/indian-express-tamil/media/media_files/2025/09/22/poison-air-2025-09-22-19-39-31.jpg)
விஜய்க்கு பிரமாண்ட மாலை - 4 பேர் மீது வழக்கு: திருவாரூர் பரப்புரையில் விஜய்க்கு ஜேசிபி மூலம் பிரமாண்ட மாலை அணிவித்த நிகழ்வில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தவெக மாவட்ட செயலாளர் மதன், ஜேசிபி உரிமையாளர் ராஜேஷ் மற்றும் மனோ, அன்பு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
- Sep 22, 2025 21:07 IST
பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் கடைகளை அகற்ற உத்தரவு
கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் வணிக நடவடிக்கைகள் எதுவும் இருக்கக் கூடாது, கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள கல் மண்டபத்தில் உள்ள கடைகளால் குப்பைகள் சேர்ந்து, மண்டபம் பராமரிப்பு இல்லாமல் போனதாக வழக்கு தொடரப்பட்டது.
- Sep 22, 2025 20:20 IST
களைகட்டிய ஈஷா கிராமோத்சவ திருவிழா!
ஈஷா கிராமோத்சவ திருவிழாவின் இறுதிப்போட்டியை முன்னிட்டு வண்ண கோலப் போட்டி, சிலம்ப போட்டி, கிராமிய சமையல் போட்டி மற்றும் 20க்கும் மேற்பட்ட வேடிக்கை விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன. கோலப்போட்டியில் 1200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்
- Sep 22, 2025 20:17 IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், அரியலூர், விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடியமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Sep 22, 2025 19:37 IST
திருச்சியில் விஷவாயு தாக்கி 2 தூய்மை பணியாளர்கள் மரணம்
திருச்சி - திருவெறும்பூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கியதில், சாக்கடை கால்வாயில் விழுந்து 2 தூய்மை பணியாளர்கள் மரணமடைந்தனர். இருவரும் ஒருமணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டனர்.
- Sep 22, 2025 18:27 IST
கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தினர் கட்டுப்பாடுகள் விதிப்பதாக கிராம மக்கள் புகார்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக 2 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். எஸ்டேட் வளாகத்தில் உள்ள 2 கிராம மக்கள் சாலைகளை பயன்படுத்த, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எஸ்டேட் நிர்வாகம் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன,
- Sep 22, 2025 16:51 IST
அரசுப் பள்ளிக் கட்டிடங்கள்கூட, தி.மு.க ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை - அண்ணாமலை
திருச்சியில் ரூ.30.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பள்ளி திறப்பதற்கு முன்பே இந்த சம்பவம் நடந்ததால் மாணவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சிறு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் கூட திமுக ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
- Sep 22, 2025 15:42 IST
கூட்டம் குறைவான நாட்களில் மட்டும் பஞ்சலிங்கத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படும் - கோயில் நிர்வாகம் தரப்பு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூட்டம் குறைவான நாட்களில் மட்டும் பஞ்சலிங்கத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படும் என உயர் நீதிமன்றக் கிளையில் கோயில் நிர்வாகம் தரப்பு பதில் அளித்துள்ளது. பதிலை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. குறுகலான பாதைப் பகுதியில் பஞ்சலிங்கம் இருப்பதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதில் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், மூலவர் முருகன், பஞ்சலிங்கத்திற்கு பூஜைகள் செய்வதாக ஐதீகம் உள்ளதால், பஞ்சலிங்கத்திற்கு தினசரி பூஜைகள் செய்யாமல் விளக்கு மற்றும் ஏற்றப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
- Sep 22, 2025 15:02 IST
நெல்லை மாநகருக்குள் கனரக வாகனங்களுக்கு தடை
போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் நெல்லை மாநகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய, ரேஷன் பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு மட்டுமே நெல்லை ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
- Sep 22, 2025 14:28 IST
விஜயின் சுற்றுப்பயணத்தில் மாற்றம்
அக்டோபர் 18யில்தவெகதலைவர்விஜய்மேற்கொள்ளவிருந்தவேலூர்சுற்றுப்பயணத்தில்மாற்றம். அக்டோபர் 4 ஆம்தேதியேவிஜய்வேலூர், ராணிப்பேட்டையில்சுற்றுப்பயணம்செய்யவுள்ளதாகதவெகவினர்மனுஅளித்துள்ளனர். அக்டோபர் 4,5 தேதிகளில்கோவை, நீலகிரி,திருப்பூர், ஈரோட்டில்விஜய்சுற்றுப்பயணம்செய்யதிட்டமிட்டிருந்ததால்அதிலும்மாற்றம்வரக்கூடும்எனசொல்லப்படுகிறது.
- Sep 22, 2025 14:27 IST
நாயால் கீழே விழுந்த இருவர்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் குறுக்கே வந்த தெருநாய் மீது மோதி தடுமாறி இருவர் கீழே விழுந்தனர். பின்னால் வந்து மோதிய காரில் சிக்காமல் நல்வாய்ப்பாக உயிர்த் தப்பினர்.
- Sep 22, 2025 14:23 IST
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்
செப். 25ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வரும் 27ம் தேதி ஒடிசா-ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Sep 22, 2025 14:02 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து அக்.11-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அக்டோபர் 11-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- Sep 22, 2025 14:00 IST
வகுப்பறை மேற்கூரை இடிந்ததால் பதற்றம்; பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆறு மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து, கல்வித்துறை அதிகாரிகளுடன் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பள்ளியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- Sep 22, 2025 13:56 IST
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (செப்.22) தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- Sep 22, 2025 11:55 IST
மோசடி செய்யப்பட்ட பணத்தில் சாமிநாதன் நடிகைகளுடன் உல்லாசம்
ரூ.1000 கோடி இரிடியம் மோசடி வழக்கில் முக்கிய நபரான சாமிநாதன் மதுரையில் கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி செய்யப்பட்ட பணத்தில் சாமிநாதன் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தது அம்பலமாகியுள்ளது. மேலும், மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து மேலும் தீவிரமாக விசாரிக்க, சாமிநாதனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- Sep 22, 2025 11:07 IST
ஜீப் கவிழ்ந்து விபத்து: ஜோஜு ஜார்ஜ் உள்பட் 6 பேர் காயம்
இடுக்கி: மூணாறில், ஷாஜி கைலாஸின் "வரவு" திரைப்பட படப்பிடிப்பில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஜீப்பை ஓட்டிய ஜோஜு ஜார்ஜ், சக நடிகர் தீபக் பரம்போல் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மூணாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- Sep 22, 2025 10:48 IST
போதை மாத்திரைகள் பறிமுதல்
அரக்கோணம் ரயில் நிலையத்தில் மும்பையிலிருந்து ரயில் மூலமாக போதை மாத்திரைகளை கடத்தி வந்த மும்பையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த சுமார் ₹1 கோடி மதிப்பிலான30,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- Sep 22, 2025 10:32 IST
கனரக சரக்கு வாகனங்கள் வர இன்று முதல் தடை
திருநெல்வேலி மாநகர பகுதிக்குள் கனரக சரக்கு வாகனங்கள் வர இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லைக்கு சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் புறநகரில் பழைய பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன சரக்கு முனையத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஆட்சியர் சுகுமார் உத்தரவு
- Sep 22, 2025 09:41 IST
தெருநாய் கடித்து 20 நாட்களுக்கு பின் குழந்தை பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகே, தெருநாய் கடித்ததால் 3 வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்குழந்தை, சத்யாம், செப்டம்பர் 1-ஆம் தேதி தெருநாய் கடித்ததால் காயமடைந்தது. மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று மாலை மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
- Sep 22, 2025 09:40 IST
ஓசூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - 5 பேர் கைது
ஓசூரில் தனியார் காப்பகத்தில் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 5 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த காப்பக உரிமையாளர் உள்பட 5 பேர் கைதாகினர். காப்பக உரிமையாளரும் பள்ளி தாளாருமான சாம் கணேஷ், அவரது மனைவி ஜேஸ்பின்(61) உள்ளிட்டோர் கைதாகினர்.
- Sep 22, 2025 09:39 IST
திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு தீவிரம்
ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், புதிய டிசைன்களில் ஆண்டுதோறும் அறிமுகம் செய்யப்படுகின்றன. திருப்பூரை பொறுத்தவரை தீபாவளி ஆர்டர் என்பது மிக முக்கியம். உள்நாட்டு ஆடை வர்த்தகத்தில் ஆண்டு முழுவதும் நடக்கும் ரூ.30 ஆயிரம் கோடியில், ரூ.12 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகம், தீபாவளி பண்டிகைகால ஆர்டர்களாக இருக்கிறது.
- Sep 22, 2025 09:20 IST
10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 22, 2025 09:20 IST
திருச்செந்தூரில் நேற்று திடீரென உள்வாங்கிய கடல்
அமாவாசை தினமான நேற்று திருச்செந்தூரில் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும், ஆபத்தை உணராமல் பாறைகள் மேல் நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
- Sep 22, 2025 09:19 IST
குலசை கோயில் தசரா திருவிழா: நாளை தொடக்கம்
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 7 மணிக்கு வில்லிசை நடக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.