/indian-express-tamil/media/media_files/TsP4XSCfMIaRWIL0np8M.jpg)
ஜாமின் கோரி எஸ்.ஐ.சரவணன் மீண்டும் மனு: கவின் ஆவணக்கொலை வழக்கில் கைதான சார்ஜித்தின் தந்தையும், எஸ்.ஐ.யுமான சரவணன் மீண்டும் ஜாமின்கோரி நெல்லை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மக்கனா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி பகுதியில் காயங்களுடன் சுற்றி வந்த மக்கனா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கடந்த 10 நாட்களாக யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தது.
6 மாவட்டங்களில் இன்று(அக்.7) கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(அக்.7) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 07, 2025 21:38 IST
கரூரில் நடந்த உயிரிழப்புகளுக்கு விஜய் காரணமல்ல -கிருஷ்ணசாமி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பேட்டி அளித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கரூரில் நடந்த உயிரிழப்புகளுக்கு விஜய் காரணமல்ல; தனது சொந்த வீட்டில் நடந்த துக்கம் போல அவர் அமைதியாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
- Oct 07, 2025 21:33 IST
கரூர் சம்பவம் - அக்.10-ல் விசாரணை
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி கூட்ட நெரிசலில் பலியானவரின் தந்தை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 10 ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
- Oct 07, 2025 21:07 IST
திருவண்ணாமலை தீபத்திருவிழா - பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு
திருவண்ணாமலையில் டிச-3 ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கோயிலில் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், தீபத்திருவிழாவுக்கு 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
- Oct 07, 2025 17:12 IST
மீனாட்சி அம்மன் கோயிலின் சொத்து விவரங்கள் தாக்கல்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சொத்து விவரங்களை அறிக்கையாக கோயில் நிர்வாகம் ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்தது. அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக ஆயிரத்து 234 ஏக்கர் நிலங்கள் உள்ளன. மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமாக 133 வீடுகள், 108 கடைகள் என 117 இனங்கள் சொத்துக்களாக உள்ளன. கோயில் தரப்பு தாக்கல் செய்த சொத்து விவரங்களில் சந்தேகம் இருந்தால் மனுதாரர் முறையிடலாம் என்றும் வரும் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்று மனுதாரர் பார்வையிடலாம் என்றும் ஐகோர்ட் கிளை தெரிவித்து உள்ளது.
- Oct 07, 2025 17:06 IST
டெங்கு பாதிப்பு - 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால் சென்னை, திருவள்ளூர், கோவை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் காய்ச்சல் பாதித்த 12,264 பேரில் 3,665 பேருக்கும் திருவள்ளூரில் 9,367 பேரில் 1,171 பேருக்கும், கோயம்புத்தூரில் 7,998 பேரில் 1,278 பேருக்கும் டெங்கு பாதிப்பு பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- Oct 07, 2025 16:47 IST
தருமை ஆதீனம் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிப்பு
மயிலாடுதுறையில் பழமையான இலவச மகப்பேறு மருத்துவமனையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தருமை ஆதீனம் உண்ணாவிரதம் அறிவித்துள்ளார். முன்னோர்கள் கட்டிய இலவச மகப்பேறு மருத்துவமனையை சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து காப்பேன் என தருமை ஆதீனம் தெரிவித்துள்ளார். 24ஆவது சந்நிதானத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு 25ஆவது சந்நிதானத்தால் திறக்கப்பட்ட மருத்துவமனையை இடிக்க எதிா்ப்பு தெரிவித்துள்ளார். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவமனை அரசின் வசம் முன்னதாகவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது பழைய கட்டிடத்தில் மருத்துவமனை செயல்படாத நிலையில் அதனை இடித்து புதிய கட்டிடம் கட்ட அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னோா்கள் நினைவாக உள்ள பழமையான கட்டிடத்தை இடிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
- Oct 07, 2025 16:13 IST
யானை தந்தத்தை விற்க முயன்றவர்கள் கைது
மதுரையில் யானை தந்தத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்ற இடைத்தரகர்கள் மணிகண்டன், சுதாகர், ரகுநாத், சுப்பிரமணி, ரமேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமீன் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியன் என்பவர் மூலமாக யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். தற்போது ஜமினின் வாரிசு தலைமறைவு, அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
- Oct 07, 2025 15:42 IST
பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை அமைக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச் சாலை அமைக்கவும், சென்னை மெட்ரோ-2 உள்பட முக்கிய நகரங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- Oct 07, 2025 15:08 IST
தடையை மீறி அன்புமணி ஆர்ப்பாட்டம்
போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி தாமிரபரணி நதியை காக்க வலியுறுத்தி அன்புமணி ஆர்ப்பாட்டம். தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
- Oct 07, 2025 14:34 IST
பெட்ரோல் விற்பனை ரசீதில் அரசுகளின் வரியை குறிப்பிடக் கோரி ஐகோர்ட்கிளை மனு
பெட்ரோல், டீசல் விற்பனையின்போது ரசீதில் ஒன்றிய, மாநில அரசுகளின் வரியை குறிப்பிடக் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
- Oct 07, 2025 14:14 IST
8 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு. சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Oct 07, 2025 13:05 IST
மதுரையில் அ.தி.மு.க, எம்.எம்.ஏ ராஜன் செல்லப்பா கைது
மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Oct 07, 2025 12:51 IST
கோவை - அவிநாசி சாலையில் புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்படும் - ஸ்டாலின் அறிவிப்பு
கோவை - அவிநாசி சாலையில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த பாலம் நாளை மறுநாள் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- Oct 07, 2025 12:45 IST
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மதியம் 2 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று மதியம் 2 மணி வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 07, 2025 11:43 IST
சிறுவனைக் கத்தியால் குத்திய தலைமை காவலர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, ஏரல் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றும் சிவனேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்குச் சென்றபோது தனது பைக்கிற்கு குறுக்கே வேகமாக வந்த சிறுவனுடன் ஏற்பட்ட தகராறு முற்றியதால், அந்தச் சிறுவனைச் சிவனேசன் பாக்கெட் கத்தியால் குத்தியதாகப் புகார் எழுந்தது.
- Oct 07, 2025 11:41 IST
திருச்சியில் அன்பில் மகேஸ் பேட்டி
கல்வி உரிமை சட்டத்தில் இணைய விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து ஆராய்ந்து தேவைப்பட்டால் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
- திருச்சியில் அன்பில் மகேஸ் பேட்டி
- Oct 07, 2025 11:28 IST
பள்ளிக் கல்வித் துறைக்கு பாராட்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டூர் அரசுப் பள்ளிக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு நிதியாக ரூ.10,00,000 வழங்கியதற்காக பள்ளிக் கல்வித் துறைக்கு பாராட்டு விழா நடைபெற்றது; இதில் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
- Oct 07, 2025 11:04 IST
வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம்
நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், டிசம்பர் 7ம் தேதி முதல் காலை 6.05 மணிக்கு பதிலாக காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- Oct 07, 2025 10:30 IST
மகன் தாக்கப்பட்ட விவகாரம்: தாயின் நாடகம் அம்பலம்!
புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி மாணவனை ஆசிரியர் அடித்ததாகக் குற்றம் சாட்டிய தாயே, பள்ளி செல்ல மறுத்த மகனைத் தாக்கியது கல்வித் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிரியருக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும் தாய் கூறியுள்ளார்.
- Oct 07, 2025 10:21 IST
மக்கனா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி பகுதியில் காயங்களுடன் சுற்றி வந்த மக்கனா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கடந்த 10 நாட்களாக யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தது.
- Oct 07, 2025 09:51 IST
சதுரகிரி மலையேறிய பக்தர் திடீரென உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் தென்கரையை சேர்ந்தவர் மகா (வயது 55). இவர் தனது உறவினரான முத்துகிருஷ்ணன் என்பவரோடு நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்ய மலையேறினார். சின்ன பசுக்களை என்ற இடத்தின் அருகே சென்றபோது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மயக்கம் அடைந்த அவர், சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அடிவார பகுதிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடலை டோலி கட்டி கீழே கொண்டு வந்தனர்.
- Oct 07, 2025 09:20 IST
நாகை-இலங்கை இம்மாதம் பயணிகள் கப்பல் சேவை
தீபாவளியை ஒட்டி நாகை - இலங்கை இடையே இம்மாதம் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இருநாட்டு பயணிகளின் கோரிக்கையை ஏற்று இம்மாதம் முழுவதும் கப்பல் இயக்கப்பட உள்ளது.
- Oct 07, 2025 09:20 IST
திருச்செந்தூரில் நேற்று திடீரென உள்வாங்கிய கடல்
பவுர்ணமி தினமான நேற்று திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 60 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
- Oct 07, 2025 09:20 IST
பாம்பனில் மீனவர்கள் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்
டூம்ஸ்டே மீன் பிடிபட்டால் உலகில் எங்காவது பேரழிவு ஏற்படக்கூடும் என்பது ஜப்பானிய மக்களின் ஒருவித நம்பிக்கை ஆகும். ஆனால் இது மூடநம்பிக்கை என்ற கருத்தும் உள்ளது. இந்தநிலையில் பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கி இருக்கும் டூம்ஸ்டே மீன் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகி உள்ளது. ஆனால் இந்த அரிய வகை மீன் மிக குறைந்த விலைக்கே விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
- Oct 07, 2025 09:19 IST
வனத்துறையினரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
கோவை ஆனைக்கட்டி வனத்துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் லஞ்ச பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. பணியில் உள்ள வனக்காப்பாளர் செல்வகுமாரிடமும் விசாரணை நடைபெறுகிறது.
- Oct 07, 2025 09:19 IST
காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை உயிரிழப்பு
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி பகுதியில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கடந்த 10 நாட்களாக யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தது.
- Oct 07, 2025 09:19 IST
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை (புதன்கிழமை) கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.