Coimbatore, Madurai, Trichy News Highlights: சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் 2-வது நாளாக நீடிக்கும் ஐ.டி.சோதனை

Coimbatore, Madurai, Trichy News Live- 24 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 24 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
psk it raid x

கேரளாவிற்கு கடத்த முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: கன்னியாகுமரியில் இருந்து சொகுசு காரில் கேரளாவிற்கு கடந்த முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது; கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் வருவாய்த்துறை தனிப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அதிகாரிகள்.

Advertisment

மேட்டூர் அணை நிலவரம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 9425 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 119.19 அடியாகவும் நீர் இருப்பு 92.185 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக 6500 கன அடிக்கு நீர் வெளியேற்றப்படுகிறது. 

  • Sep 24, 2025 22:02 IST

    ஐடி சோதனையால் பெண் ஊழியர்கள் அவதி

    திருப்பூர் மாவட்டம் உடுமலை சுகுணா புட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை 2-வது நாளாக நீடிக்கும் நிலையில் பெண் ஊழியர்கள் அவதியடைந்தனர். கைக்குழந்தை இருக்கும் சூழலில் பெண் ஊழியர்கள் சிலர் வீடு திரும்பாததால் குழந்தையை நிறுவனத்திற்கு தூக்கி வந்த உறவினர்கள். 



  • Sep 24, 2025 20:52 IST

    திண்டிவனத்தில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேர் மீட்பு!

    திண்டிவனத்தில் உள்ள இரு கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக கடந்த 1 வருடமாக வேலை செய்துவந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த 9 பேரை மீட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். காஞ்சி, செங்கல்பட்டு பகுதிகளைச் சேர்ந்த 3 குடும்பங்களை கொத்தடிமைகளாக வைத்தி்ருந்த மாரியமங்கலம் மற்றும் வாசு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.



  • Advertisment
    Advertisements
  • Sep 24, 2025 20:38 IST

    வேலூரில் சிறுவனை கடத்திய இளைஞர் கைது

    வேலூர் - குடியாத்தத்தில் மிளகாய் பொடி தூவி 4 வயது சிறுவனை கடத்திய பாலாஜி (29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூரில் கடத்திச்செல்லப்பட்ட சிறுவன் திருப்பத்தூரில் மீட்கப்பட்ட நிலையில் இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Sep 24, 2025 19:24 IST

    இட்லி கடை ப்ரமோஷன்

    மதுரையில் இட்லி கடை திரைப்பட புரமோஷன் விழாவில் நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



  • Sep 24, 2025 16:32 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    கடந்த மாதம் 13ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டிய புகாரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுவித்து யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Sep 24, 2025 16:18 IST

    தசரா விழாவில் விதிமீறல் - கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு

    குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் விதிமீறலை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என குலசை தசரா விழாவில் ஆபாச நடனத்திற்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது 



  • Sep 24, 2025 16:09 IST

    நாமக்கல்லில் டயர் வெடித்து பற்றி எரிந்த கார்

    நாமக்கல், தூசூர் அருகே கார் டயர் வெடித்து திடீரென டயர் தீ பிடித்ததால் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டிவந்த ஆசிரியர் உயிர்த் தப்பினார்



  • Sep 24, 2025 14:20 IST

    மிளகாய் பொடி தூவி குழந்தை கடத்தல்

    குடியாத்தத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த 4 வயது ஆண் குழந்தையை, கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் வந்து கடத்திச் சென்ற நபர்களால் பதற்றம் குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தை மீது மிளகாய் பொடி தூவியதுடன், அவரை காருடன் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது; சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 



  • Sep 24, 2025 14:09 IST

    திண்டிவனத்தில் பட்டா மாற்ற லஞ்சம் - வி.ஏ.ஓ. கைது

    திண்டிவனத்தில் பட்டா மாற்ற ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பொன்னைவனம் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மனைக்கு பட்டா மாறுதல் செய்ய ரூ.3,000 லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் புன்னைவனம் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Sep 24, 2025 13:47 IST

    “அ.தி.மு.க-வில் தொண்டன்கூட யாருக்கும் அடிமையில்லை”-எடப்பாடி பழனிசாமி  

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க, பா.ஜ.க-வின் அடிமை என்கிறார் ஸ்டாலின். அ.தி.மு.க-வில் தொண்டன்கூட யாருக்கும் அடிமையல்ல. நீங்கள்தான் கூட்டணியின் பலத்தால் இருக்கிறீர்கள். சுயமரியாதையோடு இருப்பதே எங்கள் கூட்டணி” என்று கூறினார்.



  • Sep 24, 2025 13:36 IST

    விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ஒ.பி.எஸ் பதில்

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், “கூட்டணிக்காக யார் போய் சி.வி.சண்முகம் வீட்டு வாசலில் நின்றார்கள்? விஜய்க்கு தி.மு.க-தான் பதில் சொல்ல வேண்டும். விஜய்க்கு கூட்டம் கூடுகிறது, அதை மறுக்க முடியாது.” என்று கூறினார்.

    விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற கேள்விக்கு, “தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணித்தான் சொல்ல முடியும்” என்று கூறினார். 



  • Sep 24, 2025 12:56 IST

    முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ் தொடரும் வரை எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது - டி.டி.வி. தினகரன்

    அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பேட்டி: “கூட்டணியில் இருந்து வெளியேறியபோது, அவசரப்பட வேண்டாம் என்று தொலைபேசியில் அண்ணாமலை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்; அதையேதான் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பிலும் கூறினார் . என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி தொடர்கிற பட்சத்தில் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது.” என்று கூறினார்.



  • Sep 24, 2025 12:52 IST

    தேர்தல் களத்தில் அ.தி.மு.க முதலிடம் - கூடலூரில் இ.பி.எஸ் பரப்புரை

    கூடலூரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது பேசுகையில், “தேர்தல்களத்தில் அ.தி.மு.க முதலிடத்தில் உள்ளது; இரண்டாம் இடத்திற்குதான் தற்போது போட்டி நடந்து கொண்டிருக்கிறது.” என்று பேசினார்.



  • Sep 24, 2025 12:01 IST

    வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



  • Sep 24, 2025 11:58 IST

    இரவு நேரத்தில் கரடிகள் நடமாட்டம்

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் இரவு நேரத்தில் கரடிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. 



  • Sep 24, 2025 10:59 IST

    கூடலூர் அருகே ராதாகிருஷ்ணன் காட்டு யானை கூண்டில் அடைப்பு

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே ஓவேலி என்ற பகுதியில், ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானை முதுமலை அபயரண்யம் பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. இந்த யானை இதுவரை 12 பேரைக் கொன்றுள்ளது. வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தி இந்த யானையைப் பிடித்தனர்.



  • Sep 24, 2025 10:36 IST

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி

    ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வயிறு தொடர்பான பிரச்னைக்காக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



  • Sep 24, 2025 10:22 IST

    தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலை அமைக்கும் ரிலையன்ஸ் குழுமம்

    தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் ரிலையன்ஸ் குழுமம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. 60 ஏக்கரில் அமையும் இந்த தொழிற்சாலையில் பிஸ்கட், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை தயாரிக்கப்பட உள்ளன; அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூலமாக 2,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் – 

    அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா X தளத்தில் பதிவு



  • Sep 24, 2025 09:31 IST

    கார்த்திகை தீபத் திருவிழா நவ.21ம் தேதி கொடியேற்றம்

    திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. டிச.3ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை மகா தீப‌மும் ஏற்றப்படுகிறது.



  • Sep 24, 2025 09:13 IST

    மதுரை: ஐடிஐ விடுதியில் ராகிங் - காப்பாளர் சஸ்பெண்ட்

    மதுரையில் ஐடிஐ விடுதியில் மாணவரை ராகிங் கொடுமை செய்த விவகாரத்தில் விடுதி காப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். செக்கானூரணி விடுதியில் ஒரு மாணவரை சக மாணவர்கள் ஆடைகளை களைந்து ராகிங் செய்துள்ளனர். வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பெற்றொர் புகாரில் போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். பணியில் கவனக் குறைவாக இருந்ததாக விடுதிக் காப்பாளர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

     



  • Sep 24, 2025 09:12 IST

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை (செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     



  • Sep 24, 2025 09:12 IST

    தி.மலை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் துவக்கம்

    திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகள் செய்வதற்காக ராஜகோபுரம் அருகில் பந்தக்கால் நடும் பணி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் ஆலயத்தில் பந்தக்காலுக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நவ.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிச.3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், அதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

     



  • Sep 24, 2025 09:12 IST

    மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 9,425 கன அடி நீர்வரத்து

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 9425 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 119.19 அடியாகவும் நீர் இருப்பு 92.185 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக 6500 கன அடிக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



  • Sep 24, 2025 09:12 IST

    கவின் கொலை வழக்கு - விசாரணையில் புதிய தகவல்

    நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில், காதலை கைவிட கூறி சுர்ஜித் உறவினர் ஜெயபால் கவினை தனியே அழைத்து மிரட்டல் விடுத்த‌து அம்பலமாகி உள்ளது. கவினை கயத்தாறு பகுதிக்கு வரவழைத்து காதலை கைவிடுமாறு மிரட்டியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. கவின் கொலையில் சுர்ஜித்தின் தாயாருக்கு தொடர்பு உள்ளதா என சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

     



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: