீவிக் கொண்டு இருக்கிறீர்கள்’ - இ.பி.எஸ் 

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குன்னூரில் பரப்புரை, “எத்தனையோ பேரை கொம்பு சீவிக் கொண்டு இருக்கிறீர்கள்; எவ்வளவோ சோதனைகளை ஏற்படுத்துகிறீர்கள்; அவை அனைத்தும் தொண்டர்கள் மூலம் தூள் தூளாக்கப்படும். எத்தனை அவதாரம் எடுத்தாலும் அ.தி.மு.க-வை அசைக்க முடியாது” என்று கூறினார். 



  • Sep 23, 2025 12:26 IST

    அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும் - இ.பி.எஸ்

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையால் வியாபாரிகள் பாதிப்பு, அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும்” என்று கூறினார். 



  • Sep 23, 2025 12:02 IST

    காட்டு யானையைப் பிடிக்கத் தீவிரம்

    நீலகிரி: கூடலூர் அருகே கடந்த 7 ஆண்டுகளில் 12 பேர் உயிரிழப்புக்கு காரணமான, ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானை அடர்ந்த புதர்ப் பகுதியில் யானை இருப்பதால், அதனை சமவெளிக்கு விரட்டும் பணி நடக்கிறது. 4 கும்கி யானைகள், ட்ரோன் கேமராக்கள், மயக்க ஊசி கொண்டு 50க்கும் மேற்பட்ட வனத்துறை காவலர்கள் காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் உள்ளனர்.



  • Sep 23, 2025 11:55 IST

    சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சோகம்

    திருவண்ணாமலை: செங்கம் அடுத்த அந்தனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

    பைக்கில் தனியே சென்ற அருண்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்றொரு பைக்கில் சென்ற மூவரில் புகழேந்தி என்பவரும் உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • Sep 23, 2025 11:40 IST

    குளிக்கச் சென்ற நபர் மாயம்- வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டி வைகை பாசனக் கால்வாயில் குளிக்கச் சென்று மாயமான நபரை தேடுவதற்காக, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அந்நபரை மீட்ட பிறகு தண்ணீர் மீண்டும் திறக்கப்படும் என நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். 



  • Sep 23, 2025 11:20 IST

    அரசுப் பேருந்தை வழிமறித்த கார் ஓட்டுநர்

    கன்னியாகுமரி: வடசேரியில் இருந்து திருவனந்தபுரம் சென்ற கேரள அரசுப் பேருந்தை, கார் ஓட்டுநர் ஒருவர் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தை முந்திச் செல்ல விடாமல், வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தியதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்தச் சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கார் பதிவெண் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 23, 2025 10:42 IST

    திருச்செந்தூர் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

    திருச்செந்தூர் அருகே 17 வயது சிறுமியுடன் காதலில் இருந்த மணிகண்டன் (24) என்பவர் நேற்று காலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை நட்டார், உறவினர் கணேசன், சிறுமியின் தம்பி உள்ளிட்ட நான்கு பேரை தாலுகா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, இந்தச் சிறுமி வீட்டை விட்டு மணிகண்டனுடன் சென்றதாகவும், பின்னர் காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாகவே மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 23, 2025 10:41 IST

    பாமக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது

    தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் ராமதாஸ் தலைமையில் தொடங்கியது.



  • Sep 23, 2025 10:23 IST

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் மீட்பு

    திருவண்ணாமலை: சின்னக்கடை வீதிப் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்பிலான 621 சதுர அடி ஆக்கிரமிப்பு இடத்தை நீதிமன்ற உத்தரவின்படி, இன்று அதிகாரிகள் மீட்டனர்.



  • Sep 23, 2025 10:18 IST

    ராகிங் புகாரில் மூன்று மாணவர்கள் வழக்குப்பதிவு

    மதுரை, திருமங்கலம் ஐடிஐ விடுதியில் ராகிங் புகாரில் மூன்று மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை நிர்வாணப்படுத்தி, தாக்கி அதை வீடியோ எடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐடிஐ விடுதியின் வார்டன் பாலசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



  • Sep 23, 2025 09:39 IST

    கடலூர் கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது

    தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகமானதால், கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள கொம்மான்தோன்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. கடலூர் - புதுச்சேரி கிராமப் பகுதிகளை இணைக்கும் இந்தத் தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



  • Sep 23, 2025 09:26 IST

    எட்டயபுரம்: சாலையோர கடைக்குள் புகுந்த அரசுப் பேருந்து

    எட்டயபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோரம் இருந்த இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த கடையின் தகர மேற்கூரையானது பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே குத்தியது. இதில் அந்த பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த டிரைவர் சொரிமுத்து படுகாயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக 40 பயணிகளும் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.



  • Sep 23, 2025 09:09 IST

    குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடக்கம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் அக்.2-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் அம்மன் தேர் பவனி கோயிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். 4-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

     



  • Sep 23, 2025 09:09 IST

    காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, கோவை மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

     



  • Sep 23, 2025 09:09 IST

    திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.1 கோடி உண்டியல் வருவாய்

    மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வரலாற்றில் முதல்முறையாக உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி கிடைத்துள்ளது. அறுபடை வீடுகளில் முதலாம்படை வீடான திருப்பரங்குன்றத்தில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

     



  • Sep 23, 2025 09:09 IST

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று உதயநிதி கள ஆய்வு

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை கள ஆய்வு செய்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 11 மணிக்கு சாத்தூரில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. பின்னர் அரசு மருத்துக்கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மாலை 5 மணிக்கு கிருஷ்ணன்கோவிலில் நடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

     



  • Sep 23, 2025 09:09 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,849 கனஅடியாக உயர்வு

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 10,849 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 119.05 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 91.962 டி.எம்.சி. ஆக உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 6500 கன அடிக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

     



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: