/indian-express-tamil/media/media_files/2025/07/19/rain-2025-07-19-16-22-19.jpg)
ராமேஸ்வரம் கோயிலில் நள்ளிரவில் தீர்த்தவாரி: ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சுவாமி ஸ்ரீ ராமநாதசுவாமி மற்றும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளுக்கு நள்ளிரவில் தீர்த்தவாரி நடைபெற்றது. கிரகண தோஷங்கள் நீங்க வேண்டி, திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
- Sep 08, 2025 21:42 IST
தமிழகத்தில் நடைபெறும் ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை
முதல் முறையாக தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை போட்டி மதுரை, சென்னை மாவட்டங்களில் நடைபெறுகிறது
- Sep 08, 2025 18:24 IST
கடலூர் மாவட்டம் வெலிங்டன் ஏரியை சீரமைக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நூறாண்டுகள் பழமையான வெலிங்டன் ஏரி மற்றும் கால்வாயை சீரமைக்க ரூ.103 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்தார்.
- Sep 08, 2025 18:01 IST
3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Sep 08, 2025 17:27 IST
திருவாரூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையை திறம்பட கையாண்டு இன்று அமெரிக்கா நம்முடன் நட்பு பாராட்டுவதற்கு இறங்கி வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் திறமையான செயல்பாடு தான் காரணம் என திருவாரூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
- Sep 08, 2025 17:10 IST
திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்னாடிப் பாலம் மிக உறுதியாக உள்ளது - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. மேலே பராமரிப்பு பணியின்போது 7 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுத்தியால், நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. புதிய கண்ணாடி பொருத்தும் பணிகள் 2 நாட்களுக்குள் முடிவடையும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- Sep 08, 2025 16:26 IST
ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் - முன்ஜாமின் வழங்கி உத்தரவு
திருச்சி, துறையூரில் ஈபிஎஸ் பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து அதிமுகவினர் தாக்கிய வழக்கு. பாலமுருகவேல், விவேக் உள்ளிட்ட 4 பேருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
- Sep 08, 2025 16:13 IST
செப். 11ல் கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை: சிவகங்கை ஆட்சியர் உத்தரவு
செப்.11ம் தேதி கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அளித்து சிவகங்கை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிக்கப்படுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 08, 2025 16:13 IST
குமரி கண்ணாடி கூண்டு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு ஆட்சியர் மறுப்பு
குமரி கண்ணாடி கூண்டு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணியின்போது சுத்தியல் விழுந்ததில் சிராய்ப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் சிறிய சிராய்ப்பை சீர்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
- Sep 08, 2025 15:41 IST
திருப்பூர் இளம்பெண் ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்தப் பலனும் இல்லை - ஐகோர்ட் கருத்து
திருப்பூர் இளம்பெண் ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்தப் பலனும் இல்லை என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை மனு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் மாவட்ட எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- Sep 08, 2025 15:38 IST
உளுந்தூர்பேட்டையில் ராட் வீலர் நாய் கடித்து சிறுவன் படுகாயம்
உளுந்தூர்பேட்டையில் தடை செய்யப்பட்ட ராட் வீலர் நாய் கடித்து சிறுவன் மகேந்திரவர்மன் (13) படுகாயம் அடைந்தார். பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட தடை செய்யப்பட்ட ராட் வீலர் கடித்து சிறுவன் மகேந்திரவர்மன் படுகாயமடைந்தார்.
- Sep 08, 2025 15:25 IST
உதகை அருகே 3.2 டன் வெள்ளைப் பூண்டு மூட்டைகள் மாயம்
உதகை அருகே நேற்று அறுவடை செய்த 3.2 டன் வெள்ளைப் பூண்டு மூட்டைகளை காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி ஜெகதீஷ்குமார் அறுவடை செய்த 3,200 கிலோ பூண்டு மூட்டைகளை காணவில்லை. ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளைப் பூண்டு மூட்டைகளை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 08, 2025 15:04 IST
மதுரையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மனு
மதுரையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலையை அகற்றுகின்றனர் என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- Sep 08, 2025 14:16 IST
அ.தி.மு.க-வை எடப்பாடி பழனிசாமியே அழித்து விடுவார் - கருணாஸ்
சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அ.தி.மு.க-வை வெளியில் இருந்து வந்து யாரும் அழிக்கத் தேவையில்லை, அதை எடப்பாடியே செய்து முடித்துவிடுவார். 2026 தி.மு.க ஆட்சியே தொடர வேண்டும், எனக்கு எந்த தொகுதியை கொடுத்தாலும் வெற்றி பெறுவேன்” என்று கூறினார்.
- Sep 08, 2025 14:16 IST
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் - சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம் 9 மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்ணாடி பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விரிசல் அடைந்த பகுதி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தகவல் வெளியாகி உள்ளது.
- Sep 08, 2025 13:12 IST
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- Sep 08, 2025 11:57 IST
நயினார் நாகேந்திரன் பேட்டி
டிடிவி தினகரனுக்கும் எனக்கும் இதுவரை எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை. ஆனால் திடீரென ஏன் என் மீது குற்றம்சாட்டுகிறார் என்று தெரியவில்லை.
நெல்லை பூத் கமிட்டி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அண்ணாமலைதான் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நான் அறிவிக்கவில்லை. கூட்டணியில் இருந்து அமமுக விலக நான்தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி தினகரன் கூறுகிறார் என தெரியவில்லை. அதிமுக இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்.
நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
- Sep 08, 2025 11:55 IST
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில், ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பயங்கரவாத சதி வழக்கில் நாடு முழுவதும் 22 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 08, 2025 11:16 IST
வேகமாகப் பரவும் கடலூர் மாவட்டத்தில் காய்ச்சல்
கடந்த சில நாட்களாகக் கடலூர் மாவட்டத்தில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், இந்தக் காய்ச்சல் இரண்டு முதல் மூன்று நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்றும், முறையான சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Sep 08, 2025 10:32 IST
தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி இளம்பெண் பலாத்காரம்
ராணிப்பேட்டை: தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி இளம்பெண்ணை ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இளம்பெண் அளித்த புகாரின் பேரில், இரண்டு இளைஞர்களை ராணிப்பேட்டை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குற்றச்சம்பவத்தில் மேலும் சிலர் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 08, 2025 09:55 IST
எடப்பாடி பழனிசாமியின் 5-ம் கட்ட சுற்றுப்பயண விபரம் வெளியீடு
எடப்பாடி பழனிசாமியின் 5-ம் கட்ட சுற்றுப்பயணம் பற்றி அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, 17-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 17-ந் தேதி தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், 18-ந் தேதி பாலக்கோடு, பென்னாகரம், 19-ந் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம், 20-ந் தேதி நாமக்கல், பரமத்தி வேலூர், 21-ந் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம், 23-ந் தேதி குன்னூர், உதகமண்டலம், 24-ந் தேதி கூடலூர், 25-ந் தேதி வேடசந்தூர், கரூர், 26-ந் தேதி அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் செல்கிறார்.
- Sep 08, 2025 09:20 IST
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sep 08, 2025 09:15 IST
தாம்பரம் அருகே பைக் மாடு மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு
தாம்பரம் அடுத்த படப்பையில் பைக்கில் மேம்பாலத்தில் ஏறும்போது குறுக்கே வந்த மாடு மீது மோதியதில், பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். அண்ணா நகரைச் சேர்ந்த நவீன் (19) மற்றும் அவரது தோழி அபிமணி இருவரும் தூக்கி வீசப்பட்டதில், எதிரே வந்த கார் மோதி பலத்த காயமடைந்து அங்கேயே உயிரிழந்தனர்.
- Sep 08, 2025 09:15 IST
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Sep 08, 2025 09:14 IST
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 22,500 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.